Tamil Daily Rasi Palan 4th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  04.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 04-06-2017, வைகாசி -21, ஞாயிற்றுக்கிழமை, தசமி திதி காலை 08.03 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. அஸ்தம் நட்சத்திரம் பகல் 03.24 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். வாஸ்து நாள் காலை 09.51 மணிக்கு மேல் 10.27 மணிக்குள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை04.06.2017  
ராகு
சனி(வ)   குரு (வ)சந்தி
 

இன்றைய ராசிப்பலன் – 04.06.2017

aries-single-iconமேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுப முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று வீட்டில் மகிழ்ச்சி குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டாகும்.
leo-single-iconசிம்மம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
virgo-single-iconகன்னி இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் ஏற்படும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
libra-single-iconதுலாம் இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்கள் வருகையால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வருமானம் பெருகும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
capricorn-single-iconமகரம் இன்று உங்கள் பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடும். பெரியோர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவு உண்டாகும். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சி நிலவும்.