இராவணன் தூதர் சொல்லைக் கேட்டு வருந்துதல் 8535. சொன்னார் அவர்; சொல் செவியில் தொடர்வோன் இன்னாத மனத்தின் இலங்கையர் கோன் வெம் நாக உயிர்ப்பினன் விம்மினனால்; அன்னான் நிலை கண்டு அயல்நின்று அறைவான் : 103 மகரக் கண்ணன் போர்க்குச் செல்ல விடையளிக்குமாறு இராவணனை வேண்டுதல் (8536-8538) 8536. ‘முந்தே என தாதையை மொய் அமர்வாய் அந்தோ! உயிர் உண்டவன் ஆருயிர்மேல் உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ? எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ? 104 8537. ‘யானே செல எண்ணுவன் எய்த அவன் தான் நேர்வது தீது எனவே தணிவேன்; வானே நிலனே முதல் மற்றும் எலாம் கோனே எனை வெல்வது ஒர் கொள்கையதோ? 105 8538. ‘அருந்துயர்க் கடல் உளான் என் அம்மனை, அழுத கண்ணள், பெருந்திருக் கழித்தல் ஆற்றாள், “கணவனைக் கொன்று பேர்ந்தோன் கருந்தலைக் கலத்தின் அல்லால், கடனது கழியேன் ‘‘ என்றாள்; பருந்தினுக்கு இனிய வேலாய்! இன்னருள் பணித்தி ‘என்றான். 106 மகரக் கண்ணன் இராவணனிடம் விடைபெற்றுப் போருக்குச் செல்லுதல் (8539-8540) 8539. அவ் மகரக் கண்ணன் அறைதலும், அரக்கன், ‘ஐய! செவ்விது; சேறி! சென்று, உன் பழம் பகை தீர்த்தி! ‘என்றான் வெவ்வழி அவனும், பெற்ற விடையினன் தேர்மேற் கொண்டான். வவ்விய வில்லன் போனான், வரம் பெற்று வளர்ந்த தோளான். 107 8540. தன்னுடைச் சேனை கோடி ஐந்து உடன் தழுவ, தானை மன்னுடைச் சேனை வெள்ளம் ஓர் ஐந்து மழையின் பொங்கிப் பின்னுடைத்தாக, பேரி கடல்பட பெயர்ந்த தூளி பொன் உடைச் சியைத்து உச்சிக்கு உச்சியும் புதைய, போனான். 108 சோணிதக் கண்ணன் முதலியோர் இராவணன் ஏவலால் மகரக் கண்ணனுடன் செல்லுதல் 8541. ‘சோணிதக் கண்ணனோடு சிங்கனும், துரகத் திண்தேர்த் தாள்முதல் காவல் பூண்டு செல்க‘ என, ‘தக்கது ‘என்னா ஆள்முதல் தானையோடும் அனைவரும் தொடரப் போனான், நாள்முதல் திங்கள் தன்னைத் தழுவிய அனைய நண்பான். 109 அரக்கர் சேனை செல்லும் திறம் (8542-8543) 8542. பல்பெரும் பதாகைப் பத்தி மீமிசைத் தொடுத்த பந்தர், எல்லவன் சுடர் ஒண் கற்றை முற்ற, இன்நிழலை ஈய, தொல் சின யானை அம்கை விலாழி நீர்த் துவலை தூற்ற, செல் பெருங் கவியின் சேனை அமர்த் தொழில் சிரமம் தீர்ந்த 110 8543. ‘முழங்கின யானை; வாசி ஒலித்தன; முரசின் பண்ணை தழங்கின; வயவர் ஆர்த்தார் ‘ என்பதோர் முறைமை தள்ள, வழங்கின, பதலை ஓதை, அண்டத்தின் வரம்பின் காறும்; புழுங்கின உயிர்கள், யாண்டும் கால்புகப் புரை இன்றாக 111 அரக்கர்க்கும் வானரர்க்கும் போர் நிகழ்தல் (8544-8546) 8544. வெய்தினின் உற்ற தானை முறைவிடா நூழில் வெம் போர் செய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர் தலைவர்; சேர்த்த கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும் எய்தன எறிந்த; யானை ஈர்த்தன கோத்த சோரி. 112 8545. வானர வீரர் விட்ட மலைகளை அரக்கர் வவ்வி, மீனொடு மேகம் சிந்த விசைத்தனர் மீட்டும் வீச, கானகம் இடியுண்டு என்னக் கவிக்குலம் மடியும் கவ்வி, போனகம் நுகரும் பேய்கள் வாய்ப் புறம் புடைப்போடு ஆர்ப்ப 113 8546. மைந் நிற அரக்கர் வன்கை வயிர வாள் வலியின் வாங்கி, மெய்ந் நிறத்து எறிந்து கொல்வர், வானர வீரர்; வீரர் கை நிறைத்து எடுத்த கல்லும் மரனும் தம் கரத்தின் வாங்கி, மொய்ந்நிறத்து எறிவர், எற்றி முருக்குவர்; அரக்கர் முன்பர். 114 மகரக் கண்ணன் இராமன் மேற்சேறல் 8547. வண்டு உலாம் அலங்கல் மார்பன் மகரக்கண் மழை ஏறு என்ன, திண்திறல் அரக்கன் கொற்றப் பொன் தடஞ் சில்லித் தேரை, தண்டலை மருத வைப்பின் கங்கை நீர் தழுவும் நாட்டுக் கொண்டல்மேல் ஓட்டிச் சென்றான்; குரங்கு இனப் படையைக் கொன்றான 115 மகரக் கண்ணன் இராமனை நோக்கிக் கூறுதல் (8548-8549) 8548. ‘இந்திரன் பகைஞனே கொல்? ‘ என்பது ஓர் அச்சம் எய்தித் தந்திரம் இரிந்து சிந்த, படைப் பெருந் தலைவர், தாக்கி எந்திரம் எறிந்த என்ன, ஏவுண்டு புரண்டார்; எய்தி, சுந்தரத் தோளினானை நோக்கி நின்று, இனைய சொன்னான். 116 8549. “என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய் “ என்று முன் உடைத்தாய தீய முழுப்பகை மூவர்க்கு இன்றி, நினுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென் ‘என்றான் பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம்பொன் தாரான் 117 இராமன், மகரக்கண்ணன் கூறியது தக்கது எனல் 8550. தீயவன் பகர்ந்த மாற்றம் சேவகன் தரெியக் கேட்டான் ‘நீய் கரன் புதல்வன் கொல்லோ? நெடும்பகை நிமிர வந்தாய்; ஆயது கடனே அன்றோ ஆண் பிறந்து அமைந்தார்க்கு? ஐய! ஏயது சொன்னாய் ‘என்றான், இசையினுக்கு இசைந்த தோளான் 118 மகரக்கண்ணனுக்கும் இராமனுக்கும் போர் நிகழ்தல் (8551-8555) 8551. உரும் இடித்து என்ன வில் நாண் ஒலி படுத்து, ‘உன்னோடு எந்தை செருமுடித்து, என்கண் நின்ற சினம் முடித்து அமைவென் ‘என்னா, கருமுடித்து அமைந்த மேகம், கால் முடித்து எழுந்த காலம், பெருமுடிக் கிரியில் பெய்யும் தாரை போல், பகழி பெய்தான். 119 8552. அம்புயக் கண்ணன் கண்டத்து ஆயிரம் பகழி நாட்டி, தம்பிதன் கவச மீதே இரட்டிச் சாயகங்கள் தாக்கி வெம்பு இகல் அனுமன் மீதே வெங்கணை மாரி வித்தி உம்பர் தம் உலகம் முற்றும் சரங்களாய் மூடி உய்த்தான். 120 8553. சொரிந்தன பகழி எல்லாம் சுடர்க் கடுங் கணைகள் தூவி, அரிந்தனன் அகற்றி, மற்று அ(வ்) ஆண்தகை அலங்கல் ஆகத்து, எரிந்து ஒரு பகழி பாய எய்தனன், இராமன்; ஏவ, நெரிந்து எழு புருவத்தான் தன் நிறத்து உற்று நின்றது அன்றே. 121 8554. ஏ உண்டு துளக்கம் எய்தா, இரத்தகப் பரிதி ஈன்ற பூவுண்ட கண்ணன், வாயின் புகை உண்டது உமிழ்வான் போல்வான் தேவுண்ட கீர்த்தி அண்ணல் திரு உண்ட கவசம் சேர, தூவுண்ட வயிர வாளி ஆயிரம் தூவி ஆர்த்தான். 122 8555. அன்னது கண்ட வானோர் அதிசயம் உற்றார்; ஆழி மன்னனும், முறுவல் எய்தி, வாய் அம்பு ஓர் ஆறு வாங்கி, பொன் நெடுந் தடந்தேர் பூண்ட புரவியின் குரங்கள் போக்கி, வில் நடு அறுத்து, பாகன் தலையையும் நிலத்து வீழ்த்தான். 123 மகரக் கண்ணன் வானில் சென்று இடி, காற்று, நெருப்பு ஆகியவற்றை உண்டாகுதல் 8556. மார்பிடை நின்ற வாளி வாயிடை வெயிலின் வாரும் சோரியன், விசும்பினூடு ஓர் இமைப்பு இடை தோன்றா நின்றான், கார் உரும் ஏறும், காற்றும், கனலியும், கடைநாள் வையம் பேர்வுறு காலம் என்ன, பெருக்கினன், தவத்தின் பெற்றான். 124 8557. உரும் முறை அநந்த கோடி உதிர்ந்தன; ஊழி நாளின் இரு முறை காற்றுச் சீறி எழுந்தது; விழுந்த எங்கும் கரு முறை நிறைந்த மேகம் கான்றன கல்லின் மாரி; பொரு முறை மயங்கி, சுற்றும் இரியலின் கவிகள் போன. 23 கண்ணணனுக்கு காற்று முதலியவற்றை உண்டாக்கும் வல்லமை எதனால் உண்டாயிற்று என்று இராமன் வீடணனைக் கேட்க, அவன் கூறுதல் (8558-8559) 8558. போயின திசைகள் எங்கும் புகையொடு நெருப்புப் போர்ப்ப, தீ இனம் அமையச் செல்லும் மாயமா மாரி சிந்த, ஆயிர கோடி மேலும் அவிந்தன கவிகள்; ஐயன், ‘மாயமோ? வரமோ? ‘என்றான்; வீடணன் வணங்கிச் சொல்வான் 24 8559. ‘நோற்றுடைத் தவத்தின் நோன்மை நோக்கினர், கருணை நோக்கி, காற்றுடைச் செல்வன் தானும், மழையுடைக் கடவுள் தானும், மாற்றலர், ஈந்த தயெ்வ வரத்தினால் வந்தது ‘என்றான்; நூற்று இதழ்க் கமலக் கண்ணன், ‘அகற்றுவென் நொடியின் ‘என்றான். 25 மகரக் கண்ணன் தவ வலிமையால் செய்த போர் அழிதல் 8560. காலவன் படையும், தயெ்வக் கடலவன் படையும், காலக் கோல வன் சிலையில் கோத்து, கொடுங் கணையோடும் கூட்டி, மேலவன் துரத்தலோடும், விசும்பின் நின்று எரிந்து, வெய்தின் மால் இருங் கடலின் வீழ்ந்து மறைந்தன மழையும் காற்றும். 26 மகரக் கண்ணனது மாயப் போர் 8561. அத் துணை, அரக்கன் நோக்கி, அந்தர வானம் எல்லாம் ஒத்தன உருவே ஆக்கி, தான் மறைந்து ஒளித்து, சூலப் பத்திகள் கோடி கோடி பரப்பினன்; அதனைப் பார்த்த வித்தகன், ‘ஒருவன் செய்த வினையம் ‘! என்று இனைய சொன்னான்; 27 இராமன் மனம் வருந்துதல் 8562. ‘மாயத்தால் வகுத்தான் யாண்டும் வரம்பிலா உருவம்; தான் எத் தேயத்தான் என்னா வண்ணம் கரந்தனன்; தரெிந்திலாதான், காயத்தால் இனையன் என்று நினையலாம் கருத்தன் அல்லன்; தீ ஒத்தான் திறத்தின் என்னை செயல்? ‘எனச் சிந்தை நொந்தான். 28 மகரக் கண்ணன் மடிதல் 8563. அம்பின்வாய் ஆறு சோரும் அரக்கன் தன் அருள் இல் யாக்கை உம்பரில் பரப்பி, தான் வேறு ஒளித்தனன், என்ன ஓர் வான், செம்புனல் சுவடு நோக்கி “இது நெறி ‘என்று தேவர் தம்பிரான் பகழி தூண்ட, தலை அற்றுத் தலத்தன் ஆனான் 29 அரக்கன் மாய, மாயையும் அகலுதல் 8564. அயில்படைத்து உருமின் செல்லும் அம்பொடும், அரக்கன் யாக்கை, புயல்படக் குருதி வீசி, படியிடைப் புரள்தலோடும் வெயில் கெடுத்து இருளை ஓட்டும் காலத்தின் விளைவினோடும் துயில் கெடக் கனவு மாய்ந்தால் ஒத்தது சூழ்ந்த மாயை. 30 நளன் குருதிக் கண்ணனோடு பொருது அவனை மாய்த்தல் (8565-8568) 8565. குருதியின் கண்ணன், வண்ணக் கொடி நெடுந் தேரன், கோடைப் பருதியின் நடுவண் தோன்றும் பசுஞ்சுடர் மேகப் பண்பன், எரிகணை சிந்தி, காலின் எய்தினான் தன்னோடு ஏற்றான் விரிகடல் தட்டான், கொல்லன், வெஞ்சினத் தச்சன், வெய்யோன். 31 8566. அன்று, அவன் நாம வில் நாண் அலங்கல் தோள் இலங்க வாங்கி ஒன்று அல பகழி மாரி, ஊழித் தீ என்ன உய்த்தான் நின்றவன், நெடியது ஆங்கோர் தருவினால் அகல நீக்கி, சென்றனன் கரியின் வாரிக்கு எதிர் படர் சீயம் அன்னான். 32 8567. கரத்தினில் திரியா நின்ற மரத்தினைக் கண்டமாகச் சரத்தினின் துணித்து வீழ்த்த தறுகணான் தன்னை நோக்கி, உரத்தினைச் சுருக்கிப் பாரின் ஒடுங்கினான், தன்னை ஒப்பான் சிரத்தினில் குதித்தான்; தேவர் திசைமுகம் கிழிய ஆர்த்தார். 33 8568. எரியும் வெங் குன்றின் உம்பர், இந்திர வில் இட்டு என்ன, பெரியவன் தலைமேல் நின்ற பேர் எழிலாளன், சோரி சொரிய, வன்கண்ணின் மூக்கின் செவிகளின் மூளை தூங்க, நெரிய, வன் தலையைக் காலால் உதைத்து, மாநிலத்தில் இட்டான். 34 சிங்கனைப் பனசன் கொல்லுதல் (8569-8571) 8569. அங்கு அவன் உலத்தலோடும், அழல் கொழுந்து ஒழுகும் கண்ணான், சிங்கன், வெங்கணையன், வில்லன், தாரணி தேரின் மேலான் ‘எங்கு அடா போதி? ‘என்னா, எய்தினன்; எதிர் இலாத பங்கம் இல் மேரு ஆற்றல், பனசன்வந்து, இடையில் பாய்ந்தான். 35 8570. பாய்ந்தவன் தோளில், மார்பில், பல்லங்கள் நல்ல பண்போடு ஆய்ந்தன, அசனி போல, ஐ இரண்டு அழுந்த எய்தான்; காய்ந்தனன், கனலி நெய்யால் கனன்றது போலக் காந்தி; ஏய்ந்து எழு தேரினோடும், இமைப்பிடை எடுத்துக் கொண்டான். 36 8571. தேரொடும் எடுத்தலோடு, நிலத்திடைக் குதித்த செங்கண் மேருவின் தோற்றத்தான் தன் உச்சிமேல் அதனை வீச, பார் இடை விழுதலோடும், தானவன் உம்பர் பாய, சோரியும் உயிரும் சோர, துகைத்தனன் வயிரத் தோளான். 37 போர்ச் செய்தியை இராவணனுக்கு க்கத் தூதர் செல்லுதல 8572. தராதல வேந்தன் மைந்தர் சரத்தினும், கவியின் தானை மராமரம், மலை, என்று இன்ன வழங்கவும், வளைந்த தானை, பராவ அரும் வெள்ளம் பத்தும் பட்டன பட்டிலாதார் இராவணன் தூதர் போனார் படைக்கலம் எடுத்திலாதார். 38  

Previous          Next