Tamil Rasi Palan Today 02nd April 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  02.04.2018

இன்றைய  பஞ்சாங்கம்

02-04-2018, பங்குனி 19, திங்கட்கிழமை, துதியை திதி மாலை 04.35 வரை பின்பு தேய்பிறை திரிதியை. நாள் முழுவதும் சுவாதி நட்சத்திரம். நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. லஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள். கரிநாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சூரிய

புதன்(வ)

சுக்கி

 

 

 

திருக்கணித கிரக நிலை

02.04.2017

 

ராகு

கேது

 

செவ் சனி

 

 

குரு(வ) சந்தி  

 

 

 


இன்றைய ராசிப்பலன் – 02.04.2018

aries-single-iconமேஷம்

இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்களுக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வேலை ஆட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். பொருளாதார பிரச்சனைகள் சற்று குறையும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவதற்கான வாய்ப்பு உண்டாகும்.


cancer-single-iconகடகம்

இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை நிலவும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து சென்றால் வரவிருக்கும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பெரிய மனிதர்களின் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தின் ஆதரவு கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல பலன்களை தரும். சிலருக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.


virgo-single-iconகன்னி

இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து அதில் வெற்றியும் காண்பீர்கள். வேலையில்  உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் சற்று குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத பிரச்சினைகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் மூலம் அனுகூலம் கிட்டும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.


sagittarius-single-iconதனுசு

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் சம்பந்தமான வெளிவட்டார தொடர்பு கிடைக்கும். சேமிப்பு உயரும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தினருடன் இருந்த மாற்று கருத்துக்கள் மறையும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களில் வெளிநபர்களின் அறிமுகம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன்பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். சுபகாரியம் கைகூடும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் போது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது.


 

Telugu Rasiphalalu Today 01st April 2018

Panchangam  దిన పంచాంగము – 01-04-2018ta101

BY Astrologer Jogiparthi Koteswara Rao


చైత్రమాసము

ఆదివారము

తిది –కృష్ణ పక్ష పాడ్యమి సాయంత్రం 05.03   వరకు

నక్షత్రము – చిత్త రాత్రి తే 05.56 వరకు

అమృత గడియలు – రాత్రి 11.27 నుండి 01.03 వరకు  

దుర్ముహుర్థము-సాయంత్రం 04.33 నుండి 05.22 వరకు

యమ గండము – పగలు 12.00  నుండి 01.30 వరకు

వర్జము –పగలు 01.47 నుండి 03.23 వరకు

రాహు కాలము-సాయంత్రం 04.30 నుండి 06.00 వరకు


RasiPhalalu రాశిపలాలు 01-04-2018

aries-single-iconమేష రాశి

 చేయు పనులలో చిన్న చిన్న ఆటంకాలు లేదా ఆలస్యము జరిగే అవకాశాలు ఉన్నాయి .ప్రతి పని లోను జాప్యము జరిగి మనస్సు చికాకు పడుతుంది . నిరుత్సాహము , నిశ్రుహ ఏర్పడుతుంది . వ్యాపారస్తులకు కష్టముతో కూడుకున్న ఆదాయము ఉంటుంది . వ్ద్యర్డులకు కూడా అలాగే ఉంటుంది .ఉద్యోగస్తులకు బాగానే ఉంటుంది .స్త్రీ మూలక ధనలాభము ఉంటుంది


 taurus-single-iconవృషభ రాశి

 దైర్యము కోల్పోయి భయము ఏర్పడే అవకాశాలు ఉన్నాయి . వ్యాపారములో ధన నష్టము వచ్చే అవకాశాలు ఉన్నాయి . రావలసిన డబ్బు సమయానికి అందక కొంచం అవస్త పడే అవకాశాలు ఉన్నాయి . అప్పులు చేయ వలసి వస్తుంది . ఆరోగ్య సమస్యలు , ఔషద లేపనం ఉంటుంది . విద్యార్దులు దండనకు గురి పేడే అవకాశాలు ఉన్నాయి . ఉద్యోగస్తులకు చలనం ఉంటుంది .


gemini-single-iconమిదున రాశ

  అదికంగా కర్చు ఉంటుంది . వ్యాపార లావాదేవీలలో విబేదాలు ఏర్పడే అవకాశాలు ఉన్నాయి .అనారోగ్యం వల్ల మనస్సు ఆందోళన పడుతుంది . స్నేహితుల సహకారం పొందగలరు . ఉద్యోగస్తులకు మని వత్తిడి ఉంటుంది . విద్యార్దులకు అనులము తక్కువ ఉంటుంది . దూర ప్రయాణాలు చేయ వలసి వస్తుంది .బాగాస్తులతో ఆచి తూచి మాట్లాడటం మంచిది .


cancer-single-iconకర్కాటక రాశి

  ఉద్యోగస్తులు ప్రమోషన్  కొరకు చేయు ప్రయత్నములు  విజయ వంతమౌతాయి .సంకల్ప బలం పెరుగుతుంది . వ్యాపారస్తులకు అదిక ధన లాభం ఉంటుంది . వ్యవసాయ దారులకు శ్రమకు తగిన పలితం చేతికందుతుంది .విద్యార్దులకు కామ్పస్స్ సెలక్షనులు వచ్చే అవకాశాలు బలంగా ఉన్నాయి .స్త్రీలకూ  చాలా బాగుంటుంది .


leo-single-iconసింహ రాశి

  అభివృద్ధి కొరకు చేయు ఆలోచనలు మంచి విజయాన్ని తెచ్చి పెడతాయి . వ్యాపారస్తులకు వ్యాపారము అభివృద్ధి చెందుతుంది . ధనాదాయము బాగుంటుంది . కొత్త వ్యాపారములకు నాంది పలుకుతారు . విద్యార్దులకు మంచి అబివృద్ది ఉంటుంది . వైద్య వృత్తి వాళ్ళకు మంచి రాణింపు వస్తుంది . ఉద్యోగస్తులకు సుభ సూచనలే . స్రీలకు వస్తు ప్రాప్తి . పుత్రా సంతోషం కలుగుతుంది .


virgo-single-iconకన్యా  రాశి

  ఉద్యోగస్తులకు పదవి ఉన్నతి పొందే అవకాశాలు బలంగా ఉన్నాయి . వ్యాపారస్తులకు ధనలాభము ఉంటుంది . ప్రతి ఆలోచన కార్య రూపం దాలుస్తుంది . కొత్త వ్యాపారాలకు అనుకూలంగా ఉంటుంది . విదేశ ఉద్యోగ ప్రయత్నాలు ఫలిస్తాయి . విద్యార్దులకు తగిన ప్రోత్సాహం లబిస్తుంది . భూమికి సంబంద లవదేవిలు అనుకూలంగా ఉండక అబ్బండులుంటాయి .


libra-single-iconతులా రాశి

 తలచిన ప్రతి పని విజయ వంతమౌతుంది . స్నేహితుల సహకారముంటుంది . బాగస్తుల వలన ధనాదాయముంటుంది .విందు వినోదాలలో పాల్గొంటారు . సుభకార్య ప్రయత్నాలు మంచి పలితాన్ని ఇస్తాయి . ఉద్యోగస్తులకు అనుకూలమైన మార్పు వచ్చే అవకాశాలు ఉన్నాయి . విద్యార్దులకు నిర్లక్ష్యము ఉండే అవకాశాలు ఉన్నాయి . స్త్రీమూలక ధన లాభాముంటుంది


scorpio-single-iconవృశ్చిక రాశి

 ఆరోగ్య విషయం లో తగిన జాగ్రత్త అవసముంటుంది . ఆందోళనకు గురి అయ్యే అవకాశాలు ఉన్నాయి .దూరమునుండి  అశుభ వార్తలు వింటారు . చిన్న చిన్న ఆర్దిక ఇబ్బందులు ఉంటాయి . అప్పు చేయ వలసి వస్తుంది . ఉద్యోగస్తులకు పై అధికారుల వత్తిడి వాళ్ళ మనసు చికాకు పడుతుంది . విద్యార్దులకు భయముతో కూడుకొన్న వత్తిడి ఉంటుంది . స్త్రీలకూ మానసిక వత్తిడి ఉంటుంది .


sagittarius-single-iconధనుస్సు రాశి

 పిత్రార్జిత సంతోషకర వార్తలు వింటారు . జీవిత బాగాస్వమితో కలసి విందు వినోదాలలో పాల్గొంటారు . ఉద్యోగస్తులు ఉదోగ  సంబంద సుభ వార్తలు వింటారు . ఆర్దిక లావాదేవీలు కొంచం నిదానగా ఉంటాయి .స్త్రీదనలభము ఉంటుంది . విద్యర్డులాలో ఉత్సాహము ఉంటుంది . ముఖ్యమైన వ్యక్తులను కలుస్తారు .


capricorn-single-iconమకర రాశి

  వివాహ సంబంద వ్యవహారాలు సానుకూలంగా ఉంటాయి . దైవానుకూత ఉంటుంది . కానీ పనులలో జాప్యము  జరుగుతుంది . కొంచం బద్ధకం ఉంటుంది . గురువులన దర్శిస్తారు . బాగాస్తులతో విబేదాలు ఏర్పడే అవకాశాలు ఉన్నాయి . జాగ్రత్తగా మాసాలు కోవటం మంచిది . వీసా కొరకు ఈరోజు అనుకూలంగా ఉంటుంది . కాని ఎంత ఉన్నా  చిన్నఆందోళన మాత్రం ఉంటుంది .


aquarius-single-iconకుంబ రాశి

  గురువులను లేదా గురు సామానుల దీవెనలు పొందుతారు . సుభ వార్తలు వింటారు . సుభ కార్యాలలో పాల్గొంటారు . గృహములో వివాహ చర్చలు జరిగే అవకాశాలు ఉన్నాయి . బందువుల  రక సంతోషాన్ని కలిగిస్తుంది . ఉద్యోగస్తులకు పై అధికారుల మన్ననలు లభిస్తాయి . విందులు వినోదాలలో పాల్గొంటారు . దూర ప్రయాణాలు ధన లాభాలని ఇస్తాయి .


pisces-single-iconమీన రాశి

 ప్రతి పనిలోనూ మొండిగా ప్రవర్తించి సమస్యలు కొని తెచ్చుకొనే అవకాశాలు ఉన్నాయి .జాగ్రత్తగా మెలగుట మంచిది . వినోద యాత్రలు చేస్తారు. కుటుంబము లో చిన్న చిన్న కలహాలవల్ల మనసు వికలంగా ఉంటుంది . స్నేహితులతో గడిపే అవకాశాలు ఉన్నాయి . దైవ దర్సనం లభిస్తుంది .


 

Tamil Rasi Palan Today 01st April 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  01.04.2018

இன்றைய  பஞ்சாங்கம்

01-04-2018, பங்குனி 18, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி மாலை 05.05 வரை பின்பு தேய்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.51 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சூரிய

புதன் (வ)

சுக்கி

 

 

 

திருக்கணித கிரக நிலை

01.04.2018

ராகு

கேது

 

செவ் சனி 

 

குரு (வ)

  சந்தி

 


இன்றைய ராசிப்பலன் – 01.04.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.


cancer-single-iconகடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும்.


virgo-single-iconகன்னி

இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.


pisces-single-iconமீனம்

இன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.