Tamil Daily Rasi Palan 30th March 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  30.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்   30.03.2017, பங்குனி – 17, வியாழக்கிழமை, திரிதியை திதி இரவு 11.43 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தி, அஸ்வினி நட்சத்திரம் காலை 09.24 வரை பின்பு பரணி, அமிர்தயோகம் காலை 09.24 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள், சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
சூரிய சுக்கி(வ) செவ் சந்தி புதன்
கேது திருக்கணித கிரக நிலை30.03.2017  
ராகு
சனி   குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 30.03.2017

aries-single-iconமேஷம் இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். வருமானம் பெருகும்.
taurus-single-iconரிஷபம் இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். வேலையில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
gemini-single-iconமிதுனம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிகாட்ட நல்ல வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.
cancer-single-iconகடகம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் கிட்டும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் ஏற்படும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் பிரச்சனைகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
virgo-single-iconகன்னி இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை.  வியாபாரத்தில் பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
libra-single-iconதுலாம் இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வீட்டில் பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். ஒருசிலர் பொன்பொருள் வாங்கி மகிழ்வர்கள். உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். புதிய பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தினருக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் மனகசப்பு உண்டாகும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களின் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். குடும்பத்தில் பிள்ளைகள் பாசமுடன் இருப்பார்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து சந்தோஷம் கூடும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவர். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
aquarius-single-iconகும்பம் இன்று வீட்டில் சுபசெலவுகள் ஏற்படும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வருமானம் இரட்டிப்பாகும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கடன் பிரச்சனை தீரும்.