9846. ஆழி அம் தடந்தேர், வீரன் ஏறலும், அமலச் சில்லி பூழியிற் சுரித்த தன்மை நோக்கிய புலவர் போத, ஊழி வெங் காற்றின் வெய்ய கலுழனை ஒன்றும் சொல்லார், வாழிய அனுமன் தோள் என்று ஏத்தினார் மலர்கள் தூவி. 63 தேவர்கள் வாழ்த்த இராமன் தேர் செல்வது 9847. ‘எழுக தேர்; சுமக்க எல்லோம் வலியும்; புக்கு இன்றே பொன்றி விழுக, போர் அரக்கன்; வெல்க, வேந்தர்க்கு வேந்தன்; விம்மி அழுக, பேர் அரக்கிமார் ‘என்று ஆர்த்தனர், அமரர்; ஆழி முழுகி மீது எழுந்தது என்னச் சென்றது, மூரித் திண் தேர். 64 இராவணன் தன்தேரை இராமனுக்கு எதிரே செலுத்துமாறு பாகனுக்குக் கூறுதல் 9848. அன்னது கண்ணில் கண்ட அரக்கனும், ‘அமரர் ஈந்தார் மன் நெடுந் தேர் ‘என்று உன்னி, வாய் மடித்து எயிறு தின்றான்; பின், ‘அதுகிடக்க ‘என்னா, தன்னுடைப் பெருந் திண் தேரை மின் நகு வரிவில் செங்கை இராமன் மேல் விடுதி ‘என்றான். 65 அஞ்சிய வானரரும் அஞ்சாது ஆரவாரித்துப் பொருதல் 9849. இரிந்த வானரங்கள் எல்லாம், ‘இமையவர் இரதம் ஈந்தார்; அரிந்தமன் வெல்லும் என்றற்கு ஐயுறவு இல் ‘என்று, அஞ்சார், திரிந்தனர்; மரமும் கல்லும் சிந்தினர்; ‘திசையோடு அண்டம் பிரிந்தன கொல்! ‘என்று எண்ணப் பிறந்தது, முழக்கின் பெற்றி. 66 பலவகை ஆரவாரங்கள் 9850. வார்ப்பொலி முரசின் ஓதை, வயவர் வாய் புடைப்பின் ஓதை, போர்த் தொழில் களத்து மற்றும் முற்றிய பொம்மல் ஓதை, ஆர்த்தலின், யாரும் பார்வீழ்ந்து அடங்கினர், இருவர் ஆடல் தேர் குரல் ஓதை பொங்க, செவிமுற்றும் செவிடு செய்ய. 67 இராமன் மாதலிக்குச் சில அறிவுரை பகர்தல் 9851. மாதலி வதனம் நோக்கி, மன்னர்தம் மன்னன் மைந்தன், “காதலால் கருமம் ஒன்று கேட்டியால்; களித்த சிந்தை ஏதிலன் மிகுதி எல்லாம் இயற்றிய பின்றை, என்தன் சோதனை நோக்கிச் செய்தி; துடிக்கலை ‘‘ என்னச் சொன்னான். 68 மாதலி அவ்வாறு செய்வேன் எனல் 9852. ‘வள்ளல்! நின் கருத்தும், மாவின் சிந்தையும், மாற்றலார் தம் உள்ளமும், மிகையும், உற்ற குற்றமும், உறுதி தானும், கள்ளம் இல் காலப் பாடும், கருமமும், கருதேன் ஆகில், தெள்ளிது என் விஞ்சை! ‘என்றான்; அமலனும் ‘செவ்விது! ‘என்றான். 69 இராம இராவணர்க்குப் போர்மூள மகோதரன் விடைபெறுதல் 9853. ‘தோன்றினன் இராமன், எந்தாய்! புரந்தரன் துரகத் தேர்மேல்; ஏன்று இருவோர்க்கும் வெம்போர் எய்தியது; இடையே யான் ஓர் சான்று என நிற்றல் குற்றம்; தருதியால் விடை ஈண்டு ‘என்றான்; வான் தொடர் குன்றம் அன்ன மகோதரன் இலங்கை மன்னை. 70 இலக்குவனோடு பொருமாறு மகோதரனை ஏவுதல் 9854. ‘அம்புயம் அனைய கண்ணன் தன்னை யான் அரியின் ஏறு தும்பியைத் தொலைத்தது என்னத் தொலைக்குவென்; தொடர்ந்து நின்ற தம்பியைத் தடுத்தியாயின், தந்தனை கொற்றம் ‘என்றான்; வெம்பு இகல் அரக்கன், ‘அஃதே செய்வென் ‘என்று, அவனின் மீண்டான். 71 9855. மீண்டவன் இளவல் நின்ற பாணியின் விலங்கா முன்னம், ஆண்தகை தயெ்வத் திண்தேர் அணுகியது; அணுகுங் காலை, மூண்டு எழு வெகுளியோடும், மகோதரன் முனிந்து, ‘முட்டத் தூண்டுதி தேரை ‘என்றான்; சாரதி தொழுது சொல்வான். 72 சாரதி அப்பாற்சேறலே கருமம் எனல் 9856. ‘எண் அரும் கோடி வெங்கண் இராவணரேயும், இன்று நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ, கிடப்பது அல்லால்? அண்ணல்தன் தோற்றம் கண்டால், ஐய! நீ கமலம் அன்ன கண்ணனை ஒழிய, அப்பால் போதலே கருமம் ‘என்றான். 73 மகோதரன் இராமனொடு பொருதல் (9856-9858) 9857. என்றலும், எயிற்றுப் பேழ்வாய் மடித்து, ‘அடா! எடுத்து நின்னைத் தின்றனென் எனினும் உண்டாம் பழி ‘என, சீற்றம் சிந்தும் குன்று அன தோற்றத்தான்தன் கொடி நெடுந் தேரின் நேரே சென்றது, அவ் இராமன் திண் தேர்; விளைந்தது திமிலத் திண்போர். 74 9858. பொன் தடந் தேரும், மாவும், பூட்கையும், புலவு வாள் கைக் கல் தடந் திண்தோள் ஆளும், நெருங்கிய கடல்கள் எல்லாம் வற்றின, இராமன் வாளி வட அனல் பருக; வன்தாள் ஒற்றை வன்தடந் தேரோடும் மகோதரன் ஒருவன் சென்றான். 75 9859. அசனி ஏறு இருந்த கொற்றக் கொடியின்மேல், அரவத் தேர்மேல், குசை உறு பாகன் தன்மேல், கொற்றவன் குவவுத் தோள்மேல், விசை உறு பகழி மாரி வித்தினான்; விண்ணினோடும் திசைகளும் கிழிய ஆர்த்தான்; தீர்த்தனும், முறுவல் செய்தான். 76 இராமன் மகோதரனைச் சிதைத்தது 9860. வில் ஒன்றால், கவசம் ஒன்றால், விறல் உடைக் கரம் ஓர் ஒன்றால், கல் ஒன்று தோளும் தாளும் ஒன்று ஒன்றால், கழுத்தும் ஒன்றால், செல் ஒன்று கணைகள் ஐயன் சிந்தினன்; செப்பி வந்த சொல் ஒன்றாய்ச் செய்கை ஒன்றாய்த் துணிந்தனன், அரக்கன் துஞ்சி. 77 மகோதரன் மாண்டதை அறிந்து இராவணன் இராமனோடு போர்செய்ய விரைதல் 9861. மோதரன் முடிந்த வண்ணம், மூவகை உலகு முற்றும் மாதிரத்தோடும் வென்ற வன்தொழில் அரக்கன் கண்டான், சேதனை உண்ணக் கண்டான்; ‘செலவிடு, செலவிடு! ‘என்றான்; சூதனும் முடுகித் தூண்ட, சென்றது, துரகத் திண்தேர். 78 இராவணனது சேனையை இராமன் அழித்தல் 9862. பனிப்படா நின்றது என்னப் பரக்கின்ற சேனை பாறித் தனிப்படான் ஆகில் உள்ளம் தாழ்கிலன் என்னும் தன்மை நுனிப்படா நின்ற வீரன், அவன் ஒன்றும் நோக்கா வண்ணம் குனிப்படா நின்ற வில்லால், ஒல்லையின் நூறிக் கொன்றான். 79 இராவணனுக்கு இடத்தோள்கள் துடித்தல் 9863. அடல்வலி அரக்கற்கு அப்போது, அண்டங்கள் அழுந்த, மண்டும் கடல்களும் வற்ற, எற்றிக் கால் கிளர்ந்து உடற்றுங் காலை, வடவரை முதல ஆன மலைக்குலம் சலிப்ப மான, சுடர் மணி வலயம் சிந்தத் துடித்தன, இடத்த பொன் தோள். 80 தீ நிமித்தங்கள் (9863-9865) 9864. உதிர மாரி சொரிந்தது உலகு எலாம்; அதிர வானம் இடித்தது; அருவரை பிதிர வீழ்ந்தது அசனி; ஒளிபெறாக் கதிரவன் தனை ஊரும் கலந்ததால். 81 9865. வாவும் வாசிகள் தூங்கின; வாங்கல் இல் ஏவும் வெஞ்சிலை நாண் இடை இற்றன; நாவும் வாயும் உலர்ந்தன; நாள் மலர்ப் பூவின் மாலை புலால் வெறி பூத்ததால். 82 9866. எழுது வீணை கொடு ஏந்து பதாகைமேல் கழுகும் காகமும் மொய்த்தன; கண்கள் நீர் ஒழுகுகின்றன ஓடு இகல் ஆடல் மா; தொழுவில் நின்றன போன்றன சூழிமா. 83 இராவணன் இத் துன்னிமித்தங்களை மதியாமை 9867. இன்ன ஆகி இமையவர்க்கு இன்பம் செய் துன் நிமித்தங்கள் தோன்றின; தோன்றவும் அன்னது ஒன்றும் அறிந்திலன், ‘ஆற்றுமோ, என்னை வெல்ல மனித்தன்? ‘என்று எண்ணுவான். 84 இராவணன் தேர்வர வானரர் இருபாலும் ஒதுங்கி ஓடுதல் 9868. வீங்கு தேர் செலும் வேகத்து வேலை நீர் ஓங்கு நாளின் ஒதுங்கும் உலகுபோல் தாங்கல் ஆற்றகிலார் தடுமாறித் தாம் நீங்கினார் இருபாலும் நெருங்கினார். 85 இராமனும் இராவணனும் எதிர்க்கும் தோற்றம் (9868-9871) 9869. கருமமும் கடைக்கண் உறும் ஞானமும் அருமை சேரும் அறிவும் அவிச்சையும் பெருமைசால் கொடும் பாவமும் பேர்கலாத் தருமமும் எனச் சென்று எதிர்தாக்கினார். 86 9870. சிரம் ஒர் ஆயிரம் தாங்கிய சேடனும் உரவு கொற்றத்து உவணத்து அரசனும் பொர எதிர்ந்தனர் போலப் பொலிந்தனர்; இரவும் நண்பகல் என்னவும் ஆயினார். 87 9871. வென்றி அம்திசை யானை வெகுண்டன ஒன்றை ஒன்று முனிந்தவும் ஒத்தனர் அன்றியும் நரசிங்கமும் ஆடகக் குன்றம் அன்னவனும் பொரும் கொள்கையார். 88 9872. துவன வில்லின் பொருட்டு ஒரு தொல்லைநாள் எவன வில் வலி? என்று இமையோர் தொழ, புவன மூன்றும் பொலங்கழலால் தொடும் அவனும் அச்சிவனும் எனல் ஆயினார். 89 இராவணன் சங்கினை ஊதுதல் 9873. கண்ட சங்கரன் நான்முகன் கைத் தலம் விண்டு அசங்க தொல் அண்டம் வெடிபட அண்ட சங்கத்து அமரர்தம் ஆர்ப்பு எலாம் உண்ட சங்கம் இராவணன் ஊதினான். 90 இராமனது சங்கு தானே முழங்குதல் 9874. சொன்ன சங்கினது ஓசை துளங்குற ‘என்ன சங்கு? ‘என்று இமையவர் ஏங்குற அன்ன சங்கைப் பொறாமையின் ஆரியன் தன்னவெண் சங்கு தானும் முழங்கிற்றால். 91 இராமன் அறியாதபடி ஐம்படையும் அருகில் நின்றமை 9875. அய்யன் ஐம்படைதாமும் அடித் தொழில் செய்ய வந்து அயல் நின்றன; தேவரின் மெய்யன் அன்னவை கண்டிலன் வேதங்கள் பொய்யில் தன்னைப் புலன் தரெியாமைபோல். 92 மாதலியின் சங்கமுழக்கம் 9876. ஆசையும் விசும்பும் அலை ஆழியும் தேசமும் மலையும் நெடுந் தேவரும் கூச அண்டம் குலுங்க குலம் கொள்தார் வாசவன் சங்கை மாதலி வாய்வைத்தான். 93 தேவமாதர் இராமனைக் காணுதல் 9877. துமில வாளி அரக்கன் துரப்பன விமலன் மேனியின் வீழ்வதன் முன்னமே கமல வானக நாடியர் கண் கணை அமலன் மேனியில் தைத்த அனந்தமால். 94 இரு தேர்களிலும் பூட்டிய குதிரைகள் சினந்து நோக்குதல் 9878. சென்ற தேரோர் இரண்டினும் சேர்த்திய குன்றி வெங்கண் குதிரை குதிப்பன ஒன்றை ஒன்று உற்று எரி உக நோக்கின; தின்று தீர்வன போலும் சினத்தன. 95 இரு தேர்க்கொடிகளிலுள்ள இடியும் வீணையும் முழங்குதல் 9879. கொடியின்மேல் உறை வீணையும் கொற்ற மா இடியின் ஏறும் முறையின் இடித்தன படியும் விண்ணும் பரவையும் பண்பு அற முடியும் என்பது ஓர் மூரி முழக்கின. 96 இருவருடைய வில் ஒலி 9880. ஏழு வேலையும் ஆர்ப்பு எடுத்த என்னல் ஆம் வீழி வெங்கண் இராவணன் வில் ஒலி; ஆழி நாதன் சிலை ஒலி அண்டம் விண்டு ஊழி பேர்வுழி மாமழை ஒத்ததால். 97 வானர வீரர்களின் திகைப்பு 9881. ஆங்கு நின்ற அனுமனை ஆதியாம் வீங்கு வெஞ்சின வீரர் விழித்தனர் ஏங்குகின்றது அல்லால், ஒன்று இழைத்திலர், வாங்கு சிந்தையர், செய்கை மறந்துளார். 98 தேவர்களின் திகைப்பு 9882. ‘ஆவது என்னை கொலாம்? ‘ என்று அறிகிலர், ‘ஏவர் வெல்வர்? ‘என்று எண்ணலர் ஏங்குவார், போவர், மீள்வர், பதைப்பர், பொருமலால், தேவரும் தங்கள் செய்கை மறந்தனர். 99 இராமனது தோளின் பூரிப்பைக்கண்டு அமரர் மலர்மழை சொரிதல் 9883. சேண வந்து அமர் நோக்கும் செழும்புயம் பூண் அழுந்தின; சிந்தின பூமழை காண வந்த கடவுளர் கை எலாம் ஆண் அவன் துணை ஆருளர் ஆகுவார். 100 கவிக்கூற்று: இருவர்தம் வில்லின் தோற்றம் 9884. நீண்ட மின்னொடு வான் இடு நீலவில் பூண்டு இரண்டு எதிர் நின்றன போன்றன ஆண்ட வில்லிதன் வில்லும் அரக்கன்தன் தீண்ட வல்லவர் இல்லாச் சிலையுமே. 101 இராவணனது படைக்கலங்களின் ஒளி 9885. இக்கணத்தும் எறிப்ப தடித்து என; நெக்க மேகத்து உதிக்கும் நெருப்பு அன பக்கம் வீசு படை சுடர் பல்திசைப் புக்குப் போக பொடிப்பன போக்கு இல. 102 இராவணன் ஆர்ப்பும் வில்லின் முழக்கும் 9886. அரக்கன் அன்று எடுத்து ஆர்த்தன ஆர்ப்பும், பேர் சிரிப்பும், வில்லின் தழெிப்பும் உண்டே கொலாம் குரைக்கும் வேலையும், மேகக் குழாங்களும், இரைத்து இடிக்கின்றது, இன்றும் ஓர் ஈறு இல 103 இராவணனது கண்ணில் சிந்தின சினத் தீ 9887. மண்ணில் செல்வன செல் இனும் மாசு அற எண்ணில் சூல் மழை அல்ல; இராவணன் கண்ணில் சிந்தின தீ கடு வேகத்த விண்ணிற் செல்வன மீண்டு இன்று வீழ்வன. 104 இராமன் சிரிப்பு 9888. மால் கலங்கல் இல் சிந்தையன் மாதிரம் நால் கலங்க நகும்தொறும் நாவொடு கால் கலங்குவர் தேவர்; கண மழை சூல் கலங்கும்; இலங்கை துளங்குமால். 105 இராவணன் வீரப் பேச்சு வில்லின் பெருமை 9889. ‘குற்றம் வில்கொடு கொல்லுதல்; கோள் இலாச் சிற்றையாளனைத் தேவர்தம் தேரொடும் பற்றி வானில் சுழற்றி படியின்மேல் எற்றுவேன் ‘என்று க்கும்; இரைக்குமால். 106 கணையின் பெருமை 9890. ‘தடித்து வைத்து அன்ன வெங்கணை தாவு அற வடித்து வைத்தது மானுடற்கே? வலி ஒடித்து தேரை உதிர்த்து ஒரு வில்லொடும் பிடித்துக் கொள்வென் சிறை ‘எனப் பேசுமால். 107 இராவணன் அம்பு எய்தல் 9891. பதைக்கின்றது ஒர்மனமும், இடை படர்கின்றது ஓர் சினமும், விதைக்கின்றன பொறிபொங்கின விழியும், உடைவெய்யோன், குதைக்குன்று என நிமிர்வெஞ்சிலை குழைய, கொடுங் கடுங் கால் உதைக்கின்றன சுடர்வெங்கணை, உரும் ஏறு என எய்தான். 108 அம்பின் தன்மைகள் 9892. உரும் ஒத்தன, அனல் ஒத்தன, ஊற்றம்தரு கூற்றின் மருமத்தினும் நுழைகிற்பன, மழை ஒத்தன, வானோர் நிருமித்தன, படை பற்று அற நிமிர்வு உற்றன, அமிழ்தப் பெரு மத்தினை முறைசுற்றிய பெரும்பாம்பினும் பெரிய. 109 இராவணன் எய்த அம்புகளை இராமன் அழித்தல் 9893. ‘துண்டப்பட நெடு மேருவைத் துளைத்து, உள் இறை தொங்காது அண்டத்தையும் பொதுத்து ஏகும் ‘என்று இமையோர்களும் அயிர்த்தார்; கண்டத் தறெு கணைக் காற்றினை, கருணைக் கடல், கனகச் சண்டச் சர மழை கொண்டு, அவை இடையே அறத் தடுத்தான். 110 இராவணன் மீண்டும் அம்பு சொரிதல் 9894. உடையான் முயன்ற ஒருகாரியம் உறுதீவினை உடற்ற, இடையூறு உறச் சிதைந்தாங்கு எனச் சரம் சிந்தின, விறலும்; தொடை ஊறின கணைமாரிகள் தொகை தீர்ந்தன துரந்தான் கடை ஊறு உறு கணமாமழை கால் வீழ்த்து எனக் கடியான். 111 இராவணன் விட்ட அம்புகளின் நிலை 9895. விண்போர்த்தன; திசை போர்த்தன; மலைபோர்த்தன; இமையோர் கண்போர்த்தன; கடல் போர்த்தன; படிபோர்த்தன; கலையோர் எண்போர்த்தன; எரிபோர்த்தன; இருள்போர்த்தன; ‘என்னே திண்போர்த்தொழில்? ‘என்று ஆனையின் உரி போர்த்தவன் திகைத்தான். 112 இராவணன் அம்பினால் வானரசேனை அழிவதுகண்டு இராமன் அவ்வம்புகளை விலக்குதல் 9896. அல்லா நெடும் பெருந்தேவரும் மறைவாணரும் அஞ்சி, எல்லாரும் தம் கரங்கொண்டு இரு விழிபொத்தினர், இரிந்தார்; செல் ஆயிரம் விழுங்கால் உகும் விலங்கு ஒத்தது சேனை; வில்லாளனும் அதுகண்டு, அவை விலக்கும் தொழில் வேட்டான். 113 இராமன் எய்த அம்பினால் இராவணன் அம்புகள் அழிதல் 9897. செந்தீவினை மறைவாணனுக்கு ஒருவன் சிறுவிலை நாள் முந்து ஈந்தது ஒர் உணவின்பயன் எனல் ஆயின, முதல்வன் வந்து ஈந்தன வடி வெம் கணை; அனையான் வகுத்து அமைத்த வெம் தீ இனை பயன் ஒத்தன, அரக்கன் சொரி விசிகம். 114 இராமனும் இராவணனும் ஒத்துப் பொருதல் (9897-9901) 9898. நூறு ஆயிரம் வடிவெங்கணை நொடி ஒன்றினில் விடுவான், ஆறா விறல் மறவோன், அவை தனி நாயகன் அறுப்பான்; கூறு ஆயின, கனல் சிந்தின, குடிக்கப் புனல் குறுகி, சேறு ஆயின, பொடி ஆயின, திடர் ஆயின, கடலும். 115 9899. வில்லால் சரம் துரக்கின்றவற்கு, உடனே, மிடல் வெம்போர் வல்லான், மழு, எழு, தோமரம், மணித் தண்டு, இருப்பு உலக்கை தொல் ஆர் அயில், வாள், சக்கரம் சூலம், இவை தொடக்கத்த எல்லா நெடுங்கரத்தால் எடுத்து எறிந்தான், செரு அறிந்தான். 116 9900. வேலாயிரம், மழு ஆயிரம், எழு ஆயிரம், விசிகக் கோல் ஆயிரம், பிற ஆயிரம், ஒருகோல்படக் குறைவ கால் ஆயின, கனல் ஆயின, உரும் ஆயின, கதிய சூலாயின் மழை அன்னவன், தொடை பல்வகை தொடுக்க. 117 9901. ஒத்துச் செரு விளைக்கின்றது ஒர் அளவின்தலை உடனே பத்துச் சிலை எடுத்தான், கணை தொடுத்தான், பல முகிலாத் தொத்துப்பட நெடும் தாரைகள் சொரிந்தாலெனத் துரந்தான் குத்துக்கொடு நெடுங்கோல் படு களிறு ஆம் எனக் கொதித்தான். 118 9902. ஈசன்விடு சரம் மாரியும் எரிசிந்துறு தறுகண் நீசன்விடு சர மாரியும் இடை எங்கணும் நெருங்க தேசம் முதல் ஐம்பூதமும் செறிவுற்றன செருவில் கூசிம்மயிர் பொடிப்பு உற்றன எனலாயின குலைய. 119 இராவணனது தேர் விண்ணில் எழுதல் 9903. மந்தரக் கிரி என மருந்து மாருதி தந்த அப் பொருப்பு என புரங்கள்தாம் என கந்தருப்பந் நகர் விசும்பில் கண்டு என அத்தரத்து எழுந்தது அவ் அரக்கன் தேர் அரோ. 120 இராமன் காண வானரசேனை அழிதல் 9904. எழுந்து உயர் தேர்மிசை இலங்கை காவலன் பொழிந்தன சரமழை உருவிப் போதலால் ஒழிந்ததும் ஒழிகிலது என்ன ஒல்லெனக் கழிந்தது கவிக்குலம் இராமன் காணவே. 121 இராமன் தேரை விண்மிசைவிடுமாறு மாதலிக்குச் சொல்லுதல் 9905. ‘முழவு இடு தோெளாடு முடிகொள் பல்தலை விழவிடுவேன் இனி; விசும்பு சேமமோ? மழவிடை அனைய நம் படைஞர் மாண்டனர் எழவிடு தேரை ‘என்று இராமன் கூறினான். 122 மாதலி தேரை விண்ணில் செலுத்துவது 9906. ‘அந்து செய்குவென் ‘என அறிந்த மாதலி உந்தினன் தேரெனும் ஊழிக்காற்றினை; இந்து மண்டலத்தின்மேல் இரவி மண்டலம் வந்தனெ வந்தது அம் மானத்தேர் அரோ. 123 9907. இரிந்தன மழைக்குலம் இழுகித் திக்கு எலாம்; உரிந்தன உடுக்குலம் உதிர்ந்து சிந்தின; நெரிந்தன நெடுவரைக் குடுமி; நேர்முறை திரிந்தன சாரிகை தேரும் தேருமே. 124 சாரிகையின் விளைவு 9908. வலம் வரும்; இடம் வரும்; மறுகி வானொடு நிலம் வரும்; இடம் வலம் நிமிரும்; வேலையும் அலம்வரும்; குலவரை அனைத்தும் அண்டமும் சலம்வரும் குலால்மகன் திகிரித் தன்மைபோல். 125 சாரிகையின் விரைவு (9908-9913) 9909. ‘எழும்புகழ் இராமன் தேர்; அரக்கன்தேர் இது ‘என்று உழுந்து உருள் பொழுதின் எவ் உலகும் சேர்வன, தழும்பிய தேவரும் தரெிவு தந்திலர், பிழம்பின திரிவன என்னும் பெற்றியார். 126 9910. உக்கு இலா உடுக்களும் உருள்கள் தாக்கலின் நெக்கு இலா மலைகளும் நெருப்புச் சிந்தலின் வக்கு இலா திசைகளும் உதிரம் வாய்வழிக் கக்கிலா உயிர்களும் இல்லை காண்பன. 127 9911. ‘இந்திரன் உலகத்தார் ‘என்பர்; என்றவர் ‘சந்திரன் உலகத்தார் ‘என்பர்; ‘தாமரை அந்தணன் உலகத்தார் ‘என்பர்; ‘அல்லரால் மந்தர மலையினார் ‘என்பர் வானவர். 128 9912. ‘பாற்கடல் நடுவணார் ‘என்பர்; ‘பல்வகை மால்கடலினுக்கும் அவ் வரம்பினார் ‘என்பர்; ‘மேல்கடலார் ‘என்பர்; ‘கிழக்கு உளார் ‘என்பர்; ‘ஆர்ப்பு இடை அது ‘என்பர் அறியும் வானவர். 129 9913. ‘மீண்டனவோ? ‘என்பர்; ‘விசும்பு விண்டு உகக் கீண்டனவோ? ‘என்பர்; ‘கீழவோ? என்பர்; ‘பூண்டன புரவியோ? புதிய காற்று! ‘என்பர் ‘மாண்டன உலகம் ‘என்று க்கும் வாயினார். 130 9914. ஏழுடைக் கடலினும் தீவு ஒர் ஏழினும் ஏழுடை மலையினும் உலகு ஒர் ஏழினும் சூழுடை அண்டத்தின் சுவர்கள் எல்லையா ஊழியில் காற்று எனத் திரிந்த ஓவில. 131 இராவணன் வீசிய அம்புகள் கடல் முதலிய இடங்களில் எல்லாம் மழைத்துளிகளைப்போல வீழ்தல் 9915. உடைக்கடல் ஏழினும் உலகம் ஏழினும் இடைப்படும் தீவினும் மலை ஒர் ஏழினும் அடைக்கலப் பொருள் என அரக்கன் வீசிய படைக்கலம் மழைபடு துளியின் பான்மைய. 132 இராவணன் விடுத்த படைக்கலங்களை அறுத்தலும் தடுத்தலும் அன்றி வெகுண்டு இராமன் போர் செய்யாமை 9916. ஒறுத்து உலகு அனைத்தையும் உரற்றும் ஓட்டின, இறுத்தில; இராவணன் எறிந்த எய்தன அறுத்ததும் தடுத்ததும் அன்றி, ஆரியன் செறுத்து ஒரு தொழில் இடை செய்தது இல்லையால். 133 இரு தேரும் இலங்கையை எய்துதல் 9917. விலங்கலும் வேலையும் மேலுங் கீழரும் அலங்கு ஒளி திரிதரும் உலகு அனைத்தையும் கலங்குறத் திரிந்தது ஓர் ஊழிக்காலக் காற்று இலங்கையை எய்தின இமைப்பின் வந்து அரோ. 134 தேர்பூண்ட புரவிகளின் பெருமை 9918. உய்த்து உலகு அனைத்தினும் உழன்ற சாரிகை மொய்த்தது கடலிடை மணலின் மும்மையால்; வித்தகர் கடவிய விசயத் தேர் பரி எய்த்தில உயிர்த்தில இரண்டு பாலவும். 135 இராமன் ஏறிய தேரின் கொடியை இராவணன் அறுத்தல் 9919. இந்திரன் தேரின்மேல் உயர்ந்த ஏந்து எழில் உந்தரும் பெருவலி உருமின் ஏற்றினை சந்திரன் அனையது ஓர் சரத்தினால் தரைச் சிந்தினன் இராவணன் எரியும் சிந்தையான். 136 இடி கொடி பாய்ந்த கடலின்நீர் சுருங்குதல் 9920. சாய்ந்த வல் உருமுபோய் அரவத் தாழ்கடல் பாய்ந்த வெங்கனல் என முழங்கிப் பாய்தலும் காய்ந்த பேர் இரும்பின் வன்கட்டி கால் உறத் தோய்ந்த நீராம் எனச் சுருங்கிற்று ஆழியே. 137 மாதலிமார்பில் இராவணன் அம்புகளை அழுத்தல் 9921. எழுத்து எனச் சிதைவு இலா இராமன் தேர்ப்பரிக் குழுக்களைக் கூர்ங்கணைக் குப்பை ஆக்கி, நேர் வழுத்த அரும் மாதலி வயிர மார்பிடை அழுத்தினன் கொடுஞ் சரம், ஆறொடு ஆறு அரோ. 138 இராவணன் அம்புகளால் இராமனை மறைத்தல் 9922. மண்டல வரிசிலை வான வில்லொடும் துண்ட வெண்பிறை எனத் தோன்றத் தூவிய உண்டை வெங்கடுங்கணை ஒருங்கு மூடலால் கண்டிலர் இராமனை இமைப்பு இல் கண்ணினார். 139 இராமன்மேல் பட்ட அம்புகளைக் கண்டு அமரர் அஞ்சுதலும் அரக்கர் ஆர்த்தலும் 9923. ‘தோற்றனனே இனி ‘என்னும் தோற்றத்தால் ஆற்றலர் அமரரும் அச்சம் எய்தினார் வேற்றவர் ஆர்த்தனர்; மேலும் கீழரும் காற்று இயக்கு அற்றது கலங்கிற்று அண்டமே. 140 இராமன்மேல் அம்பு பட்டதன் விளைவுகள் 9924. அங்கியும் தன் ஒளி அடங்கிற்று; ஆர்கலி பொங்கில திமிர்த்தன; விசும்பில் போக்கு இல வெங்கதிர் தண்கதிர் விலங்கி மீண்டன மங்குலும் நெடுமழை வறந்து சாய்ந்ததால். 141 9925. திசைநிலைக் கடகரி செருக்குச் சிந்தின; அசைவு இல வேலைகள் ஆர்க்க அஞ்சின; விசைகொடு விசாகத்தை நெருக்கி ஏறினன் குசன்; நெடுமேருவும் குலுக்கம் உற்றதே. 142 9926. வானரத் தலைவனும் இளைய மைந்தனும் ஏனைய தலைவனும் ‘காண்கிலேம் ‘எனக் கானகக் கரி எனக் கலங்கினார்; கடல் மீன் எனக் கலங்கினார் வீரர் வேறு உளார். 143 இராவணன் எய்த அம்புகள் இராமனுக்கும் துயர் விளைத்தன 9927. நீல்நிற நிருதர்கோன் எய்த நீதியின் சால்புடை மாதலி மார்பில் தைத்தவெங் கோலினும் இலக்குவன் கோல மார்பின் வீழ் வேலினும் வெம்மையே விளைத்த வீரற்கும். 144 இராமன் இராவணனை எய்து வருத்துதல் 9928. எய்தன சரம் எலாம் இமைப்பின் முந்துறக் கொய்தனன் அகற்றி, வெங்கோலின் கோவையால் நொய்து என அரக்கனை நெருங்க நொந்தன செய்தனன், இராகவன்; அமரர் தேறினார். 145 இராவணனுடைய வில் ஒடியுமாறு இராமன் அம்பு எய்தல் 9929. தூண் உடை நிரை புரை கரம் அவை தொறும் அக் கோண் உடை மலை நிகர் சிலை இடை குறைய, சேணுடை நிகர் கணை சிதறினன் உணர்வோடு ஊண் உடை உயிர் தொறும் உறை உறும் ஒருவன். 146 இராமன் இராவணனது கவசத்தைப் பிளந்து அவன் குருதியைப் பருகுமாறு கணைகளை விடுதல் 9930. கயில் விரிவுற வரு கவசமும் உருவிப் பயில் விரி குருதிகள் பருகிட வெயிலோடு அயில் விரி சுடுகணை கடவினன் அறிவின் துயில் புரிவுழி உணர் சுடர் ஒளி ஒருவன். 147 இராவணனது வீணைக் கொடியை வீழ்த்துதல் 9931. திசை உறு துகிலது செறி மழை சிதறும் விசை உறு முகிழது விரிதரு சிரனோடு இசை உறு கருவியின் இலகுறு கொடியைத் தசை உறு கணை கொடு தரை உற இடலும். 148 9932. படை உக இமையவர் பருவரல் கெட வந்து இடை உறு திசை திசை இடுகுற இறைவன் அடையுறு கொடி மிசை அணுகினன் அளவு இல் கடை உக முடிவு எழு கடல் புரை கலுழன். 149 இராமனது கொடியில் கலுழன் அமர்ந்தது கண்டு தேவர் மகிழ்தல் 9933. பண்ணவன் உயர் கொடி என ஒரு பரவைக் கண் அகன் உலகினை வலம்வரு கலுழன் நண்ணலும் இமையவர் ‘நமது உறு கருமம் எண்ணலன் முனிவினின் இவறினன் ‘எனவே. 150 இராமன்மேல் தாமதக் கணையை இராவணன் எய்தல் 9934. ஆயது ஒர் அமைதியின் அறிவினுள் அறிவன் நாயகன் ஒருவனை நலிகிலது உணரான் ஏயினன் இருள் உறு தாமதம் எனும் அத் தீவினை தருபடை தறெு தொழில் மறவோன். 151 தாமதக்கணையின் தன்மை (9934-9936) 9935. தீ முகம் உடையன சில முகம்; உதிரம் தோய் முகம் உடையன; சுரர்முகம் உடைய; பேய் முகம் உடையன; பில முகம் நுழையும் வாய் முக வரி அரவு அனையன வருமால். 152 9936. ஒரு திசை முதல் கடை ஒரு திசை அளவும் இரு திசை எயிறு உற வருவன; பெரிய; கருதிய கருதிய புரிவன; கனலும் பருதியை மதியொடு பருகுவ பகழி. 153 9937. இருள் ஒரு திசை ஒரு திசை வெயில் விரியும்; சுருள் ஒரு திசை ஒரு திசை மழை தொடரும்; உருள் ஒரு திசை ஒரு திசை உரும் முரலும்; மருள் ஒரு திசை ஒரு திசை சிலை வருடம். 154 இத்தகைய தாமதக்கணைக்கும் இராமன் நினைவு மயங்காமை 9938. இனையன நிகழ்வுற எழுவகை உலகும் கனை இருள் கதுவிட உயிர் இடை கதற வினை அறு தொழில் இடை விரவலும் விமலன் நினைவுறு தகையினன் நெறியுறு முறையின். 155 இராமன் விட்ட சிவன் கணையால் தாமதக்கணை அழிதல் 9939. கண்ணுதல் ஒருவனது அடுபடை கருதிப் பண்ணவன் விடுதலும் அது நனி பருக; எண்ணுறு கனவினொடு உணர்வு என இமையில் துண்ணெனும் நிலையினின் எறிபடை தொலைய. 156 அது கண்டு பொறாத இராவணன் இராமனது மேனியில் அம்புகளை அழுத்தல் 9940. விரிந்த தன்படை மெய்கண்ட பொய் என வீய, எரிந்த கண்ணினன், எயிற்றிடை மடித்த வாயினன், தன் தரெிந்த வெங்கணை, கங்க வெம் சிறையன திறத்த அரிந்தமன் திரு மேனிமேல் அழுத்தி, நின்று ஆர்த்தான். 157 இராவணன் ஆசுரப்படை விடுதல் 9941. ஆர்த்து, வெஞ்சினத்து ஆசுரப் படைக்கலம், அமரர் வார்த்தை உண்டது, இன் உயிர்களால் மறலிதன் வயிற்றைத் தூர்த்தது, இந்திரன் துணுக்குறு தொழிலது, தொடுத்து, தீர்த்தன் மேல் செலத் துரந்தனன், உலகங்கள் திரிய. 158 இராமன் அங்கியின்கணை விடுத்து ஆசுரக்கணையை அழித்தல் 9942. ‘நுங்குகின்றது, இவ் உலகை ஓர் நொடிவரை ‘என்ன, எங்கும் எங்கும் நின்று அலமரும் அமரர்கண்டு இரைப்ப, மங்குல் வல் உரும் ஏற்றின் மேல் எரிமடுத்து என்ன அங்கி தன் நெடும்படை தொடுத்து, இராகவன் அறுத்தான். 159 இராவணன் கோடிக்கணக்கான கொடிய அம்புகளை எய்தல் 9943. கூற்றுக் கோடினும் கோடல, கடல் எலாம் குடிப்ப, நீற்றுக் குப்பையின் மேருவை நூறுவ, நெடிய காற்றுப் பின் செலச் செல்வன, உலகு எலாம் கடப்ப, நூற்றுக் கோடி அம்பு எய்தனன், இராவணன், நொடியில். 160 இராவணனது விற்போரைப் பலரும் பாராட்டுதல் 9944. ‘என்ன கைக்கடுப்போ! ‘என்பர் சிலர்; சிலர், ‘இவையும் அன்ன மாயமே; அம்பு அல ‘ என்பர்; ‘அவ் அம்புக்கு இன்னம் உண்டு கொல் இடம் ‘என்பர் சிலர்; சிலர் ‘‘இகல்போர் முன்னம் இத்தனை முயன்றிலன் ஆம் ‘ என மொழிவர். 161 9945. மறை முதல் தனி நாயகன், வானினை மறைத்த சிறையுடைக் கொடுஞ் சரம் எலாம் இமைப்பு ஒன்றில் சிந்தப் பொறை சிகைப் பெருந் தலை நின்றும் புங்கத்தின் அளவும் பிறைமுகக் கொடுங் கடுஞ்சரம் அவை கொண்டு பிளந்தான். 162 இராவணன் மயன்கணை தொடுத்தல் 9946. அயன் படைத்த பேர் அண்டத்தின் அருந்தவம் ஆற்றி, பயன் படைத்தவர் யாரினும் படைத்தவன், ‘பல் போர் வியன் படைக்கலம் தொடுப்பென் நான், இனி ‘என விரைந்தான்; மயன் படைக்கலம் துரந்தனன், தயரதன் மகன்மேல். 163 மயன்கணை கண்டு வானவரும் வானரரும் அஞ்சுதல் 9947. ‘விட்டனன் விடு படைக்கலம் வேரோடும் உலகைச் சுட்டனன் ‘எனத் துணுக்கம் உற்று, அமரரும் சுருண்டார்; ‘கெட்டனம் ‘என வானரத் தலைவரும் கிழிந்தார்; சிட்டர் தம் தனி தேவனும் அதன் நிலை தரெிந்தான். 164 இராமன் காந்தருவம் என்னும் கணையால் மயன்கணையை மாய்த்தல் 9948. ‘பாந்தள் பல்தலைப் பரந்து அகன் புவி இடைப் பயிலும் மாந்தர்க்கு இல்லையால் வாழ்வு ‘என வருகின்ற அதனைக் காந்தர்ப்பம் எனும் கடுங் கொடுங் கணையினால் கடந்தான் ஏந்தல் பன்மணி எறுழ்வலித் திரள்புயத்து இராமன். 165 இராவணன் தண்டு கொண்டு வீசுதல் 9949. ‘பண்டு நான்முகன் படைத்தது, கனகன் இப் பாரைத் தொண்டு கொண்டது, மது எனும் அவுணன் முன் தொட்டது, உண்டு இங்கு என்வயின் அது துரந்து உயிர் உண்பென் ‘என்னா, தண்டு கொண்டு எறிந்தான், ஐந்தோடு ஐந்துடைத் தலையான். 166 இராவணனது கதையின் பெருமை(9949-9950) 9950. தாருகன் பண்டு தேவரைத் தகர்த்தது, தனி மா மேரு மந்தரம் புரைவது, வெயில் அன்ன ஒளியது, ஓர் உகம்தனின் உலகம் நின்று உருட்டினும் உருளாச் சீர் உகந்தது, நெரித்தது, தானவர் சிரங்கள். 167 9951. பசும் புனல் பெரும்பரவை பண்டு உண்டது, பனிப்புற்று அசும்பு பாய்கின்றது, அருக்கனின் ஒளிர்கின்றது, அண்டம் தசும்புபோல் உடைந்து ஒழியும் என்று அனைவரும் தளர, விசும்பு பாழ்பட வந்தது மந்தரம் வெருவ. 168 இராமன் தன் அம்பினால் அந்தக் கதையை நீறு ஆக்கியது 9952. கண்டு, தாமரைக் கண்ணன், அக் கடவுள் மாக் கதையை, அண்டர் நாயகன் ஆயிரம் கண்ணினும் அடங்காப் புண்டரீகத்தின் முகை அன்ன புகர்முகம் விட்டான் உண்டை நூறுடன் நீறுபட்டுளது என உதிர்த்தான். 169 மாயையின்கணை விட இராவணன் எண்ணுதல் 9953. ‘தேய நின்றவன், சிலைவலம் காட்டினான்; தீராப் பேயை என்பல துரப்பது? இங்கு இவன் பிழையாமல் ஆய தன்பெரும் படையொடும் அடுகளத்து அவிய மாயையின் படை தொடுப்பன் ‘என்று, இராவணன் மதித்தான். 170 இராவணன் மாயையின் கணையை விடுதல் 9954. பூசனைத் தொழில் புரிந்து, தான் முறைமையின் போற்றும் ஈசனைத் தொழுது, இருடியும் சந்தமும் எண்ணி, ஆசை பத்தினும் அந்தரப் பரப்பினும் அடங்கா வீசினன் செல, வில் இடை தொடைகொடு விட்டான். 171 மாயையின் கணையால் இறந்த அரக்கர் எழுந்து ஆர்த்தல் 9955. மாயம் பொத்திய வயப்படை விடுதலும், வரம்பு இல் காயம் அத்தனையும், நெடுங் காயங்கள் கதுவ, ஆயு உற்று எழுந்தார் என ஆர்த்தனர் அமரில் தூய கொற்றவர் சுடுசரத்தால் முன்பு துணிந்தார். 172 9956. இந்திரற்கு ஒரு பகைஞனும், அவற்கு இளையோரும், தந்திரப் பெருந் தலைவரும், தலைத் தலையோரும், மந்திரச் சுற்றத்தவர்களும் வரம்பு இலர் பிறரும், அந்தரத்தினை மறைத்தனர், மழை உக ஆர்ப்பார். 173 9957. குடப் பெருஞ் செவிக்குன்றமும், மற்றுள குழுவும், படைத்த மூல மாத் தானையும், முதலிய பட்ட, விடைத்து எழுந்தன; யானை, தேர், பரி முதல் வெவ்வேறு அடைத்த ஊர்திகள் அனைத்தும் வந்து, அவ் வழி அடைந்த. 174 9958. ஆயிரம் பெருவெள்ளம் என்று அறிஞரே அறைந்த காய்சினப் பெருங் கடல் படை களப்பட்ட எல்லாம், ஈசனின் பெற்ற வரத்தினால் எய்திய என்ன, தேசம் முற்றவும் செறிந்தன, திசைகளும் திகைப்ப. 175 9959. சென்ற எங்கணும், தேவரும் முனிவரும் சிந்த ‘வென்றது எங்களைப் போலும்; யாம் விளிவதும் உளதே? இன்று காட்டுதும்; எய்துமின், எய்துமின் ‘என்னா, கொன்ற கொற்றவர் தம்பெயர் குறித்து அறை கூவி. 176 மாயப் படையால் பூதங்களும் பேய்களும் தோன்றுதல் 9960. பார் இடந்துகொண்டு எழுந்தன பாம்பு எனும் படிய, பாரிடம் துனைந்து எழுந்தன மலை அன்ன படிய, ‘பேர் இடம் கதுவரிது, இனி விசும்பு ‘என, பிறந்த, பேர் இடங்கரின் கொடுங்குழை அணிந்தன பேய்கள். 177 9961. தாமசத்தினிற் பிறந்தவர், அறம் தறெும் தகையர், தாமசத்தினில் செல்கிலாச் சது முகத்தவற்கும் தாமசத்தினைச் செய்பவர் அடைந்தனர் தளராத் தாம சத்திரம் சித்திரம் பொருந்தினர் தயங்க. 178 9962. தாம் அவிந்து மீது எழுந்தவர்க்கு இரட்டியின் தகையர், தாம இந்துவின் பிளவு எனத் தயங்கும் வாள் எயிற்றர், தாம் அவிஞ்சையர், கடல்பெருந் தகையினர், தரளத் தாம விஞ்சையர் துவன்றினர் திசைதொறும் தருக்கி. 179 9963. தாம் மடங்கலும் முடங்கு உளை யாளியும் தகுவார், தாம் அடங்கலும் நெடுந்திசை உலகொடு தகைவார், தாம் மடங்கலும் கடலும் ஒத்து ஆர்தரும் பகையார், தா மடங்கலும் கொடும் சுடர் படைகளும் தரித்தார். 180 மாயப்படையின் விளைவு கண்டு இராமன் மாதலியை வினவுதல் 9964. இனைய தன்மையை நோக்கிய இந்திரை கொழுநன், ‘வினையம் மற்று இது மாயமோ? விதியது விளைவோ? வனையும் வன்கழல் அரக்கர்தம் வரத்தினோ? மற்றோ? நினைதியாம் எனின், பகர் ‘என, மாதலி நிகழ்த்தும். 181 மாதலியின் மறு மொழி(9964-9965) 9965. இருப்புக் கம்மியற்கு இழைநுழை ஊசி ஒன்று இயற்றி, விருப்பின் ‘கோடியால் விலைக்கு ‘எனும் பதடியின், விட்டான் கருப்புக் கார்மழை வண்ண! அக் கடுந்திசைக் களிற்றின் மருப்புக் கல்லிய தோளவன் மீளரு மாயம். 182 9966. வீய்க்கும் வாய் அயில் வெள் எயிற்று அரவின் வெம் விடத்தை மாய்க்குமா நெடுமந்திரம் தந்தது ஓர் வலியின், நோய்க்கும் நோய்தரு வினைக்கும் நின் பெரும்பெயர் நொடியின், நீக்குவாய்! நினை நினைப்பவர் பிறப்பு என நீங்கும். 183 மாதலி வேண்ட இராமன் ஞானமாக்கணையை விடுதல் 9967. ‘வரத்தின் ஆயினும், மாயையின் ஆயினும், வலியோர் உரத்தின் ஆயினும், உண்மையின் ஆயினும் ஓடத் துரத்தியால் ‘என, ஞானமாக் கடுங்கணை துரந்தான் சிரத்தின் நான்மறை இறைஞ்சவும் தொடரவும் சேயோன். 184 ஞானக்கணையால் மாயையின் விளைவு மாய்தல் 9968. துறத்தல் ஆற்றுறு ஞானமாக் கடுங்கணை தொடர, அறத்து அலாது செல்லாத நல் அறிவு வந்து அணுக, பிறத்தல் ஆற்றுறும் பேதைமை பிணிப்புறத் தம்மை மறத்தலால் தந்த மாயையின் மாய்ந்தது அம்மாயம். 185 இராவணன் சூலப்படை விடுதல் 9969. நீலம் கொண்டு ஆர்கண்டனும், நேமிப் படையோனும், மூலம் கொண்டு ஆர் கண்டகர் ஆவி முடிவிப்பான், காலம் கொண்டார்; கண்டன முன்னே கழிவிப்பான், சூலம் கொண்டான், அண்டரை எல்லாம் தொழில் கொண்டான். 186 இராவணன் விட்ட சூலத்தை இராமன் காணுதல் 9970. கண்டா குலம் உற்று ஆயிரம் ஆர்க்கின்றது, கண்ணில் கண்டு ஆகுலம் உற்று உம்பர் அயிர்க்கின்றது, ‘வீரர் கண், தா, குலம் முற்றும் சுடும் ‘ என்று அக்கழல் வெய்யோன், கண் தாகுதல் முன், செல்ல விசைத்து உள்ளது கண்டான். 187 வருகின்ற சூலத்தின் இயல்பு 9971. எரியா நிற்கும் எஃகு இலை மூன்றும் எரி அஞ்ச, திரியா நிற்கும் தேவர்கள் ஓட, திரள் ஓட, இரியா நிற்கும் எவ் உலகும் தன் ஒளியே ஆய், விரியா நிற்கும்; நிற்கிலது, ஆர்க்கும் விழி செல்லா. 188 சூலத்தை அழிக்குமாறு தேவர்கள் இராமனை வேண்டுதல் 9972. ‘செல்வாய் ‘என்னச் செல்ல விடுத்தான்; ‘இது தீர்த்தற்கு ஒல்வாய் நீயே; வேறு ஒருவர்க்கும் உடையாதால்; வல்வாய் வெங்கண் சூலம் எனும் காலனை, வள்ளால்! வெல்வாய், வெல்வாய்! ‘என்றனர், வானோர், மெலிகின்றார். 189 இராமன் எய்த கணைகள் பயனின்றிப் போதல் 9973. துனையும் வேகத்தால் உரும் ஏறும் துண்ணென்ன வனையும் காலின் செல்வன தன்னை மறவாதே நினையும் ஞானக்கண் உடையார்மேல் நினையாதார் வினையம் போலச் சிந்தின வீரன்சரம் வெய்ய. 190 இராமன் செய்வதறியாது நிற்றல் (9973-9974) 9974. எய்யும், எய்யும் தேவருடைத் திண்படை எல்லாம்; பொய்யும் துய்யும் ஒத்து, அவை சிந்தும்; புவிதந்தான் வய்யும் சாபம் ஒப்பன, ஒப்பு இல் அது கண்டான், அய்யன் நின்றான், செய்வதை ஒன்றும் அறிகில்லான். 191 9975. ‘மறந்தான் செய்கை; மாறு எதிர் செய்யும்வகை எல்லாம் துறந்தான் ‘என்னா, உம்பர் துணுக்கம் தொடர்வுற்றார்; அறம்தான் அஞ்சிக் கால் குலைய, தான் அறியாதே பிறந்தான், நின்றான்; வந்தது சூலம், பிறர் அஞ்ச. 192 இராமனது உங்காரத்தால் சூலம் சிதைதல் 9976. சங்காரத்தான் கண்டை ஒலிப்ப, தழல் சிந்த, பொங்கு ஆரத்தான் மார்பு எதிர் ஓடிப் புகலோடும், வெங்காரத்தான் முற்றும் முனிந்தான்; வெகுளிப் பேர் உங்காரத்தால் உக்கது, பல்நூறு உதிராகி. 193 அமரரின் அகமகிழ்ச்சி 9977. ஆர்ப்பார் ஆனார்; அச்சமும் அற்றார்; அலர்மாரி தூர்ப்பார் ஆனார்; துள்ளல் புரிந்தார்; தொழுகின்றார், ‘தீர்ப்பாய் நீயே தீ என வேறாய் வருதீமை பேர்ப்பாய் போலாம்! ‘என்றனர் வானோர், உயிர்பெற்றார். 194 இராவணன் தன் சூலம் சிதைந்தது கண்டு வீடணன் சொல்லியதை நினைதல் 9978. ‘வென்றான் ‘என்றே உள்ளம் வியந்தான் விடுசூலம் ‘பொன்றான் என்னின் போகலது ‘ என்னும் பொருள் கொண்டான், ஒன்று ஆம் உங்காரத்திடை உக்கு, ஓடுதல் காணா நின்றான், அந்நாள் வீடணனார் சொல் நினைவு உற்றான். 195 இராமனை ‘வேத முதற்காரணனோ? ‘என இராவணன் எண்ணுதல் 9979. ‘சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம் அவனோ? அல்லன்; மெய்வரம் எல்லாம் அடுகின்றான்; தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்; இவனோதான் அவ் வேதமுதல் காரணன்? ‘என்றான். 196 யாவரே ஆயினும் பொருவேன் எனல் 9980. ‘யாரேனும் தான் ஆகுக! யான் என் தனி ஆண்மை பேரேன்; இன்றே வென்றி முடிப்பென்; புகழ்பெற்றேன் நேரே செல்வென், கொல்லும் எனின்தான் நிமிர்வென்றி வேரே நிற்கும்; மீள்கிலது ‘ என்னா, மிடல், உற்றான். 197 நிருதியின் படையை இராவணன் ஏவுதல் 9981. நிருதித் திக்கில் நின்றவன் வென்றிப்படை நெஞ்சில் கருத, தன்பால் வந்ததை வன்கைக் கொடு, காலன் விருதைச் சிந்தும் வில்லின் வலித்துச் செலவிட்டான் குருதிச் செங்கண் தீஉக, ஞாலம் குலைவு எய்த. 198 நிருதிப் படை வருதல் (9981-9983) 9982. வய்யந் துஞ்சும் வன்பிடர் நாகம் மனம் அஞ்ச, பய்யும் கோடிப் பல்தலையோடும் அளவு இல்லா மெய்யும் வாயும் பெற்றன, மேருக் கிரி சால நொய்து என்று ஓதும் தன்மைய ஆக நுழைகின்ற. 199 9983. வாய்வாய் தோறும் மாகடல் போலும் விட வாரி போய்வார்கின்ற, பொங்கு அனல் கண்ணின் பொழிகின்ற, மீவான் எங்கும் வெள்ளிடை இன்றி மிடைகின்ற, பேய்வாய் என்ன வெள் எயிறு எங்கும் பிறழ்கின்ற. 200 9984. ‘கடித்தே தீரும்; கண்ணகன் ] ஞாலம் கடலோடும் குடித்தே தீரும் ‘என்று உயிர் எல்லாம் குலைகின்ற, ‘முடித்தான் அன்றோ, வெங்கண் அரக்கன்? முழுமுற்றும் பொடித்தான் ஆகும், இப்பொழுது ‘ என்னப் புகைகின்ற. 201 இராமன் காருடக் கணையை விடுதல் 9985. அவ்வாறு உற்ற ஆடு அரவம் தன் அகல் வாயால் கவ்வா நின்ற; மால்வரை முற்றும் வகை கண்டான்; ‘எவ்வாய் தோறும் எய்தின ‘ என்னா, எதிர் எய்தான், தவ்வா மெய்ம்மைக் காருடம் 202 காருடக் கணையின் இயல்பு (9985-9987) 9986. எவண் எத்தன்மைத்து ஏகின நாகத்து இனம் என்ன, பவணத்து அன்ன வெஞ்சிறை வேகத்தொழில் பம்ப, சுவணக் கோலத் துண்டம் நகம் தொல் சிறை வெம் போர் உவணப் புள்ளே ஆயின, வானோர் உலகு எல்லாம். 203 9987. அளக்க அரும் புள் இனம் அடைய ஆர் அழல் துளக்க அரும் வாய்தொறும் எரியத் தொட்டன, ‘இளக்கரும் இலங்கை தீ இடுதும் ஈண்டு ‘என விளக்கு இனம் எடுத்தன போன்ற விண் எலாம். 204 9988. குயின்றன சுடர்மணி, கனலின் குப்பையின் பயின்றன, சுடர்தரப் பதும நாளங்கள் வயின்தொறும் கவர்ந்து என, பணியை வாய்களால் அயின்றன, புள் இனம் உகிரின் அள்ளின. 205 9989. ஆயிடை அரக்கனும், அழன்ற நெஞ்சினன், தீயிடைப் பொடித்து எழும் உயிர்ப்பன், சீற்றத்தன், மா இரு ஞாலமும் விசும்பும் வைப்பு அறத் தூயினன், சுடுசரம் உருமின் தோற்றத்த. 206 இராவணன் அது கண்டு சினந்து சரங்களைத் தூவுதல் 9990. அங்கு அ(வ்) வெங்கடுங்கணை அயிலின் வாய்தொறும், வெங்கணை படப்பட, விசையின் வீழ்ந்தன; புங்கமே தலையெனப் புக்க போலுமால்; துங்கவாள் அரக்கனது உரத்தில் தோன்றல. 207 இராவணன் நிலைதளர இராமன் வலி மிகுதல் 9991. ஒக்கநின்று எதிர் அமர் உடற்றும் காலையில் முக்கணான் தடவரை எடுத்த மொய்ம்பற்கு நெக்கன விஞ்சைகள் நிலையில் தீர்ந்தன; மிக்கன இராமற்கு வலியும் வீரமும். 208 இராமன் இராவணன் தலையை அறுத்தல் 9992. வேதியர் வேதத்து மெய்யன் வெய்யவர்க்கு ஆதியன் அணுகிய அற்றம் நோக்கினான் சாதியின் நிமிர்ந்தது ஓர் தலையைத் தள்ளினான் பாதியின் மதிமுகப் பகழி ஒன்றினால். 209 அற்ற தலை கடலிடை வீழ்தல் 9993. மேருவின் கொடுமுடி வீசு கால் எறி போரிடை ஒடிந்துபோய் புணரி புக்கு என ஆரியன் சரம்பட அரக்கன் வன்தலை நீரிடை விழுந்தது நேர்கொண்டு ஒன்றுபோய். 210 தேவர்களின் மகிழ்ச்சி ஆரவாரம் 9994. குதித்தனர் பாரிடை குன்று கூறு உற மிதித்தனர்; வடகமும் தூசும் வீசினர்; துதித்தனர்; பாடினர்; ஆடித் துள்ளினர்; மதித்தனர் இராமனை வானுேளார் எலாம். 211 இராவணன் தலை மீண்டும் முளைத்தல் 9995. இறந்ததோர் உயிர் உடன் தருமத்து ஈட்டினால் பிறந்துளதாம் எனப் பெயர்த்தும் ஓர்தலை மறந்திலது எழுந்தது மடித்த வாயது; சிறந்தது தவம் அலால் செயல் உண்டாகுமோ? 212 எழுந்த தலை இராமனை இகழ்ந்து அதட்டுதல் 9996. கொய்தது கொய்து இலது என்னும் கொள்கையின் எய்த வந்து, அக்கணத்து எழுந்ததோர் சிரம், செய்த வெஞ்சினத்துடன் சிறக்கும் செல்வனை வய்தது, தழெித்தது, மழையின் ஆர்ப்பது. 213 அற்றுக் கடலில் விழுந்த தலையின் செயல் 9997. இடந்தது கிரி குவடு என்ன எங்கணும் படர்ந்தது குரைகடல் பருகும் பண்பது விடம்தரு விழியது முழுகி வேலையில் கிடந்ததும் ஆர்த்தது மழையின் கேழது. 214 இராமன் தோள்களில் பதினான்கு அம்புகளை அழுத்தி இராவணன் ஆரவாரித்தல் 9998. ‘விழுத்தினன் சிரம் ‘எனும் வெகுளி மீக் கொள, வழுத்தின, உயிர்களின் முதலின் வைத்ததோர் எழுத்தினன் தோள்களின் ஏழொடு ஏழுகோல் அழுத்தினன் அசனி ஏறு அயிர்க்கும் ஆர்ப்பினான். 215 இராமன், இராவணனது விற்பிடித்த கையை அறுத்தல் 9999. ‘தலை அறின் தருவது ஓர் தவமும் உண்டு ‘என நிலை உறு நேமியான் அறிந்து நீசனைக் கலை உறு திங்களின் வடிவு காட்டிய சிலை உறு கையையும் தலத்தில் சேர்த்தினான். 216 10000. கொற்றவன் சரம்படக் குறைந்துபோன கை பற்றியே கிடந்தது சிலையைப் பாங்குற மற்று ஒர் கைப் பிடித்தது போல வவ்வியது அற்றகைப் பிறந்தகை யார் அது ஓர்குவார். 217 மாதலிமேல் எறிதற்காக அற்ற கையை இராவணன் எடுத்தல் 10001. பொன்கையிற்று ஊர்தியான் வலியைப் போக்குவான் முன் கையில் துறுமயிர் முள்ளின் துள்ளுற, மின் கையில் கொண்டு என வில்லை விட்டிலா வன் கையைத் தன்கையின் வலியின் வாங்கினான். 218 அற்றகையால் தாக்குண்ட மாதலி இரத்தம் கக்குதல் 10002. விளங்கு ஒளி வயிரவாள் அரக்கன் வீசிய தளம் கிளர் தடக்கைதன் மார்பில் தாக்கலும், உளம்கிளர் பெருவலி உலைவு இல் மாதலி துளங்கினன், வாய்வழி உதிரம் தூவுவான். 219 மாதலிமேல் இராவணன் தோமரம் எறிதல் 10003. .மாமரத்து ஆர்கையால் வருந்துவானை ஓர் தோமரத்தால் உயிர் தொலைப்பத் தூண்டினான் தாம் அரத்தால் பொராத் தகைகொள் வாட்படை, காமரத்தால் சிவன் கரத்து வாங்கினான். 220 இராமன்கணையால் தோமரம் துகளாதல் 10004. ‘மாண்டது இன்றொடு மாதலி வாழ்வு ‘என மூண்ட வெந் தழல் சிந்தி முடுகலும் ஆண்ட வில்லி ஓர் ஐம்முக வெங்கணை தூண்டினான்; துகள் ஆனது தோமரம். 221 இராமன் இராவணன் தலைகளை அறுத்தல் 10005. ஓய்வு அகன்றது ஒருதலை நூறு உற போய் அகன்று புரள பொருகணை ஆயிரம் தொடுத்தான் அறிவின் தனி நாயகன் கைக் கடுமை நடத்துவான். 222 தலைகள் பலவிடங்களிலும் வீழ்தல் 10006. நீர்த் தரங்கங்கள் தோறும் நிலம்தொறும் சீர்த்த மால்வரை தோறும் திசைதொறும் பார்த்த பார்த்த இடந்தொறும் பல்தலை ஆர்த்து வீழ்ந்த அசனிகள் வீழ்ந்து என. 223 வீழ்ந்த தலைகளின் விளைவு 10007. தகர்ந்து மால்வரை சாய்வுறத் தாக்கின; மிகுந்த வான்மிசை மீனம் மலைந்தன; புகுந்த மா மகரக் குலம் போக்கு அற முகந்த வாயின் புணரியை முற்றுற. 224 அற்றுவீழ்ந்த இராவணனது தலைகளின் கண்களைப் பேய்கள் தொண்டுதல் 10008. பொழுது நீடித்த புண்ணியம் போனபின் பழுது செல்லும் அன்றே மற்றைப் பண்பு எலாம்? தொழுது சூழ்வன முன் இன்று தோன்றிட கழுது சூன்ற இராவணன் கண் எலாம். 225 இராவணன் வாள் முதலிய படைகளை இராமன்மேல் வீசுதல் 10009. வாளும் வேலும் உலக்கையும் வச்சிரக் கோளும் தண்டும் மழு எனும் கூற்றமும் தோளின் பத்திகள் தோறும் சுமந்தன மீளி மொய்ம்பன் உரும் என வீசினான். 226 இராமனும் இராவணன் உடம்பினை அம்பினால் புனைவேன் எனச் சினத்தல் 10010. அனைய சிந்திட ஆண்தகை வீரனும் ‘வினையம் என்னினி? யாதுகொல் வெல்லுமா? நினைவென் ‘என்ன ‘நிசாசரன் மேனியைப் புனைவென் வாளியினால் ‘எனப் பொங்கினான். 227 இராவணன் மேனியை அம்பினால் மூடுதல் (10010-10011) 10011. மஞ்சு அரங்கிய மார்பினும் தோளினும் நஞ்சு அரங்கிய கண்ணினும் நாவினும் வஞ்சன் மேனியை வார்கணை அட்டிய பஞ்சரம் எனலாம் வகை பண்ணினான். 228 10012. வாய் நிறைந்தன கண்கள் மறைந்தன மீ நிறங்களின் எங்கும் மிடைந்தன தோய்வுறும் கணை செம்புனல் தோய்ந்தில போய்நிறைந்தன அண்டப் புறம் எலாம். 229 அம்புகள் துளைத்தமையால் இராவணன் சோர்தல். 10013. மயிரின் கால்தொறும் வார்கணை மாரி புக்கு உயிரும் தீர உருவின ஓடலும் செயிரும் சீற்றமும் நிற்க திறல் திரிந்து அயர்வு தோன்ற துளங்கி அழுங்கினான். 230 இராவணன் செயலற்று இருத்தல் 10014. வாரி நீர்நின்று எதிர்மகரம் படச் சோரி சோர உணர்வு துளங்கினான்; தேரின்மேல் இருந்தான் பண்டு தேவர்தம் ஊரின் மேலும் பவனி உலாவுவான். 231 இராவணனது பாகன் தேரைப் பின்னால் விலக்குதல் 10015. ஆர்த்துக் கொண்டு எழுந்து உம்பர்கள் ஆடினார்; வேர்த்துத் தீவினை வெம்பி விழுந்தது; ‘போர்த் துப்பு ஓய்ந்தனன் ‘ என்று, பொலன் கொள்தேர் பேர்த்துச் சாரதி போயினன், பின்றுவான். 232 இராவணன் தளர்ச்சிகண்டு இரங்கி இராமன் அம்பு விடாமை 10016. கய் துறந்த படையினன் கண் அகல் மெய்துறந்த உணர்வினன் வீழ்தலும் எய்திறம் தவிர்ந்தான் இமையோர்களை உய்திறம் துணிந்தான் அறம் உன்னுவான். 233 சோர்வுற்றபோழ்தே அவனுயிரை வாங்குக என மாதலி கூறுதல் 10017. ‘தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது; ஊறு தான் உற்ற போழ்தே உயிர்தனை நூறுவாய் ‘என மாதலி நூக்கினான்; ஏறு சேவகனும் இது இயம்பினான். 234 படை துறந்து சோர்ந்தவன்மேல் படை துரத்தல் நீதியன்று எனல் 10018. ‘படைதுறந்து மயங்கிய பண்பினோன் இடை பெறும் துயர் பார்த்து இகல்நீதியின் நடைதுறந்து உயிர்கோடலும் நன்மையோ? கடைதுறந்தது போர் என்கருத்து ‘என்றான். 235 இராவணன் தெளிதல் 10019. கூவிரம் செறி பொன் கொடித் தேரோடும் போவர் அஞ்சினர் அன்னது ஓர் போழ்தினின் ஏவர் அஞ்சலியாதவர்? எண் உடை தேவர் அஞ்ச இராவணன் தேறினான். 236 தெளிவுற்ற இராவணன் இராமனைத் தன்முன் காணாமையால் சினந்து நோக்குதல் 10020. உறக்கம் நீங்கி உணர்ச்சி உற்றான் என மறக்கண் வஞ்சன் இராமனை வான்திசைச் சிறக்கும் தேரொடும் கண்டிலன்; சீற்றத் தீப் பிறக்க நோக்கினன் பின் உற நோக்கினான். 237 சாரதியை இராவணன் சலித்துக்கொள்ளுதல் 10021. ‘தேர் திரித்தனை தேவரும் காணவே; வீர விற்கை இராமற்கு வெண்நகை பேர உய்த்தனையே; பிழைத்தாய் ‘எனா சாரதிப் பெயரோனைச் சலிப்புறா. 238 10022. ‘தஞ்சம் என்று உனை எண்ணத் தருதலால் வஞ்ச! நீபெருஞ் செல்வத்து வைகினை; “அஞ்சினேன் ” எனச் செய்தனை ஆதலான் உஞ்சிபோதி கொலாம்! ‘என்று உருத்து எழா. 239 சாரதி பணிந்து தேரைத் திருப்பிய காரணத்தை இராவணனுக்குத் தரெிவித்தல் (10022-10024) 10023. வாள் கடைக்கணித்து ஓச்சலும், வந்து, அவன் தாள் கடைக்கணியாத் தலை தாழ்வுறா, ‘மூள் கடைக்கடுந் தீயின் முனிவு ஓழி, கோள் கடைக்கணித்து ‘ என்று அவன் கூறுவான். 240 10024. .ஆண்தொழில் துணிவு ஓய்ந்தனை; ஆங்கு இறை ஈண்ட நிற்றிடின், ஐயனே! நின் உயிர் மாண்டது இக்கணம் என்று, இடர் மாற்றுவான், மீண்டது இத்தொழில், எம் வினை; மெய்ம்மையால். 241 10025. ‘ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர்ப் பொறைச் சாய்வு நீக்குதல் சாரதி தன்மையால் மாய்வு நிச்சயம் வந்துழி; வாளினால் காய்வு தக்கது அன்றால்; கடை காண்டியால். 242 இராவணன் இரக்கங்கொண்டு தேரைத் திருப்பச்செய்து இராமனைக் காணுதல் 10026. என்று இறைஞ்சலும் எண்ணி இரங்கினான் ‘வென்றி அம்தடந் தேரினை மீட்க! ‘என சென்று எதிர்ந்தது தேரும்; அத் தேர்மிசை நின்ற வஞ்சன் இராமனை நேர்வுறா. 243 இராவணன் இராமன்மேல் அம்புகளைச் சொரிதல் 10027. கூற்றின் வெங்கணை கோடியின் கோடிகள் தூற்றினான் வலி மும்மடி தோற்றினான்; வேற்று ஓர் வாள் அரக்கன் என வெம்மையால் ஆற்றினான் செரு; கண்டவர் அஞ்சினார். 244 இராவணனது வில்லை முறிக்க இராமன் அம்பு எய்தல் 10028. “‘எல் உண்டாகின் நெருப்பும் உண்டு “ என்னும் இச் சொல் உண்டாம்; அது போல், இவன் தோளிடை வில் உண்டாகின் வெலற்கு அரிது ஆம் ‘எனா, செல் உண்டால் அன்னது ஓர் கணை சிந்தினான். 245 இராவணன் வில் இரு கூறாதல் 10029. நாரணன் படை நாயகன் உய்ப்பு உறா பார் அணங்கினைத் தாங்குறும் பல்வகை வாரணங்களை வென்றவன் வார்சிலை ஆர் அணங்கை இருதுணி ஆக்கினான். 246 வில் முறிந்தமை கண்டு தேவர்கள் மகிழ்ந்து குதித்தல் 10030. அயன் படைத்தவில் ஆயிரம் பேரினான் வியன் படைக்கலத்தால் அற்று வீழ்தலும் உயர்ந்து உயர்ந்து குதித்தனர் உம்பரார் பயன் படைத்தனம் பல்தவத்தால் என்றார். 247 இராவணன் எடுத்த வேறு விற்களை எல்லாம் இராமன் நுறுக்குதல் 10031. மாறி மாறி வரிசிலை வாங்கினான் ஆறு நூறினொடு ஐ இரு நூறு அவை வேறு வேறு திசை உற வெங்கணை நூறி நூறி இராமன் நுறுக்கினான். 248 இராமன்மேல் இருப்புலக்கை முதலியவற்றை வீசுதல் 10032. இருப்பு உலக்கை, நீள் தண்டு, வேல், ஈட்டி, வாள், நெருப்பு உலக்க வரும் நெடுங் கப்பணம், திருப் புலக்க உய்த்தான் திசை யானையின் மருப்பு உலக்க வழங்கிய மார்பினான். 249 இராவணனைக் கொல்லுநெறி யாதனெ இராமன் ஆராய்தல் (10032-10033) 10033. .அவை அனைத்தும் அறுத்து, அகன் வேலையில் குவை அனைத்தும் எனக் குவித்தான், குறித்து, ‘இவை அனைத்தும் இவனை வெல்லா ‘என, நவை அனைத்தும் துறந்தவன் நாடினான். 250 10034. ‘கண்ணினுள் மணியூடு கழிந்தன எண்ணின் நுண்மணலின் பல வெங்கணை; புண்ணினுள் நுழைந்து ஓடிய புந்தியோர் எண்ணின் நுண்ணிய; என் செயற்பாற்று ‘எனா 251 அயன்கணை எய்யத் துணிதல் 10035. ‘நாரணன் திரு உந்தியில் நான்முகன் பார வெம்படை வாங்கி இப் பாதகன் மாரின் எய்வென் ‘என்று எண்ணி வலித்தனன் ஆரியன் அவன் ஆவி அகற்றுவான். 252 இராமன் பிரமாத்திரம் தொடுத்தல் 10036. முந்தி வந்து உலகு ஈன்ற முதற் பெயர் அந்தணன் படை வாங்கி அருச்சியா சுந்தரன் சிலை நாணில் தொடுப்புறா மந்தரம் புரை தோள் உற வாங்கினான். 253 பிரமாத்திரம் விடுதல் 10037. புரம் சுடப் பண்டு அமைத்தது பொன் பணை மரம் துளைத்தது வாலியை மாய்த்துளது அரம் சுடச்சுடர் அம்பது அவ் ஆற்றலான் உரம் சுடச் சுடரோன்மகன் உந்தினான். 254 அயன்கணை செல்லுதல் (10037-10038) 10038. காலும் வெம் கனலும் கடை காண்கிலா மாலும் கொண்ட வடிக்கணை மாமுகம் நாலும் கொண்டு நடந்தது நான்முகன் மூல மந்திரம் தன்னொடு மூட்டலால். 255 10039. ஆழி மால்வரைக்கு அப்புறத்து அப்புறம் பாழி மால்கடலும் ஒளி பாய்ந்ததால் ஊழி ஞாயிறு மின்மினி ஒப்புறும் வாழி வெஞ்சுடர் பேர் இருள் வாரவே. 256 அயன்கணை இராவணன் மார்பில் புகுதல் 10040. அக்கணத்தின் அயன்படை ஆண்தகை சக்கரப் படையோடும் தழீஇச் சென்று புக்கது அக்கொடியோன் உரம்; பூமியும் திக்கு அனைத்தும் விசும்பும் திரியவே. 257 இராமன் அம்பு இராவணன் உயிரைப் பருகிப்போதல் 10041. முக்கோடி வாழ்நாளும் முயன்றுடைய பெருந்தவமும், முதல்வன் முன்நாள், ‘எக்கோடியாராலும் வெலப்படாய் ‘ எனக்கொடுத்த வரமும், ஏனைத் திக்கோடும் உலகு அனைத்தும் செரு கடந்த புய வலியும், தின்று, மார்பில் புக்கு ஓடி உயிர்பருகி, புறம் போயிற்று, இராகவன்தன் புனித வாளி. 258 இராவணனைக் கொன்ற அம்பு நீராடி இராமனது தூணியில் புகுதல் 10042. .ஆர்க்கின்ற வானவரும், அந்தணரும், முனிவர்களும், ஆசிகூறித் தூர்க்கின்ற மலர்மாரி தொடரப்போய், பாற்கடலில் தூய்நீர் ஆடி, தேர் குன்றம் இராவணன்தன் செழுங்குருதிப் பெரும்பரவைத் திரைமேல் சென்று, கார்க்குன்றம் அனையான்தன் கடுங்கணைப் புட்டிலின் நடுவண் கரந்தது அம்மா 259 இராவணன், தேரிலிருந்து தலைகீழாகத் தரையில் வீழ்தல் 10043. .கார்நின்ற மழைநின்றும் உரும் உதிர்வ எனத் திணி தோள் காட்டின் நின்றும் தார்நின்ற மலைநின்றும், பணி குலமும் மணிக்குலமும் தகர்ந்து சிந்த, போர்நின்ற விழிநின்றும் பொறிநின்ற புகையோடும் குருதி பொங்க, தேர்நின்ற நெடுநிலத்துச் சினம் முகம் கீழ்ப்பட விழுந்தான், சிகரம்போல்வான். 260 இராவணன் உயிர்துறந்த முகங்கள் பொலிவுடன் தோன்றுதல் 10044. .வெம்மடங்கல் வெகுண்டு அனைய சினம் அடங்க, மனம் அடங்க, வினையம் வீய, தமெ் அடங்கப் பொருதடக்கைச் செயல் அடங்க, மயல் அடங்க, ஆற்றல்தேய, தம் அடங்கு முனிவரையும் தலை அடங்க, நிலை அடங்கச் சாய்த்த நாளின் மும்மடங்கு பொலிந்தன, அம்முறை துறந்தான் உயிர்துறந்த முகங்கள் அம்மா. 261 விண்ணிலிருந்து இராமன் இராவணன் மேனியை முற்றும் பார்த்தல் 10045. ‘பூதலத்தது ஆக்குவாயாக, இனிப் பொலம் தேரை ‘என்ற போதில், மாதலிப் பேரவன் கடவ, மண் தலத்தின் அப்பொழுதே வருதலோடும், மீது அலைத்த பெருந்தாரை விசும்பு அளப்பக் கிடந்தான் தன் மேனி முற்றும் காதலித்த உருவாகி, அறம் வளர்க்கும் கண்ணாளன் தரெியக் கண்டான். 262 இராமன் தரையில் இறங்கி இராவணனுடம்பை நெருங்கி நோக்குதல் 10046. ‘தேரினை நீகொடு விசும்பில் செல்க ‘என்ன மாதலியைச் செலுத்தி, பின்னர், பாரிடம் மீதினின் அணுகி, தம்பியொடும் படைத்தலைவர் பலரும் சுற்ற, போரிடை மீண்டு ஒருவருக்கும் புறங்கொடாப் போர்வீரன் பொருது வீழ்ந்த சீரினையே மனம் உவப்ப, உருமுற்றும் திருவாளன் தரெியக் கண்டான். 263 கவிக்கூற்று: இராவணன் மேனிமேல் வானரங்கள் ஏறி விளையாடுதல் 10047. .புலைமேலும் செலற்கு ஒத்துப் பொதுநின்ற செல்வத்தின் புன்மைத் தன்மை நிலைமேலும் இனி உண்டே? ‘நீர்மேலைக் கோலம் ‘எனும் நீர்மைத்து அன்றே தலைமேலும் தோள்மேலும் தடமுதுகின் படர்புறத்தும் தாவி ஏறி, மலைமேல் நின்று ஆடுவபோல் ஆடினவால், வானரங்கள், வரம்பு இலாத. 264 இராவணன் முதுகில் திசை யானையின் கொம்புகள் வெளிப்பட்டிருப்பதை இராமன் பார்க்கின்றான் 10048. .தோடு உழுத நறும் தொடையல் தொகை உழுத கிளைவண்டின் சுழியல் தொங்கல் பாடு உழுத படர்வெரிநின் பணி உழுத அணிநிகர்ப்ப, பணைக்கை யானைக் கோடு உழுத நெடுந்தழும்பின் குவைதழுவி, எழுமேகக் குழுவின் கோவைக் காடு உழுத கொழும்பிறையின் கறைகழன்று கிடந்தனபோல் கிடக்கக் கண்டான் 265 இராவணனது புறப்புண் வடுவைக் கண்ட இராமன் சிரித்தல் 10049. .தளிர் இயல் பொருட்டின் வந்த சீற்றமும் தருக்கினோன் தன் கிளர் இயல் உருவினோடும் குழிப்புறக் கிளர்ந்து தோன்றும் வளரியல் வடுவின் செம்மைத் தன்மையும் மருவ நின்ற முளரி அம்கண்ணன் மூரல் முறுவலன், மொழிவது ஆனான். 266 இராவணன் முதுகில்பட்ட பிழம்பு இருத்தலால் இவன் போரில் புறமுதுகிட்டவனே என இராமன் வருந்துதல் (10049-10050) 10050. .வென்றியான் உலகம் மூன்றும் மெய்ம்மையால் மேவினானும் பொன்றினான் என்று தோளைப் பொது அற நோக்கும் பொற்பும் குன்றி ஆசு உற்றது அன்றே இவன் எதிர் குறித்த போரில் பின்றியான் முதுகில்பட்ட பிழம்பு உள தழும்பின் அம்மா. 267 10051. “‘கார்த்த வீரியன் என்பானால் கட்டுண்டான் “ என்னச் சொல்லும் வார்த்தை உண்டு; அதனைக் கேட்டு, நாணுறு மனத்தினேற்குப் போர்த்தலைப் புறகிட்டு ஏற்ற புண்ணுடைத் தழும்பு போலாம் நேர்த்ததும் காணல் உற்றது; ஈசனார் இருக்கை நிற்க! 268 இராமன், இராவணனை வென்ற வெற்றி சிறந்தது ஆகாது என வீடணனை விளித்துக்கூறியது 10052. ‘மாண்டு ஒழிந்து உலகில் நிற்கும் வயங்கு இசை முயங்க மாட்டாது, ஊண்தொழில் உகந்து, தவெ்வர் முறுவல் என் புகழை உண்ண, பூண்தொழில் உடைய மார்பா! போர்ப் புறம் கொடுத்தோர்ப் போன்ற ஆண்தொழிலோரின் பெற்ற வெற்றியும் அவத்தம் ‘என்றான். 269 வீடணன் வருந்திச் சொல்லத் தொடங்குதல் 10053. .அவ்வுரை ப்பக் கேட்ட வீடணன், அருவிக் கண்ணன், வெவ்வுயிர்ப்போடு நீண்ட விம்மலன், வெதும்பும் நெஞ்சன், ‘செவ்வியின் தொடர்ந்த அல்ல செப்பலை, செல்வ! ‘என்னா, எவ்வுயிர்ப் பொறையும் நல்கி இரங்கிநின்று, இனைய சொன்னான். 270 இராவணனது வீரம் 10054. ‘ஆயிரம் தோளினானும், வாலியும் அரிதின், ஐய! மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை; தாயினும் தொழத் தக்காள் மேல் தங்கிய காதல் தன்மை நோயும் நின்முனிவும் அல்லால், வெல்வரோ நுவலற்பாலார்? 271 இராவணன் முதுகில் வடு இருந்தமைக்குக் காரணம் கூறுதல் (10054-10057) 10055. ‘நாடு உளதனையும் ஓடி நண்ணலார்க் காண்கிலாமல், பீடு உள குன்றம் போலும் பெருந்திசை எல்லை யானைக் கோடு உள தனையும் புக்குக் கொடும்புறத்து அழுந்து புண்ணின் பாடு உளது அன்றி, தவெ்வர் படைக்கலம்பட்டு என் செய்யும்? 272 10056. .அப்பணை அனைத்தும் மார்புக்கு அணி எனக் கிடந்த; வீரக் கைப்பணை முழங்க, முன்நாள் அமரிடைக் கிடைத்த போது உன் துப்பு அணை வயிர வாளி விசையினும் காலின் தோன்றல் வெப்பு அணை குத்தினாலே வெரிந் இடை போய அன்றே. 273 10057. .அவ்வடு அன்றி, இந்த அண்டத்தும் புறத்தும் ஆன்ற தவெ் அடு படைகள் அஞ்சாது இவன்வயின் செல்லின், தேவ! வெவ்விடம் ஈசன் தன்னை விழுங்கினும், பறவை வேந்தை அவ்விட நாகம் எல்லாம் அணுகினும், அணுகல் ஆற்றா. 274 10058. ‘வென்றியாய்! பிறிதும் உண்டோ வேலைசூழ் ஞாலம் எல்லாம் பன்றியாய் எயிற்றுக்கொண்ட பரம்பரன் முதல பல்லோர், “என்றுயாம் இடுக்கண்தீர்வது? “ என்கின்றார்; “இவன் இன்று உன்னால் பொன்றினான் ‘‘ என்ற போதும், புலப்படார், ‘‘பொய்கொல் ‘‘ என்பார் ‘ 275 வீடணன் சொல்லைக் கேட்ட இராமன் மன நிறைவு பெற்றவனாய் இராவணனுக்கு இறுதிக்கடன் செய்ய ஏவுதல் 10059. .‘அன்னதோ? ‘என்னா, வீரன் ஐயமும் நாணும் நீங்கி, தன்னதோள் இணையை நோக்கி, ‘வீடணா! தக்கது அன்றால்; என்னதோ இறந்துளான்மேல் வயிர்த்தல்? நீ இவனுக்கு ஈண்டு சொன்னது ஓர் விதியினாலே கடன்செயத் துணிதி ‘என்றான். 276 தன்னைக் காண வந்த தேவர் முதலியோரை இராமன் காணச் செல்லுதல் 10060. .அவ்வகை அருளி, வள்ளல் அனைத்து உலகங்கேளாடும் எவ்வகை உள்ள தேவர் யாவரும் இரைத்துப் பொங்கிக் கவ்வையின் தீர்ந்தார் வந்து வீழ்கின்றார் தம்மைக் காண, செவ்வையின் அவர்முன் சென்றான்; வீடணன் இதனைச் செய்தான். 277 வீடணன் இராவணன் மேனிமேல் வீழ்தல் 10061. ‘போழ்ந்தனெ அரக்கன்செய்த புன்தொழில் பொறையிற்று ஆமால், வாழ்ந்தநீ இவனுக்கு ஏற்ற வரன்முறை வகுத்தி ‘என்ன, தாழ்ந்தது ஓர் கருணைதன்னால், தலைமகன் அருள, தள்ளி, வீழ்ந்தனன் அவன்மேல், வீழ்ந்த மலையின்மேல் மலைவீழ்ந்தனெ்ன 278 10062. ஏவரும், உலகத்து எல்லா உயிர்களும், எரியும் நெஞ்சத் தேவரும், முனிவர்தாமும் சிந்தையின் இரக்கம் கூர, தாஅரும் பொறையினான்தன் அறிவினால் தகைக்க நின்ற ஆவலும் துயரும் தீர, அரற்றினான் பகுவாய் ஆர. 279 வீடணன் வாய்திறந்தரற்றியது (10062-10068) 10063. ‘உண்ணாதே உயிர் உண்ணாது ஒருநஞ்சு; சனகி எனும் பெருநஞ்சு உன்னைக் கண்ணாலே நோக்கவே போக்கியதே உயிர்; நீயும் களம் பட்டாயே! எண்ணாதேன் எண்ணியசொல் இன்று இனித்தான் எண்ணுதியோ? எண் இல் ஆற்றல் அண்ணாவோ! அண்ணாவோ! அசுரர்கள்தம் பிரளயமே! அமரர் கூற்றே. 280 10064. ‘ஓராசை ஒருவன்மேல் உயிராசைக் குலமகள்மேல் உடைய காதல் தீர்; ஆசை பழி ‘‘ என்றேன்; எனைமுனிந்த முனிவு ஆறித் தேறினாயோ? போர் ஆசைப்பட்டு எழுந்த குலம் முற்றும் பொன்றவும்தான் பொங்கி நின்ற பேராசை பேர்ந்ததோ? பேர்ந்து ஆசைக் கரி இரியப் புருவம் பேர்த்தோய்! 281 10065. .“அன்று எரியில்விழு வேதவதி இவள்காண்; உலகுக்கு ஓர் அன்னை “ என்று, குன்று அனைய நெடுந்தோளாய்! கூறினேன், அது மனத்துள் கொள்ளாதே போய், உன்தனது குலம் அடங்க, உருத்து அமரில் படக்கண்டும், உறவு ஆகாதே பொன்றினையே! இராகவன்தன் புயவலியை இன்று அறிந்து போயினாயோ? 282 10066. ‘மன்றல் மாமலரானும், வடிமழுவாள் படையானும், வரங்கள் ஈந்த ஒன்று அலாதன உடைய முடியோடும் பொடி ஆகி உதிர்ந்து போன; அன்றுதான் உணர்ந்திலையே ஆனாலும் வான்நாட்டை அணுகா நின்ற இன்றுதான் உணர்ந்தனையே, இராமன் தான் யாவருக்கும் இறைவன் ஆதல். 283 10067. ‘வீரநாடு உற்றாயோ? விரிஞ்சனாம் யாவருக்கும் மேலாம் உன்தன் பேரன்நாடு உற்றாயோ? பிறைசூடும் பிஞ்ஞகன்தன் புரம் பெற்றாயோ? ஆர், அணா! உன் உயிரை, அஞ்சாதே, கொண்டு அகன்றார்? அது எலாம் நிற்க, மாரனார் வலி ஆட்டம் தவிர்ந்தாரோ? குளிர்ந்தானோ, மதியம் என்பான்? 284 10068. ‘கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் “ என்று அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து, பல்லாலே இதழ் அதுக்கும் கொடும்பாவி நெடும்பாரப் பகை தீர்ந்தாேளா? நல்லாரும் தீயாரும் நரகத்தார் துறக்கத்தார், நம்பி! நம்மோடு எல்லாரும் பகைஞரே; யார்முகத்தே விழிக்கின்றாய்? எளியை ஆனாய்! 285 10069. ‘போர்மகளை, கலைமகளை, புகழ்மகளை, தழுவியகை பொறாமை கூர, சீர்மகளை, திருமகளை, தேவர்க்கும் தரெிவரிய தயெ்வக் கற்பின் பேர்மகளை, தழுவுவான் உயிர்கொடுத்து, பழிகொண்ட பித்தா! பின்னைப் பார்மகளைத் தழுவினையோ, திசையானை பணை இறுத்த பணைத்த மார்பால்? 286 சாம்பவன் ஆறுதல் கூற வீடணன் தேறுதல் 10070. .என்று ஏங்கி, அரற்றுவான்தனை எடுத்து, சாம்பவனாம் எண்கின் வேந்தன், ‘குன்று ஓங்கு நெடுந்தோளாய்! விதிநிலையை மதியாத கொள்கைத்து ஆகிச் சென்று ஓங்கும் உணர்வினையோ? தேறாது வருந்துதியோ? ‘என்னத் தேறி நின்றான், அப்புறத்து அரக்கன் நிலைகேட்டாள், மயன்பயந்த நெடுங்கண் பாவை. 287 மண்டோதரி இராவணன் கிடக்கும் இடத்தை அடைதல் 10071. அனந்தம் நூறு ஆயிரம் அரக்கர் மங்கைமார் புனைந்த பூங்குழல் விரித்து அரற்றும் பூசலார் இனம் தொடர்ந்து உடன்வர எய்தினாள் அரோ நினைந்ததும் மறந்ததும் இலாத நெஞ்சினாள். 288 அரக்கியர் அரற்றும் ஓசை 10072. இரக்கமும் தருமமும் துணைக்கொண்டு, இன்னுயிர் புரக்கும் நன்குலத்து வந்து ஒருவன் பூண்டது ஓர் பரக்கழி ஆம் எனப் பரந்து, நீண்டதால் அரக்கியர் வாய்திறந்து அரற்றும் ஓதையே. 289 மேலும் அரக்கியர் வருதல் (10072-10073) 10073. நூபுரம் புலம்பிட சிலம்பு நொந்து அழ கோபுரந் தொறும் புறம் குறுகினார் சிலர்; ‘ஆ! புரந்தரன் பகை அற்றது ஆம் ‘எனா மாபுரம் தவிர விண்வழிச் சென்றார்சிலர். 290 10074. அழைப்பு ஒலி முழக்கு எழ அழகு மின்னிட குழை பொலி நல் அணிக் குலங்கள் வில்லிட உழைப்பொலி உண்கண் நீர்த்தாரை மீது உக மழைப்பெருங் குலமென வான்வந்தார் சிலர். 291 அரக்கியர் இராவணன்மேல் வீழ்ந்து அழுதல் (10074-10078) 10075. தலைமிசைத் தாங்கிய கரத்தர், தாரைநீர் முலைமிசைத் தூங்கிய முகத்தர், மொய்த்துவந்து, அலைமிசைக் கடலின்வீழ் அன்னம்போல், அவன் மலைமிசைத் தோள்கள்மேல் வீழ்ந்து, மாழ்கினார். 292 10076. தழுவினர் தழுவினர் தலையும் தாள்களும் எழு உயர் புயங்களும் மார்பும் எங்கணும் குழுவினர் முறைமுறை கூறுகூறு கொண்டு அழுதனர் அயர்த்தனர் அரக்கி மார்களே. 293 10077. .வருத்தம் ஏது எனின், அது புலவி; வைகலும், பொருத்தமே வாழ்வு எனப் பொழுது போக்குவார், ஒருத்தர்மேல் ஒருத்தர் வீழ்ந்து உயிரின் புல்லினார் ‘திருத்தமே ‘என அவன் சிகரத் தோள்கள்மேல். 294 10078. இயக்கியர் அரக்கியர் உரகர் ஏழையர் மயக்கம் இல் சித்தியர் விஞ்சை மங்கையர் முயக்கு இயல் முறைகெட முயங்கினார்கள் தம் துயக்கு இலா அன்புகண்டு எவரும் சோரவே. 295 10079. .‘அறம்தொலைவுற மனத்து அடைத்த சீதையை மறந்திலையோ, இனும்? எமக்கு உன் வாய்மலர் திறந்திலை; விழித்திலை; அருளும் செய்கிலை; இறந்தனையோ? ‘என இரங்கி, ஏங்கினார். 296 மண்டோதரி இராவணன்மேல் விழுந்து அழுதல் (10079-10087) 10080. தரங்கநீர் வேலையில் தடித்து வீழ்ந்து என உரங்கிளர் மதுகையான் உருவின் வீழ்ந்தனள் மரங்களும் மலைகளும் உருக வாய்திறந்து இரங்கினள் மயன்மகள் இனைய பன்னினாள். 297 10081. ‘அன்னேயோ! அன்னேயோ! ஆ, கொடியேற்கு அடுத்தது! நான் அரக்கர் வேந்தன் பின்னேயோ, இறப்பது? முன்பிடித்திருந்த கருத்ததுவும் பெற்றிலேனே! முன்னேயோ விழுந்ததுவும் முடித்தொகையோ? படித்தலைய முகங்கள் தானோ? என்னேயோ, என்னேயோ, இராவணனார் முடிந்த பரிசு! இதுவோ பாவம்! 298 10082. ‘வெள் எருக்கஞ் சடைமுடியான் வெற்பு எடுத்த திருமேனி, மேலும் கீழும் எள் இருக்கும் இடனின்றி, உயிர் இருக்கும் இடன்நாடி, இழைத்தவாறோ? “கள் இருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனம் சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் ‘‘ எனக் கருதி, உடல் புகுந்து, தடவியதோ ஒருவன் வாளி? 299 10083. ‘ஆரம்போர் திருமார்பை அகல் முழைகள் எனத் திறந்து, இவ் உலகுக்கு அப்பால் தூரம்போயின, ஒருவன் சிலைதுரந்த சரங்களே; போரில் தோற்று, வீரம்போய், உரம்குறைந்து, வரம்குறைந்து, வீழ்ந்தானே! வேறே! கெட்டேன்! ஓர் அம்போ, உயிர்பருகிற்று, இராவணனை! மானுடவன் ஊற்றம் ஈதோ! 300 10084. ‘காந்தையருக்கு அணியனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும், ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும், வேந்தர் பிரான், தயரதனார் பணியினால் வெம் கானில் விரதம் பூண்டு போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! 301 10085. .“‘தேவர்க்கும், திசை கரிக்கும், சிவனார்க்கும், அயனார்க்கும், செங்கண்மாற்கும், ஏவர்க்கும் வலியானுக்கு என்று உண்டாம் இறுதி? ‘‘ என ஏமாப்புற்றேன்; ஆவற்கண் நீ உழந்த அருந்தவத்தின் பெருங்கடற்கும், வரமென்று ஆன்ற காவற்கும் வலியான் ஒர் மானுடவன் உளன் என்னக் கருதினேனோ? 302 10086. அரைகடை இட்டு அமைவுற்ற முக்கோடி ஆயுவும் பேர் அறிஞர்க்கேயும் கடை இட்டு அளப்பு அரிய பேர் ஆற்றல் தோளாற்றற்கு உலப்போ இல்லை திரைகடை இட்டு அளப்ப அரிய வரமென்னும் பாற்கடலைச் சீதை என்னும் பிறகடை இட்டு அழிப்பதனை அறிந்தேனோ, தவப்பயனின் பெருமை பார்ப்பேன்? 303 10087. ‘ஆர் அனார், உலகு இயற்கை அறிதக்கார்? அவை ஏழும் ஏழும் அஞ்சும் வீரனார் உடல் துறந்து, விண்புக்கார்; கண்புக்க வேழ வில்லால் நார நாண் மலர்க்கணையால், நாளெல்லாம் தோள் எல்லாம், நைய எய்யும் மாரனார் தனி இலக்கை மனித்தனார் அழித்தனரே, வலத்தினாலே! 304 10088. .ஆரா அமுதாய் அலைகடலில் கண்வளரும் நாராயணன் என்று இருப்பேன் இராமனைநான்; ஓராதே கொண்டு அகன்றாய், உத்தமனார் தேவிதனை; பாராயோ, நின்னுடைய மார்பு அகலம் பட்ட எலாம்? 305 மண்டோதரி இராவணன் உடலைத் தழுவி உயிர்விடுதல் 10089. .என்று அழைத்தனள், ஏங்கி எழுந்து, அவன் பொன் தழைத்த பொரு அரு மார்பினைத் தன் தழைக் கைகளால் தழுவித் தனி நின்று அழைத்து உயிர்த்தாள், உயிர் நீங்கினாள். 306 கணவனோடு மாண்ட மண்டோதரியை மாதர்கள் வாழ்த்துதல் 10090. வான மங்கையர், விஞ்சையர், மற்றும் அத் தான மங்கையரும் தவப் பாலவர் ஆன மங்கையரும் அருங் கற்புடை மான மங்கையர் தாமும் வழுத்தினார். 307 வீடணன் இராவணனுக்கு ஈமக்கடன் புரிதல் (10090-10093) 10091. பின்னர் வீடணன் பேர் எழில் தம்முனை வன்னி கூவி வரன்முறையால் மறை சொன்ன ஈமம் விதிமுறையால் தொகுத்து இன்னல் நெஞ்சினொடு அஞ்சலித்து ஏற்றினான். 308 10092. இந்தனத்து அகில் சந்தனமிட்டு மேல் அந்த மானத்து அழகுறத் தான் அமைத்து எந்த ஓசையும் கீழ் உற ஆர்த்து இடை முந்து சங்கு ஒலி எங்கும் முழங்குற. 309 10093. கொற்ற வெண்குடையோடு கொடி மிடைந்து உற்ற ஈம விதியின் உடன்பட சுற்றம் மாதர் தொடர்ந்து உடன்சூழ்வர மற்ற வீரன் விதியின் வழங்கினான். 310 10094. கடன்கள் செய்து முடித்து கணவனை உடன் தொடர்ந்த மயன்மகேளாடு உடன் அடங்க வெங்கனலுக்கு அவி ஆக்கினான் குடங்கொள் நீரினும் கண்சோர் குமிழியான். 311 மற்றையரக்கர்க்கும் உரிய கடன்களைச் செய்து வீடணன் இராமனை அணுகுதல் 10095. மற்றையோர்க்கும் வரன்முறையால் வகுத்து உற்ற தீக் கொடுத்து உண்குறு நீர் உகுத்து ‘எற்றையோர்க்கும் இவன் அலது இல் ‘எனா வெற்றிவீரன் குரைகழல் மேவினான். 312 10096. வந்து தாழ்ந்த துணைவனை வள்ளலும் ‘சிந்தை வெந்துயர் தீருதி தெள்ளியோய்! முந்தை எய்தும் முறைமை இது ஆம் ‘எனா அந்தம் இல் இடர்ப் பாரம் அகற்றினான். 313  

Previous          Next