இராமன், அணைகட்டி முடிந்தமை கூறிய சுக்கிரீவன் முதலியவரைத் தழுவி அணை காண விரைதல் 6874. ஆண்தகையும், அன்பினொடு தான் இடை எழுந்தே நீண்ட கையினால் அவரை நெஞ்சினொடு புல்லி ஈண்ட எழுக என்றனன்; இழைத்த படியெல்லாம் காண்டல் அதன் மேல் நெடிய காதல் முதிர்கின்றான். 1 இராமன் அணையை அடைதல் 6875. பண்டை உறையுட்கு எதிர் படைக் கடலின் வைகும் கொண்டல், என வந்து, அவ் அணையைக் குறுகி நின்றான் அண்ட முதல்வன் ஒரு தன் ஆவி அனையாளைக் கண்டனன் எனப் பெரிய காதல் முதிர்கின்றான். 2 இராமன் அணையினமைதி கண்டு வியந்து உவந்து பாராட்டுதல் (6876-6877) 6876. நின்று, பெரிது உன்னி, இந் நெடுங்கடல் நிரம்பக் குன்றுகொடு அடைத்து, அணை குயிற்றியது ஒர் கொள்கை, அன்று உலகு தந்த முதல் அந்தணன் அமைத்தான் என்ற பொழுதின்கணும் இது என்று இயலும்? என்றான். 3 6877. ஊழி முதல் நாயகன் வியப்பினொடு உவந்தான்; ஆழம் செய்யும் அளவோ! இனி அது ஒன்றோ? ஆழியின் இலங்கை நெடிது அத்திசையின் ஆமேல் ஏழு கடலும் கடிது அடைப்பர் இவர் ‘என்றான். 4 இராமன் வானரப் படையுடன் அணைமீது செல்லுதல் 6878. நெற்றியில் அரக்கர் பதி செல்ல நிறை நல் நூல் கற்று உணரும் மாருதி கடைக்குழை வரத் தன் வெற்றி புனை தம்பி ஒரு பின்பு செல வீரப் பொன் திரள்புயக் கருநிறக் களிறு போனான். 5 அணைமீது சென்ற வானரப் படையின் தோற்றம் (6879-6880) 6879. இருங்கவி கொள் சேனை மணி ஆரம் இடறித் தன் மருங்கு வளர் தணெ் திரை வயங்கு பொழில் மான ஒருங்கு நனி போயினது; உயர்ந்த கரை ஊடே கருங்கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப. 6 6880. ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள கோது இல அருந்துவன கொள்ளையின் முகந்து உற்று யாதும் ஒழியாவகை சுமந்து கடல் எய்தப் போதலினும் அன்ன படை பொன்னி எனல் ஆகும். 7 அணைமீது வானரப் படை செல்லுங்கால் நிகழ்ந்த சில நிகழ்ச்சிகள் (6881-6882) 6881. ஆயது நெருங்க அடியிட்டு அயல் இடாமல் தேயும் நெறி மாடு திரை ஊடு விசை செல்லப் போய சில பொங்குதொறு பொங்குதொறு பூசல் பாய்புரவி விண் படர்வபோல் இனிது பாய்வ. 8 6882. மெய் இடை நெருங்க வெளி அற்று அயலில் வீழும் பொய்யிடம் இலாத புனலில் புகல் இலாத உய்விடம் அளிக்கும் அருளாளர் முறை உய்த்தார் கை இடை கொடுப்ப வழிசென்ற கரை இல்லை. 9 வானரர் குடைபிடித்தும் சாமரை வீசியும் இராமனை உபசரித்து வருதல் (6883-6884) 6883. இழைத்து அனைய வெம்கதிரின் வெம்சுடர் இராமன் மழைத்த முகில் அன்ன மணி மேனி வருடாமல் தழைத்த நிழல் உற்ற குளிர் சந்தனம் உயர்ந்த வழைத் தரு எடுத்து அருகு வந்தனர் அநேகர். 10 6884. ஓம நெறிவாணர் மறை வாய்மை ஒருதானே ஆம் அரசன் மைந்தர் திருமேனி அலசாமே பூ மரன் இறுத்தவை பொருத்துவ பொருத்திச் சாமரையின் வீசினர் படைத் தலைவர் தாமே. 11 இராமன் கடல் கடந்து கரையடைதல் 6885. அருங் கடகம் அம்கையில் அகற்றி அயர்வோடும் மருங்கு அட வளர்ந்த முலை மங்கை மனம் உன்னா ஒருங்கு அடல் உயர்ந்த படர் தானையொடும் ஓதத்து இருங்கடல் கடந்து கரை ஏறினன் இராமன். 12 இராமன் சுவேலமலையில் தங்குதல் 6886. பெருந்தவம் முயன்று அமரர் பெற்றிடும் வரத்தால் மருந்து அனைய தம்பியோடும் வன் துணைவரோடும் அருந்ததியும் வந்தனை செய் அம்சொல் இளவஞ்சி இருந்த நகரின் புறன் ஓர் குன்று இடை இறுத்தான். 13 இராமன் நீலனிடம் படைவீடு அமைக்கும்படி பணித்தல் 6887. நீலனை இனிது நோக்கி, நேமியோன், ‘விரைய ‘நீ நம் பால்வரு சேனைக்கு எல்லாம் இழைத்தியால் பாடி ‘என்னக் கால்வரை வணங்கிப் போனான், கல்லினால் கடலைக் கட்டி, நூல்வரை வழி செய்தானுக்கு அந் நிலை நொய்திற் சொன்னான். 14 நளன் படைவீடமைத்தல் 6888. பொன்னினும் மணியினாலும் நான்முகன் புனைந்த பொற்பின் நல் நலம் அமைய வாங்கி, நால்வகைச் சதுரம் நாட்டி, இன்னர் என்னாத வண்ணம் இறைவற்கும் பிறர்க்கும் எல்லாம் நல்நகர் நொய்தின் செய்தான்; தாதையும் நாணுக் கொண்டான். 15 நளன் இராமனுக்கு இருக்கையமைத்தல் 6889. வில்லினாற்கு இருக்கை செய்யும் விருப்பினால், பொருப்பின் வீங்கும் கல்லினால் கல்லை ஒக்கக் கடாவினான், கழைகளான நெல்லினால் அலக்கும் காலும் நிரப்பினான், தருப்பை என்னும் புல்லினால் தொடுத்து, வாசப் பூவினால் வேய்ந்து போனான். 16 யாவரும் அவரவர்க்கு அமைத்த இருக்கையை அடைதல் 6890. வாயினும் மனத்தினானும் வாழ்த்தி, மன்னுயிர்கட்கு எல்லாம் தாயினும் அன்பினோனைத் தாள் உற வணங்கித் தத்தம் ஏயின இருக்கை நோக்கி எண் திசை மருங்கும் யாரும் போயினர்; பன்னசாலை இராமனும் இனிது புக்கான். 17 சூரியன் அத்தமித்தல் 6891. பப்பு நீர் ஆய வீரர் பருவரை கடலில் பாய்ச்சத் துப்பு நீர் ஆய தூய சுடர்களும் கறுக்க வந்திட்டு உப்பு நீர் அகத்துத் தோய்ந்த ஒளிநிறம் விளங்க, அப்பால் அப்பு நீர் ஆடுவான் போல் அருக்கனும் அத்தம் சேர்ந்தான். 18 சந்திரன் தோன்றுதல் 6892. மால் உறு குடக வானின், வயங்கிய வந்து தோன்றும் பால் உறு பசு வெண் திங்கள், பங்கய நயனத்து அண்ணல் மேல் உறு பகழி தூர்க்க வெகுண்டனன், விரைவின் வாங்கிக் கால் உற வளைத்த காமன் வில் எனக் காட்டிற்று அன்றே. 19 தனெ்றல் சந்திரன் முதலியவை கொதித்தல் 6893. நூற்று இதழ்க் கமலம் தந்த நுண் நறுஞ் சுண்ணம் உண்ணத் தீற்றி, மென் பனிநீர் தோய்ந்த சீதளத் தனெ்றல் என்னும் காற்றினும் மாலையான கனலினும் காமன் வாளிக் கூற்றினும் வெம்மை காட்டிக் கொதித்தது அக் குளிர் வெண் திங்கள். 20 இராமன் தோள்மீது நிலாத் தவழும் தோற்றம் 6894. செயிர்ப்பினும் அழகு செய்யும் திருமுகத்து அணங்கைத் தீர்த்து துயில் சுவை மறந்தான் தோளில் தூநிலாத் தவழும் தோற்றம், மயில் குலம் பிரிந்த மான மரகத மலை மேல் வன்னி உயிர்ப்பு உடை வெள்ளைப் பிள்ளை வாள் அரா ஊர்வ போன்ற. 21 இராமன் விரகதாபத்தால் வருந்துதல் 6895. மன் நெடு நகரம் மாடே வரவர, வயிரச் செங்கைப் பொன் நெடுந் திரள் தோள் ஐயன், மெய் உறப் புழுங்கி நைந்தான்; பல் நெடுங் காதத்தேயும் சுட வல்ல பவளச் செவ்வாய் அந் நெடுங் கருங்கண் தீயை அணுகினால் தணிவது உண்டோ? 22 குரங்குருவொடு வானரப்படையுள் மறைந்து திரிந்த இராவணன் ஒற்றரை வீடணன் காணுதல் (6896-6898) 6896. இற்று இது காலம் ஆக, இலங்கையர் வேந்தன் ஏவ, ஒற்றர் வந்து, அளவு நோக்கிக் குரங்கு என உழல்கின்றாரைப் பற்றினன் என்ப மன்னோ! பண்டு தான் பலநாள் செய்த நல்தவப் பயன்கள் துய்ப்ப முந்து உற போந்த நம்பி. 23 6897. பேர்வு உறு கவியின் சேனைப் பெருங் கடல் வெள்ளம் தன்னுள் ஓர்வு உறும் மனத்தன் ஆகி, ஒற்றரை உணர்ந்து கொண்டான்; சேர்வுறு பாலின் வேலைச் சிறுதுளி தறெித்த வேனும் நீரினை வேறு செய்யும் அன்னத்தின் நீரன் ஆனான். 24 6898. பெருமையும் சிறுமைதானும் முற்றுறு பெற்றி ஆற்ற அருமையின் அகன்று, நீண்ட விஞ்சையுள் அடங்கித் தாமும் உருவமும் தரெியா வண்ணம், ஒளித்தனர், உறையும் மாயத்து இருவரை ஒருங்கு காணும் யோகியும் என்னல் ஆனான். 25 ஓற்றரை வீடணன் காட்ட இராமன் காணுதல் 6899. கூட்டிய விரல் திண்கையால் குரங்குகள் இரங்கக் குத்தி, மீட்டு ஒரு வினை செய்யாமல், மாணையின் கொடியால் வீக்கிப் பூட்டிய கையர் வாயால் குருதியே பொழிகின்றாரைக் காட்டினன் கள்வர் என்னாக் கருணையங் கடலும் கண்டான். 26 இராமன் குரங்குருவினின்ற ஒற்றரை நலியாது விடுக எனல் 6900. பாம்பு இழைப் பள்ளி வள்ளல் பகைஞர் என்று உணரான், ‘பல்லோர் நோம் பிழை செய்த கொல்லோ குரங்கு? என, இரங்கி நோக்கித் தாம் பிழை செய்தாரேனும், தஞ்சம் என்று அடைந்தார் தம்மை நாம் பிழை செய்யல் ஆமோ? நலியலிர் விடுதிர் ‘என்றான். 27 வீடணன், இவர் இராவணன் ஒற்றராகிய சுகசாரணர் என்று இராமனிடம் கூறுதல் 6901. அகன் உறப் பொலிந்த வள்ளல் கருணையால் அழுத கண்ணன், ‘நகம் நிறை கானின் வைகும் நம் இனத்தவரும் அல்லர்; தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர்; சுகன் இவன்; அவனும் சாரன் ‘ என்பது தரெியச் சொன்னான். 28 ஒற்றர் நாங்கள் குரங்குகளே; வீடணன் எங்களைக் கொல்ல வந்த வஞ்சகன் என்று இராமனிடம் கூறுதல் 6902. கல்விக்கண் மிக்கோன் சொல்லக் கரு மன நிருதக் கள்வர், “வல் வில் கை வீர! மற்று இவ் வானரர் வலியை நோக்கி, ‘வெல்விக்கை அரிது ‘என்று எண்ணி, வினையத்தால் எம்மை எல்லாம் கொல்விக்க வந்தான்; மெய்ம்மை; குரங்கு நாம்; கொல்க ‘‘ என்றார். 29 வீடணன் மந்திரத்தால் ஒற்றர் அரக்கருருவொடு நிற்றல் 6903. ‘கள்ளரே காண்டி ‘என்னா மந்திரம் கருத்தில் கொண்டான்; தெள்ளிய தரெிக்கும் தவெ்வர், தீர்வினை சேர்தலோடும் துள்ளியின் இரதம் தோய்ந்து, தொல் நிறம் கரந்து வேறாய் வெள்ளி போல் இருந்த செம்பும் ஆம் என வேறுபட்டார். 30 இராமன், எது கருதி வந்தீர் என ஒற்றரை வினவுதல் 6904. மின் குலாம் எயிற்றர் ஆகி, வெருவந்து வெற்பின் நின்ற வன்கணார் தம்மை நோக்கி, மணி நகை முறுவல் தோன்றப் புன்கணார் புன்கண் நீக்கும் புரவலன், ‘போந்த தன்மை என்கொலாம்? தரெிய எல்லாம் இயம்புதிர் அஞ்சல் ‘என்றான். 31 ஒற்றர் வேய் தரெிந்துரைக்க வந்தோம் எனல் 6905. தாய் தரெிந்து உலகு காத்த தவத்தியைத் தன்னைக் கொல்லும் நோய் தரெிந்து உணரான் தேடிக் கொண்டவன் நுவல, ஆற்றின் வாய் தரெிந்து, உணராவண்ணம் கழறுவார், வணங்கி, ‘மாய வேய் தரெிந்து க்க வந்தோம் வினையினால் வீர ‘என்றார். 32 இராமன் ஒற்றரிடம் கூறுதல் (6906-6910) 6906. ‘எல்லை இல் இலங்கைச் செல்வம் இளையவற்கு ஈந்த தன்மை சொல்லுதிர்; மகர வேலை, கவிக்குல வீரர் தூர்த்துக் கல்லினில் கடந்த வாறும் கழறுதிர்; “காலம் தாழ்த்த வில்லினர், வந்தார் ‘‘ என்றும் விளம்புதிர் வினையம் மிக்கீர். ‘ 33 6907. ‘கொத்து உறு தலையான் வைகும் குறும்பு உடை இலங்கைக் குன்றம், தத்து உறு தடநீர் வேலை தனில், ஒரு சிறையிற்று ஆதல், ஒத்து உற உணர்ந்திலாமை, உயிரோடும் உறவினோடும் இத்துணை இருந்தது என்னும் தன்மையும் இயம்புவீரால். ‘ 34 6908. ‘சண்டம் கொள் வேகமாகத் தனி விடை, உவணம், தாங்கும் துண்டம் கொள் பிறையான், மௌலித் துளவினானோடும் தொல்லை அண்டம் கொள் தேவர், வந்து, காப்பினும், அறம் இலானைக் கண்டங்கள் பலவும், காண்பன் என்பதும் கழறுவீரால். ‘ 35 6909. தீட்டிய மழுவாள் வீரன், தாதையைச் செற்றோன் சுற்றம் மாட்டிய வண்ணமே, தன் வருக்கமும், மற்றும் முற்றும், வீட்டி, என் தாதைக்காக, மெய்ப்பலி, விசும்பு உ(ள்)ேளாரை ஊட்டுவென் உயிர்கொண்டு ‘என்னும் வார்த்தையும் உணர்த்துவீரால். 36 6910. தாழ்வு இலாத் தவத்து ஓர் தையல், தனி ஒரு சிறையில் தங்கச் சூழ்வு இலா வஞ்சம் சூழ்ந்த தன்னைத் தன் சுற்றத்தோடும், வாழ்வு எலாம் தம்பி, கொள்ள, வயங்கு எரி நரகம் என்னும் வீழ்வு இலாச் சிறையின், வைப்பென்; என்பதும் விளம்புவீரால். 37 இராமன் கட்டளையால் ஒற்றர் திரும்பிச் செல்லுதல் 6911. ‘நோக்கினிர் தானையெங்கும் நுழைந்தனிர்; இனி வேறு ஒன்றும் ஆக்குவது இல்லையாயின், அஞ்சல் என்ற அஃது உண்டு ‘; என்றே ‘வாக்கினின் மனத்தின் கையின் மற்று இனி நலியா வண்ணம், போக்குமின் விரைவின் ‘என்றான்; ‘உய்ந்தனம் ‘என்று போனார். 38 இராவணன் மந்திராலோசனை செய்தல் (6912-6914) 6912. அரவ மாக் கடல் அஞ்சிய அச்சமும் உரவு நல் அணை ஓட்டிய ஊற்றமும் வரவும் நோக்கி இலங்கையர் மன்னவன் இரவின் எண்ணிட வேறு இருந்தான் அரோ. 39 6913. வார் குலாம் முலை மாதரும் மைந்தரும் ஆரும் நீங்க அறிஞரோடு ஏகினான் ‘சேர்க ‘என்னின் அல்லால் இளந்தனெ்றலும் சார்கிலா நெடு மந்திர சாலையே. 40 6914. உணர்வு இல் நெஞ்சினர் ஊமர் ப்பொருள் புணரும் கேள்வியர் அல்லர் பொறி இலர் கொணரும் கூனர் குறளர் கொழுஞ்சுடர் துணரும் நல்விளக்கு ஏந்தினர் சுற்றினார். 41 இராவணன் வினவுதல் 6915. ‘நணியர் வந்து மனிதர்; நமக்கு இனித் துணியும் காரியம் யாது? ‘எனச் சொல்லினான்; பணியும் தானவர் ஆதியர் பல் முடி மணியினால் விளங்கும் மணித் தாளினான். 42 மாலியவான் கூறுதல் (6916-6920) 6916. கால வெம் கனல் போலும் கணைகளால் வேலை வெந்து நடுங்கி வெயில் புரை மாலை கொண்டு வணங்கியவாறு எலாம் சூலம் என்ன என் நெஞ்சைத் தொளைக்குமால். 43 6917. ‘கிழிபடக் கடல் கீண்டது; மாண்டது மொழி படைத்த வலி ‘; என மூண்டது ஓர் பழி படைத்த பெரும் பயத்து அன்னவன் வழி கொடுத்தது என் உள்ளம் வருத்துமால். 44 6918. படைத்த மால் வரை யாவும் பறித்து வேர் துடைத்த வானர வீரர் தம் தோள்களைப் புடைத்தவாறும் புணரியைப் போக்கு அற அடைத்தவாறும் என் உள்ளத்து அடைத்தவால். 45 6919. காந்து வெம் சின வீரர் கணக்கு இலார் தாம் தம் ஆற்றலுக்கு ஏற்ற தரத் தர வேந்த! வெற்பை ஒருவன் விரல்களால் ஏந்தி இட்டது என் உள்ளத்தில் இட்டதால். 46 6920. சுட்டவா கண்டும் தொல் நகர் வேலையைத் தட்டவா கண்டும் தா அற்ற தவெ்வரைக் கட்டவா கண்டும் கண் எதிரே வந்து விட்டவா கண்டும் மேல் எண்ண வேண்டுமோ? 47 இராவணன் மாலியவானைச் சினந்து கூறுதல் 6921. என்று தாயைப் பயந்தோன் இயம்பலும் தின்று வாயை விழிவழித் தீ உக ‘நன்று நன்று நம் மந்திரம் நன்று ‘எனா ‘என்றும் வாழ்தி இளவலொடு ஏகு ‘என்றான். 48 மாலியவான் மௌனமுறச் சேனைத் தலைவன் கூறுதல் (6922-6925) 6922. ஈனமேகொல் இதம்? என எண்ணுறா மோனம் ஆகி இருந்தனன் முற்றினான்; ஆன காலை அடியின் இறைஞ்சிய சேனை நாதன் இனையன செப்பினான். 49 6923. கண் வயம்தர வேலை கடந்த அத் திண்மை ஒன்றும் அலால் திசை காவலர் எண்மரும் இவற்கு ஏவல் செய்கின்ற அவ் உண்மை ஒன்றும் உணர்ந்திலை போலுமால். 50 6924. கூசி வானரர் குன்று கொடுங்கடல் வீசினார் எனும் வீரம் விளம்புவாய் ஊசி வேரோடும் ஓங்கலை ஓங்கிய ஈசனோடும் எடுத்ததும் இல்லையோ. 51 6925. அதுகொடு என் சில; ஆர் அமர் மேல் இனி மதி கெடும் தகையோர் வந்து நாம் உறை பதி புகுந்தனர் தம்மைப் படுப்பது ஓர் விதி கொடு உந்த விளைந்ததுதான் என்றான். 52 வாயில் காவலன் இராவணனிடம் ஒற்றர் வரவு தரெிவித்தல் 6926. முற்றும் மூடிய கஞ்சுகன் மூட்டிய வெற்று அனல் பொழி கண்ணினன் வேத்திரம் பற்றும் அம் கையினன் படிகாரன் நின்று ‘ஒற்றர் வந்தனர் ‘என்ன உணர்த்தினான். 53 இராவணன் கட்டளையால் ஒற்றர் இராவணனை யடைதல் 6927. வாயில் காவலன் கூற வயங்கு எரி மேய வெங்கண் விறல் கொள் இராக்கதர் நாயகன் ‘புகுத்து இங்கு ‘என ‘நன்று ‘எனப் போய் அவன் புகுத்தப் புகுந்தார் அரோ. 54 ஒற்றர் இராவணனை வணங்குதல் 6928. மனைக்கண் வந்து அவன் பாதம் வணங்கினார் பனைக்கை வன்குரங்கின் படர் சேனையை நினைக்குந்தோறும் திடுக்கிடும் நெஞ்சினார் கனைக்குந்தோறும் உதிரங்கள் கக்குவார். 55 இராவணன் ஒற்றர்பால் வானரப்படையளவு முதலியவற்றை வினவுதல் 6929. ‘வெள்ள வாரி விரிவொடு அவ் வீடணத் தள்ளவாரி நிலைமையும் தாபதர் உள்ளவாறும் மின் ‘என்றான்; உயிர் கொள்ள வாய் வெருவும் கொடுங் கூற்று அனான். 56 ஒற்றர் கூறுதல் (6930-6938) 6930. அடியம் அந்நெடுஞ் சேனையை ஆசையால் முடிய நோக்கலுற்றோம்; முதுவேலையின் படியை நோக்கி அவ் வானம் படர்குறும் கடிய வேகக் கலுழனில் கண்டிலம். 57 6931. நுவல யாம் வரவேண்டிய நோக்கதோ கவலை வேலை எனும் கரை காண்கிலாது அவலம் எய்தி அடைத்துழி ஆர்த்து எழும் துவலையே வந்து சொல்லியது இல்லையோ? 58 6932. ‘எல்லை நோக்கவும் எய்தில தாம் ‘எனும் சொல்லை நோக்கிய மானிடன் தோள் எனும் கல்லை நோக்கிக் கணைகளை நோக்கித் தன் வில்லை நோக்கலும் வெந்தது வேலையே. 59 6933. தார் உலாம் மணி மார்ப! நின் தம்பியே தேர் உலாவு கதிரும் திரிந்து தன் பேர் உலாவும் அளவினும் பெற்றனன் நீர் உலாவும் இலங்கை நெடுந்திரு 60 6934. சேது பந்தனம் செய்தனன் என்றது இப் போது வந்த புது வலியோ? ஒரு தூது வந்தவன் தோள் வலி சொல்லிய ஏது அந்தம் இலாத இருக்கவே. 61 6935. மருந்து தேவர் அருந்திய மாலைவாய் இருந்த தானவர் தம்மை இரவி முன் பெருந்திண் மாயற்கு உணர்த்திய பெற்றியில் தரெிந்து காட்டினன் நும்பி சினத்தினால். 62 6936. பற்றி வானர வீரர் பனைக் கையால் எற்றி எங்களையே நெடுந் தோள் உறச் சுற்றி ஈர்த்து அலைத்துச் சுடர்போல் ஒளிர் வெற்றி வீரற்குக் காட்டி விளம்பினான். 63 6937. “‘சரங்கள் இங்கு இவற்றால் பண்டு தான் உடை வரங்கள் சிந்துவென் ‘என்றனன்; மற்று எமைக் குரங்கு அலாமை தரெிந்தும் அக் கொற்றவன் இரங்க உய்ந்தனம்; ஈது எங்கள் ஒற்று “ என்றார். 64 6938. மற்றும் யாவையும் வாய்மைய வானவன் சொற்ற யாவையும் சோர்வு இன்றிச் சொல்லினார் ‘குற்றம் யாவையும் கோெளாடு நீங்குக; இற்றை நாள் முதல் ஆயு உண்டாக ‘என்றார். 65  

Previous          Next