இலங்கை எய்திய இராவணன் வெற்றி பெற்றதனால் மகிழ்ந்திருத்தல் 9757. அலக்கண் எய்தி அமரர் அழிந்திட உலக்க வானர வீரரை ஓட்டி அவ் இலக்குவன்தனை வீட்டி இராவணன் துலக்கம் எய்தினன் தோம் இல் களிப்பினே. 1 போரில் வருந்தினர்க்கு விருந்து அமைக்க இராவணன் விரும்புதல் 9758. பொருந்து பொன்பெருங் கோயிலுள் போர்த்தொழில் வருந்தினர்க்கு தம் அன்பினின் வந்தவர்க்கு அருந்துதற்கு அமைவு ஆயின ஆக்குவான் விருந்து அமைக்க மிகுகின்ற வேட்கையான். 2 9759. வான நாட்டை வருக என வல்விரைந்து ஏனை நாட்டவரோடும் வந்து எய்தினார்; ‘ஆன நாட்டு அரும் போகம் அமைத்திர்; மற்று ஊனம் நாட்டின் இழத்திர் உயிர் ‘என்றான். 3 போகப் பொருள்கள் வந்து சேர்தல் 9760. நறவும் ஊனும் நவை அற நல்லன பிறவும் ஆடையும் சாந்தமும் பெய்ம் மலர்த் திறமும் நானப் புனலொடு சேக்கையும் புறமும் உள்ளும் நிறையப் புகுந்தவால். 4 போகப் பொருள்களை அமைக்க வான் அரமகளிர் வருதல் 9761. நான நெய் நன்கு த்து நறும்புனல் ஆன கோது அற ஆட்டி அமுது ஒடு பானம் ஊட்டி சயனம் பரப்புவான் வான நாட்டியர் யாவரும் வந்தனர். 5 அரக்கரின் நுகர்ச்சி (9761-9762) 9762. பாடுவார்கள்; பயில்நடம் பாவகத்து ஆடுவார்கள்; அமளியில் இன்புறக் கூடுவார்முதல் யாரும் குறைவு அறத் தேடினார் என பண்ணையில் சேர்ந்தனர். 6 9763. அரைசர் ஆதி அடியவர் அந்தமா வரைசெய் மேனி இராக்கதர் வந்துளார் விரைவின் இந்திர போகம் விளைதரக் கரையிலாத பெருவளம் கண்ணினார். 7 தூதுவர் வந்து வணங்குதல் 9764. இன்ன தன்மை அமைந்த இராக்கதர் மன்னன் மாடு வந்து எய்தி வணங்கினார் அன்ன சேனை களப்பட்ட ஆறு எலாம் துன்னு தூதர் செவியிடைச் சொல்லுவார். 8 தூதுவரின் அச்ச நிலை 9765. நடுங்குகின்ற உடலினர் நா உலர்ந்து ஒடுங்குகின்ற உயிர்ப்பினர் உள் அழிந்து இடுங்குகின்ற விழியினர் ஏங்கினார் பிடுங்குகின்ற மொழியினர் பேசுவார். 9 தூதர் சொன்னது (9765-9766) 9766. ‘இன்று யார் விருந்து இங்கு உண்பார்? இகல் முகத்து இமையோர் தந்த வென்றியாய்! ஏவச் சென்ற ஆயிர வெள்ளச்சேனை நின்றது புறத்தது ஆக, இராமன்கை நிமிர்ந்த சாபம் ஒன்றினால் இரண்டு, மூன்று கடிகையில் உலர்ந்தது ‘என்றார். 10 9767. ‘வலிக்கடன் வான் உேளாரைக் கொண்டு, நீவகுத்த போகம், “கலிக்கடன் அளிப்பல் “ என்று நிருதர்க்குக் கருதினாயேல், பலிக்கடன் அளிக்கற்பாலை அல்லது, உன்குலத்தின் பாலோர் ஒலிக்கடல் உலகத்து இல்லை; ஊர் உளார் உளமே உள்ளார். 11 இராவணன் திகைத்தல் 9768. ஈட்டரும் உவகை ஈட்டி இருந்தவன், இசைத்த மாற்றம் கேட்டலும், வெகுளியோடு துணுக்கமும் இழிவும் கிட்டி ஊட்டு அரக்கு அனைய செங்கண் நெருப்பு உக, உயிர்ப்பு வீங்க தீட்டிய படிவம் என்னத் தோன்றினன், திகைத்த நெஞ்சன். 12 இராவணன் தூதுவர் சொல்லை ஐயுறுதல் 9769. என்னினும் வலியர் ஆன இராக்கதர் யாண்டும் வீயார் உன்னினும் உலப்பு இலாதார்; உவரியின் மணலின் மிக்கார்; “பின் ஒரு பெயரும் இன்றி மாண்டனர் “ என்று பேசும் இந்நிலை பொய்ம்மை; மெய்ம்மை விளம்புவீர் விரைவின் என்றான்! 13 மாலியவான், தூதர் பொய்யுரையார் எனல் 9770. கேட்டு அயல் இருந்த மாலி, ஈது ஒரு கிழமைத்து ஆமோ? ஓட்டு உறு தூதர் பொய்யே ப்பரோ? உலகம் யாவும் வீட்டுவது இமைப்பின் அன்றே, வீங்கு எரி? விரித்த எல்லாம் மாட்டுவன் ஒருவன் அன்றே, இறுதியில் மனத்தால்? ‘என்றான் 14 மாலியவான் மேலும் கூறுதல் (9770-9772) 9771. “அளப்ப அரும் உலகம் யாவும் அமைத்துக் காத்து அழிக்கின்றான்தன் உளப் பெரும் தகைமை தன்னால் ஒருவன் ‘‘ என்று உண்மை வேதம் கிளப்பது கேட்டும் அன்றே? அரவின்மேல் கிடந்து, மேல்நாள், முளைத்த போர் இராமன் ‘‘ என்று வீடணன் மொழி பொய்த்து ஆமோ? 15 9772. ‘ஒன்று இடில் அதனை உண்ணும் உலகத்தின் உயிர்க்கு ஒன்றாத நின்றன எல்லாம் பெய்தால், உடன் நுங்கும் நெருப்பும் காண்டும்; குன்றொடு மரமும், புல்லும். பல்லுயிர்க் குழுவுங் கொல்லும் வன் திறல் காற்றும் காண்டும்; வலிக்கு ஒரு வரம்பும் உண்டோ? 16 9773. ‘பட்டதும் உண்டே உன்னை, இந்திரச் செல்வம் பற்று விட்டதும் மெய்ம்மை; ஐய! மீட்டு ஒரு வினையும் இல்லை; கெட்டது, உன் பொருட்டினாலே, நின்னுடைக் கேளிர் எல்லாம்; சிட்டது செய்தி ‘என்றான்; அதற்கு அவன் சீற்றம் செய்தான். 17 மாலியவானுக்கு இராவணன் மறுமொழி 9774. ‘இலக்குவன் தன்னை வேலால் எறிந்து, உயிர் கூற்றுக்கு ஈந்தேன்; அலக்கண் இல் தலைவர் எல்லாம் அழுந்தினர் அதனைக் கண்டால், உலக்குமால் இராமன்; பின்னர் உயிர்ப்பொறை உகவான்; உற்ற மலக்கம் உண்டாகின் ஆக; வாகை என் வயத்தது என்றான். 18 இலக்குவன் உயிர் பெற்றதைத் தூதுவர் உணர்த்துதல் 9775. ஆண்டு அது கேட்டு நின்ற தூதுவர், ‘ஐய! மெய்யே மீண்டது, அவ் இளவல் ஆவி, மாருதி மருந்து மெய்யில் தீண்டவும் தாழ்த்தது இல்லை; யாரும் அச் செங்கணானைப் பூண்டனர் தழுவிப் புக்கார் காணுதி போதி ‘என்றார். 19 இராவணன் கோபுரத்தில் ஏறிப் போர்க்களத்தைக் காணுதல் 9776. தேறிலன் ஆதலானே, மறுகுறு சிந்தை தேற, ஏறினன், கனகத்து ஆன கோபுரத்து உம்பர் எய்தி, ஊறின சேனை வெள்ளம் உலந்தபேர் உண்மை எல்லாம், காறின உள்ளம் நோவ, கண்களால் தரெியக் கண்டான். 20 தலையொடு முடியும் அரக்கியரின் அழுகை ஒலியை இராவணன் கேட்டல் 9777. கொய்தலைப் பூசற் பட்டோர் குலத்தியர் குவளையோடு நெய்தலை வென்றவாள் கண் குமுதத்தின் நீர்மை காட்ட கய்தலை உற்ற பூசல்; கடல் எலாம் நிமிருங் காலைச் செய்தலை உற்ற ஓசைச் செயலது செவியில் கேட்டான். 21 9778. எண்ணுநீர் கடந்த யானைப் பெரும்பிணம் ஏந்தி, யாணர் மண்ணின்நீர் அளவும் கல்லி, நெடுமலை மறித்து, மண்டும் புண்ணின்நீர் ஆறும், பல்பேய்ப் புதுப் புனல் ஆடும் பொம்மல், கண்ணின்நீர் ஆறும் மாறாக் கருங்கடல் மழுப்பக் கண்டான். 22 9779. ‘முற்று இயல் சிலை வலாளன் மொய் கணை துமிப்ப, ஆவி பெற்று இயல் பெற்றி பெற்றாம் ‘ என்ன வாள் அரக்கர் யாக்கை, சிறு இயல் குறுங்கால் ஓரிக் குரல் கொளை இசையா, பல்பேய் கற்று இயல் பாணி கொட்டக், களிநடம் பயிலக் கண்டான். 23 9780. குமிழி நீரோடும், சோரி, கனலொடும், கொழிக்கும் கண்ணான், தமிழ் நெறி வழக்கம் அன்ன தனிச்சிலை வழக்கிற் சாய்ந்தார். அமிழ்பெருங் குருதி வெள்ளம் ஆற்று வாய் முகத்தில் தேக்கி, உமிழ்வதே ஒக்கும் வேலை ஓதம் வந்து உடற்றக் கண்டான். 24 9781. விண்களில் சென்ற வன்தோள் கணவரை, அலகை வெய்ய புண்களில் கைகள் நீட்டி, புதுநிணம் கவர்வ நோக்கி, மண்களில் தொடர்ந்து, வானில் பிடித்து, வள் உகிரின் மானக் கண்களைச் சூன்று நீக்கும் அரக்கியர் குழாமும் கண்டான். 25 இராவணன் கோபுரத்திலிருந்து இறங்குதல் 9782. விண் பிளந்து ஒல்க ஆர்க்கும் வானரர் வீக்கம் கண்டான்; மண் பிளந்து அழுந்த ஆடும் கவந்தத்தின் வருக்கம் கண்டான்; கண் பிளந்து அகல நோக்கும் வானவர் களிப்பும் கண்டான் புண் பிளந்தனைய நெஞ்சன் கோபுரத்து இழிந்து போந்தான். 26 இராவணன் சினக் குறிப்புடன் அரசவை அடைதல் 9783. நகை பிறக்கின்ற வாயன் நாக்கொடு கடைவாய் நக்கப் புகை பிறக்கின்ற மூக்கன், பொறி பிறக்கின்ற கண்ணன், மிகை பிறக்கின்ற நெஞ்சன் வெஞ்சினத் தீமேல் வீங்கி சிகை பிறக்கின்ற சொல்லன், அரசியல் இருக்கை சேர்ந்தான். 27 எஞ்சியுள்ள சேனையைத் திரண்டு எழுமாறு முரசு அறையச் செய்க ‘என இராவணன் மகோதரனை நோக்கிக் கூறுதல் 9784. பூதரம் அனைய மேனி, புகைநிறப் புருவச் செங்கண் மோதரன் என்னும் நாமத்து ஒருவனை முறையின் நோக்கி, “ஏது உளது இறந்திலாதது இலங்கையுள் இருந்த சேனை யாதையும் எழுக! ‘என்று ஆனை மணிமுரசு எற்றுக! ‘‘ என்றான். 1  

Previous          Next