Tamil Daily Rasi Palan 5th May 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  05.05.2017

இன்றைய  பஞ்சாங்கம் 05-05-2017, சித்திரை-22, வெள்ளிக்கிழமை, தசமி திதி இரவு 07.44 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி. நாள் முழுவதும் பூரம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  
சுக்கி சூரியபுதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை05.05.2017  
சந்திராகு
சனி(வ) குரு  (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 05.05.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும்.
taurus-single-iconரிஷபம் இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
gemini-single-iconமிதுனம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
leo-single-iconசிம்மம் இன்று வியாபார ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உத்தியோக சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.
virgo-single-iconகன்னி இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை தீரும்.
libra-single-iconதுலாம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். பணப்பிரச்சனைகள் குறையும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றி மன அமைதி குறையக்கூடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
capricorn-single-iconமகரம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். சுபகாரியங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை.
aquarius-single-iconகும்பம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். லாபம் பெருகும். புதிய பொருள் வீடு வந்து சேரும். சேமிப்பு உயரும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து மகிழ்ச்சி கூடும்.