Tamil Daily Rasi Palan 5th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  05.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 05-06-2017, வைகாசி -22, திங்கட்கிழமை, ஏகாதசி திதி காலை 09.43 வரை பின்பு வளர்பிறை துவாதசி. சித்திரை நட்சத்திரம் மாலை 05.47 வரை பின்பு சுவாதி. பிரபலாரிஷ்டயோகம் மாலை 05.47 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை05.06.2017  
ராகு
சனி(வ)   சந்தி குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 05.06.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். பணவரவு தாரளமாக இருக்கும். சேமிப்பு உயரும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். வருமானம் பெருகும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதால் லாபம் அதிகமாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கடன்கள் குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக அமையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். வெளிவட்டார நட்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
virgo-single-iconகன்னி இன்று வெளியூர் பயணங்களில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகலாம். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பணப்பிரச்சனை குறையும்.
libra-single-iconதுலாம் இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருந்த போட்டிகள் விலகும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன்கள் தீரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெற்றோருடன் மனஸ்தாபம் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்தால் ஒற்றுமையாக இருக்கலாம். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகள் குறையும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை கூடும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை தரும்.
capricorn-single-iconமகரம் இன்று பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகஸ்தர்களுக்கு பணி சுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகலாம். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையக்கூடும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
pisces-single-iconமீனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். செய்யும் செயல்களில் இடையூறுகள் ஏற்பட்டு மனகுழப்பத்துடன் இருப்பீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.