Tamil Rasi Palan Today 18th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  18.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

18-03-2018, பங்குனி 04, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி மாலை 06.32 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 08.09 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. தெலுங்கு வருட பிறப்பு.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

சூரிய புதன் சுக்கி சந்தி

 

 

 

 

திருக்கணித கிரக நிலை

18.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 18.03.2018

aries-single-iconமேஷம்

இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளால் மன அமைதி குறையும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.


gemini-single-iconமிதுனம்

இன்று பணவரவு அமோகமாக இருக்கும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். சேமிப்பு உயரும்.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் சாதகமற்ற நிலை உருவாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படக்கூடும். செய்யும் செயல்களில் கவனம் தேவை. கடின உழைப்பால் மட்டுமே எதிலும் வெற்றி காண முடியும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்தால் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையாக இருப்பது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது உத்தமம். சுபகாரியங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உறவினர்கள் உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில் முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.


libra-single-iconதுலாம்

இன்று எந்த செயலையும் மன துணிவோடு செய்து முடிப்பீர்கள். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைக்கூடும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று தேவையற்ற பிரச்சினைகளால் குடும்பத்தில் நிம்மதி குறையும். வாகன பராமரிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பால் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று எந்த செயலையும் செய்து முடிப்பதற்கு சில இடையூறுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சனைகள் வரலாம். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். நண்பர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிலும் நிதானம் தேவை.


capricorn-single-iconமகரம்

இன்று எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் சுமூக உறவு ஏற்படும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் விலகும். கடன் பிரச்சனைகள் குறையும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும். உறவினர்கள் வழியில் சுப செய்தி வரும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். தொழில் விஷயமாக வெளிமாநிலத்தவர் நட்பு ஏற்படும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் உள்ளம் மகிழும் இனிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். உறவினர்கள் உதவியுடன் சுபகாரியங்கள் கைகூடும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். வீட்டுத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். சிலருக்கு ஆன்மீக பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.


 

Tamil Rasi Palan Today 17th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  17.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

17-03-2018, பங்குனி 03, சனிக்கிழமை, அமாவாசை திதி மாலை 06.41 வரை பின்பு வளர்பிறை பிரதமை. பூரட்டாதி நட்சத்திரம் இரவு 07.43 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் இரவு 07.43 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

சூரிய புதன் சுக்கி

 

 

 

சந்தி

திருக்கணித கிரக நிலை

17.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 17.03.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிக்கனமாக செயல்பட்டால் குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நல்ல படியாக இருக்கும். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்கள் வசூலாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்து விஷயமாக அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்கும். வேலையில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு மனதில் குழப்பம் தேவையற்ற கவலை உண்டாகும். உத்தயோகத்தில் வீண் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரிடம் தேவைற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 1.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மதியத்திற்கு பிறகு மன அமைதி ஏற்படும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு பகல் 1.31 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தொழில் வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். கடன்கள் குறையும். பொன் பொருள் சேரும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் தோன்றும். சுபகாரிய முயற்சிகளில் சிறு தடைக்குப்பின் முன்னேற்றம் உண்டாகும்.  வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகி லாபகரமான பலன்களை அடைவீர்கள். சேமிப்பு உயரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் செலவுகள் அதிகமாகும். சேமிப்பு கரையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு தாராள தனவரவு உண்டாகும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழிலில் இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார். பிள்ளைகளுக்கு படிப்பில் ஈடுபாடு உண்டாகும். இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். புத்திர வழியில் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் அலைச்சலுக்குப் பின் அனுகூலம் கிட்டும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும். நினைத்த காரியம் நிறைவேறும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். எதையும் யோசித்து செய்வது நல்லது. உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்கள் நவீன பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வருமானம் இரட்டிப்பாகும்.


 

Tamil Rasi Palan Today 16th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  16.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

16-03-2018, பங்குனி 02, வெள்ளிக்கிழமை, தேய்பிறை சதுர்த்தசி திதி மாலை 06.18 வரை பின்பு அமாவாசை. சதயம் நட்சத்திரம் மாலை 06.44 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. அம்மன் வழிபாடு நல்லது. 

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

சூரிய புதன் சுக்கி

 

 

 

சந்தி

திருக்கணித கிரக நிலை

16.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 16.03.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் பணி சுமை குறையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். பயணங்களால் அனுகூலம் கிட்டும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையில் உங்கள் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி வரும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். பேச்சில் நிதானம் தேவை.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சேமிப்பு உயரும்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி பெற்று மன மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு அக்கம் பக்கத்தினரால் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை தோன்றும். விட்டு கொடுத்து நடந்து கொண்டால் மன அமைதி உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகமாகலாம். தொழிலில் மந்த நிலை ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். கடன்கள் சற்று குறையும். தெய்வ வழிபாடு நல்லது.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களது பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற பலன் கிட்டும். வருமானம் பெருகும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்களுடன் பகை விலகி நட்பு ஏற்படும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழில் வளர்ச்சிக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். உடன் பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வராத பழைய கடன்கள் வசூலாகும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலப்பலன் கிட்டும்.


 

Tamil Rasi Palan Today 15th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  15.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

15-03-2018, பங்குனி 01, வியாழக்கிழமை, திரியோதசி திதி மாலை 05.19 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. அவிட்டம் நட்சத்திரம் மாலை 05.12 வரை பின்பு சதயம். சித்தயோகம் மாலை 05.12 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

சூரிய புதன் சுக்கி

 

 

 

சந்தி

திருக்கணித கிரக நிலை

15.03.2018

ராகு

கேது

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 15.03.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். சிலருக்கு வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனஉறுதியோடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சனைகள் விலகும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களினால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்ப்பது நல்லது.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். சேமிப்பு உயரும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சனை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தினரிடம் ஒற்றுமை குறைவு உண்டாகலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் பிரச்சினைகள் குறையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் வீண் விரயங்கள் ஏற்படலாம். நண்பர்கள் வழியில் சிறுசிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. எதிர்பாராத  பணவரவு மகிழ்ச்சியை அளிக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். புதிய முயற்சிகளில் கவனம் தேவை.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.


pisces-single-iconமீனம்

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மன சங்கடங்கள் ஏற்படும். உறவினர்களின் வாக்குவாதங்கள் மன உளைச்சலை உண்டாக்கும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் அடைவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிட்டும்.


 

Tamil Rasi Palan Today 14th March 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.03.2018

இன்றைய  பஞ்சாங்கம்

14-03-2018, மாசி 30, புதன்கிழமை, துவாதசி திதி பகல் 03.46 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. திருவோணம் பகல் 03.06 வரை நட்சத்திரம் பின்பு அவிட்டம். சித்தயோகம் பகல் 03.06 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். பிரதோஷம். காருடையான் நோன்பு. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

புதன் சுக்கி

 

 

 

சூரிய

திருக்கணித கிரக நிலை

14.03.2018

ராகு

கேது சந்தி

 

செவ் சனி

 

குரு(வ)

 


இன்றைய ராசிப்பலன் – 14.03.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் விலகி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் உடல்நிலையில் சோர்வும் சுறுசுறுப்பின்மையும் தோன்றும். எந்த ஒரு வேலையிலும் ஈடுபாடின்றி செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். வேலையில் புது பொலிவுடனும், தெம்புடனும் செயல்படுவீர்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். புதிய பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களின் பலமும் வலிமையும் கூடும். கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடித்துவிடுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்காத லாபம் கிடைக்கும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப்பலன் கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். உறவினர்கள் உதவியால் உங்கள் பிரச்சினைகள் குறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு திறமைகேற்ற உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் அமையும். வியாபாரம் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும். சேமிப்பு உயரும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். ஆடம்பர பொருட்களால் வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியை தரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களோடு ஒற்றுமையாக செயல்பட்டு நற்பலன் அடைவீர்கள். உற்றார் உறவினர்களால் ஆதாயங்கள் உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகும். உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுபகாரியங்கள் கைகூடும்.