Tamil Daily Rasi Palan 26th March 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  26.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்   26.03.2017, பங்குனி – 13, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பகல் 12.29 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி, சதயம் நட்சத்திரம் மாலை 04.28 வரை பின்பு பூரட்டாதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, மாத சிவராத்திரி சிவ வழிபாடு உத்தமம், சுபமுகூர்த்த நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
சூரிய புதன்சுக்கி(வ) செவ்
கேது  சந்தி திருக்கணித கிரக நிலை26.03.2017    
ராகு
சனி குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 26.03.2017

aries-single-iconமேஷம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
cancer-single-iconகடகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். எதிலும் கவனம் தேவை.
leo-single-iconசிம்மம் இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல்நிலை சீராகும்.  குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
virgo-single-iconகன்னி இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனை தீரும்.
libra-single-iconதுலாம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். புதிய பொருள் வாங்குவீர்.
capricorn-single-iconமகரம் இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். நண்பர்களால் மனநிம்மதி குறையும். திருமண முயற்சிகளில் தடைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
aquarius-single-iconகும்பம் இன்று எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். பெண்கள் வீட்டு தேவைகளை பூர்த்தி செயல்படுவார்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
pisces-single-iconமீனம் இன்று குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.