இராமன் சுக்கிரீவனை வினவுதல்

4553. ‘வகையும், மானமும்,
மாறு எதிர்ந்து ஆற்றுறும்
பகையும் இன்றி,
நிரந்து, பரந்து எழு
தகைவு இல் சேனைக்கு
அவதி சமைந்தது ஓர்
தொகையும் உண்டு கொலோ? ‘
எனச் சொல்லினான்.
1

சுக்கிரீவன் மறுமொழி (4554 – 4555)

4554. ‘ஏற்ற வெள்ளம்
எழுபதின் இற்ற ‘என்று
ஆற்றலாளர்
அறிவின் அமைத்தது ஓர்
மாற்றம் உண்டு; அது
அல்லது, மற்றும் ஓர்
தோற்றம் என்று இதற்கு
எண்ணும் முன் சொல்லுமோ?
2

4555. ‘ஆறு பத்து எழு கோடி அனீகருக்கு
ஏறு கொற்றத் தலைவர் இவர்க்குமுன்
கூறு சேனைப் பதி கொடுங் கூற்றையும்
நீறு செய்திடும் நீலன் ‘என்று ஓதினான்.
3

இனிச் செய்வன சிந்திக்க என இராமன் கூறல்

4556. என்று த்த எரிகதிர் மைந்தனை
வென்றி வில் கை இராமன் விருப்பினால்
நின்று இனிப் பல பேசி என்னோ? நெறி
சென்று இழைப்பன சிந்தனை செய்க என்றான்.
4

சுக்கிரீவன் அனுமனுக்குக் கூறுதல் (4557-4561)

4557. அவனும் அண்ணல் அனுமனை ‘ஐய! நீ
புவனம் மூன்றும் நின் தாதையின் புக்கு உழல்
தவன வேகத்தை; ஓர்கிலை தாழ்த்தனை;
கவன மாக் குரங்கின் செயல் காண்டியோ?
5

4558. ‘ஏகி ஏந்திழை தன்னை இருந்துழி
நாகம் நாடுக; நால் நிலம் நாடுக;
போக பூமி புகுந்திட வல்லநின்
வேகம் ஈண்டு வெளிப்பட வேண்டுமால்.
6

4559. ‘தனெ் திசைக்கண் இராவணன் சேண்நகர்
என்று இசைக்கின்றது என் அறிவு இன்னணம்;
வன் திசைக்கு இனி மாருதி நீ அலால்
வென்றிசைக்கு உரியார் பிறர் வேண்டுமோ?
7

4560. ‘வள்ளல் தேவியை வஞ்சித்து வௌவிய
கள்ள வாள் அரக்கன் செலக் கண்டது
தெள்ளியோய்! “அது தனெ் திசை என்பது ஓர்
உள்ளமும் எனக்கு உண்டு “ என உன்னுவாய்.
8

4561. ‘தாரை மைந்தனும் சாம்பனும் தாம் முதல்
வீரர் யாவரும் மேம்படும் மேன்மையால்
சேர்க நின்னொடும் ‘ திண் திறல் சேனையும்
பேர்க வெள்ளம் இரண்டொடும் பெற்றியால்.
9

பிற திசைகளில் சுடேணனன் முதலியோரை அனுப்புதல்

4562. ‘குட திசைக்கண் சுடேணன்; குபேரன் வாழ்
வட திசைக்கண் சதவலி; வாசவன்
இட திசைக்கண் வினதன்; விறல் தரு
படையொடு ‘உற்றுப் படர்க எனப் பன்னினான்.
10

சுடேணனன் முதலியோர்க்கும் சுக்கிரீவன் கட்டளை

4563. ‘வெற்றி வானர வெள்ளம் இரண்டொடும்
சுற்றி ஓடித் துருவி ஒரு மதி
முற்று உறாத முன் முற்றுதிர் இவ் இடை;
கொற்ற வாகையினீர்! ‘எனக் கூறினான்.
11

சுக்கிரீவன் தனெ் திசையில் செல்வோர்க்கு வழி கூறல் (4564-4584)

விந்தமலை

4564. ‘ஈண்டு நின்று எழுந்து ஈர் ஐந்து நூறு எழில்
தூண்டு சோதிக் கொடுமுடி தோன்றலால்
நீண்ட நேமி கொல் ஆம் என நேர் தொழ
வேண்டும் விந்த மலையினை மேவுவீர்.
12

நருமதையாறு

4565. ‘தேடி அவ் வரை தீர்ந்தபின் தேவரும்
ஆடுகின்றது அறுபதம் ஐந்தினைப்
பாடுகின்றது பல மணி ஆல் இருள்
ஓடுகின்ற நருமதை உன்னுவீர்.
13

ஏமகூடமலை

4566. ‘வாம மேகலை வானவர் மங்கையர்
காம ஊசல் களி இசைக் கள்ளினால்
தூம மேனி அசுணம் துயில்வு உறும்
ஏம கூடம் எனும் மலை எய்துவீர்.
14

வடபெண்ணை

4567. ‘நொய்தின் அம்மலை நீங்கி நுமரொடும்
பொய்கையின் கரை பிற்படப் போதிரால்;
செய்ய பெண்ணைக் கரிய பெண்ணைச் சில
வைகல் தேடிக் கடிது வழிக் கொள்வீர்.
15

தண்டகம்

4568. ‘தாங்கும் ஆர் அகில் தருவளர் சந்தனம்
வீங்கு வேலி விதர்ப்பமும் மெல் என
நீங்கி நாடு நெடியன பிற்படத்
தேங்கு வார்புனல் தண்டகம் சேர்திரால்.
16

முண்டகத்துறை (4569-4571)

4569. பண்டு அகத்தியன் வைகியதாப் பகர்
தண்டகத்தது தாபதர் தம்மை உள்
கண்டு அகத்துயர் தீர்வது காண்டிரால்
முண்டகத் துறை என்று ஒரு மொய் பொழில்.
17

4570. ஞாலம் நுங்குற நல் அறத்தோர் பொருள்
போல நின்று பொலிவது பூம்பொழில்
சீல மங்கையர் வாய் எனத் தீம் கனி
காலம் இன்றிக் கனிவது காண்டிரால்.
18

4571. ‘நயனம் நன்கு இமையார்; துயிலார் நனி
அயனம் இல்லை அருக்கனுக்கு அவ்வழி;
சயன மாதர் கலவித் தலைத் தரும்
பயனும் இன்பமும் நீரும் பயக்குமால்.
19

பாண்டுவின் மலை

4572. ‘ஆண்டு இறந்தபின் அந்தரத்து இந்துவைத்
தீண்டுகின்றது; செங்கதிர்ச் செல்வனும்
ஈண்டு உறைந்து அலது ஏகலம் ‘என்பது
பாண்டுவின் மலை என்னும் பருப்பதம்.
20

கோதாவரி

4573. முத்து ஈர்த்துப் பொன் திரட்டி மணி உருட்டி,
முது நீத்தம் முன்றில் ஆயர்
மத்து ஈர்த்து மரன் ஈர்த்து, மலை ஈர்த்து
மான் ஈர்த்து வருவது; யார்க்கும்
புத்து ஈர்த்திட்டு அலையாமல், புலவர் நாடு
உதவுவது; புனிதம் ஆன
அத் தீர்த்தம் அகன் கோதாவரி என்பர்;
அம்மலையின் அருகிற்று அம்மா!
21

சுவண நதி

4574. அவ் ஆறு கடந்து அப்பால், அறத்து ஆறே
எனத் தெளிந்த அருளின் ஆறும்,
வெவ் ஆறு ஆம் எனக் குளிர்ந்து, வெயில் இயங்கா
வகை இலங்கும் விரிபூஞ் சோலை,
எவ் ஆறும் உறத் துவன்றி, இருள் ஓட
மணி இமைப்பது, இமையோர் வேண்ட,
தவெ் ஆறு முகத்து ஒருவன், தனிக் கிடந்த
சுவணத்தைச் சேர்திர் மாதோ.
22

சந்திரகாந்தம், கொங்கவை, குலிந்தம்

4575. சுவணநதி கடந்து, அப்பால், சூரிய காந்தகம்
என்னத் தோன்றி, மாதர்
கவண் உமிழ்கல் வெயில் இயங்கும் கனவரையும்,
சந்திர காந்தகமும், காண்டீர்
அவண் அவை நீத்து ஏகியபின், அகல்நாடு
பல கடந்தால், அனந்தன் என்பான்
உவண பதிக்கு ஒளித்து உறையும் கொங்கணமும்,
குலிந்தமும், சென்று உறுதிர் மாதோ.
23

அருந்ததி மலை

4576. “அரன் அதிகன், உலகு அளந்த அரி அதிகன் “
என்று க்கும் அறிவு இலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே போல்
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுரநதியின் அயலது, வான் தோய் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய அருந்ததி ஆம்
நெடுமலையை வணங்கி அப்பால்.
24

4577. அஞ்சுவரும் வெஞ் சுரனும், ஆறும், அகன்
பெருஞ் சுனையும் அகில் ஓங்கு ஆரம்
மஞ்சு இவரும் நெடுங் கிரியும், வளநாடும்,
பிற்படப் போய் வழிமேல் சென்றால்,
நஞ்சு வரும் மிடற்று அரவுக்கு, அமிழ்துநனி
கொடுத்து ஆயைக் கலுழன் நண்ணும்
எஞ்சு இல் மரகதப் பொருப்பை இறைஞ்சி, அதன்
புறம் சார ஏகிர் மாதோ.
25

4578. ‘வடசொற்கும் தனெ்சொற்கும் வரம்பிற்றாய்
நான்மறையும் மற்றை நூலும்
இடை சொற்ற பொருட்கு எல்லாம் எல்லையதாய்
நல் அறத்துக்கு ஈறாய் வேறு
புடை சுற்றுந் துணையின்றிப் புகழ் பொதிந்த
மெய்யேபோல் பூத்து நின்ற
அடை சுற்றும் தண்சாரல் ஓங்கிய
வேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ.
26

4579. ‘இருவினையும் இடைவிடா எவ் வினையும்,
இயற்றாதே, இமையோர் ஏத்தும்
திருவினையும், இடுபதம் தேர் சிறுமையையும்,
முறை ஒப்பத் தெளிந்து நோக்கி,
“கருவினையது இப் பிறவிக்கு “ என்று உணர்ந்து அங்கு
அது களையும் கடை இல் ஞானத்து
அருவினையின் பெரும் பகைஞர் ஆண்டு உளர்; ஈண்டு
இருந்தும் அடி வணங்கற் பாலார்.
27

4580. ‘தோதவத்தித் தூய்மறையோர் துறை ஆடும்
நிறை ஆறும், சுருதித் தொல் நூல்
மாதவத்தோர் உறைவிடனும், மழை உறங்கும்
மணித்தடனும், வான மாதர்
கீதம் ஒத்த கின்னரங்கள் இன் நரம்பு
வருடு தொறும் கிளக்கும் ஓதை
போதகத்தின் மழக் கன்றும் புலிப் பறழும்
உறங்கு இடனும் பொருந்திற்று அம்மா.
28

4581. ‘கோடு உறு மால் வரையதனைக் குறுகுதிரேல்,
உம் நெடிய கொடுமை நீங்கி
வீடு உறுதிர்; ஆதலினால் விலங்குதிர்;
அப்புறத்து நீர் மேவு தொண்டை
நாடு உறுதிர்; உற்று, அதனை நாடுறுதிர்
அதன் பின்னை நளிநீர்ப் பொன்னிச்
சேடு உறு தண்புனல் தயெ்வத் திருநதியின்
இருகரையும் தரெிதிர் மாதோ.
29

4582. துறக்கம் உற்றார் மனம் என்னத் துறைகெழுநீர்
சோணாடு புகுந்தோர், தொல்லை
மறக்கம் உற்றார் அகம் மலர்ந்து மறைந்து உறைவர்;
அவ் வழி நீர் வல்லை ஏகி,
உறக்கம் உற்றார் கனவு உற்றார் என
உணர்வினொடும் ஒதுங்கி, மணியால் ஓங்கல்
பிறக்கம் உற்ற மலைநாடு நாடி, அகன்
தமிழ்நாட்டில் பெயர்திர் மாதோ.
30

4583. தனெ் தமிழ்நாட்டு அகன் பொதியில் திருமுனிவன்
தமிழ்ச் சங்கம் சேர்கிற்றீரேல்
என்றும் அவன் உறைவிடமாம் ஆதலினான்
அம்மலையை இடத்திட்டு ஏகிப்,
பொன் திணிந்த புனல் பெருகும் பொருநை எனும்
திருநதி பின்பு ஒழிய, நாகக்
கன்று வளர் தடஞ்சாரல் மயேந்திர மா
நெடுவரையும், கடலும், காண்டிர்.
31

4584. ‘ஆண்டு கடந்து, அலை உவரிக்கு அப்புறத்தும்
ஒரு திங்கள் அவதி ஆகத்
தேண்டி, இவண் வந்து அடைதிர்; விடை கோடிர்,
கடிது ‘என்னச் செப்பும் வேலை,
நீண்டவனும், மாருதியை நிறை அருளால்
உற நோக்கி, ‘நீதி வல்லோய்!
காண்டி எனின், குறி கேட்டி! ‘என, வேறு
கொண்டு இருந்து கழறல் உற்றான்.
32

இராமன் சீதையின் அடையாளங்களை அனுமனுக்குக் கூறியது (4585-4617)

அடியின் அமைப்பு

4585. பாற்கடல் பிறந்த செய்ய
பவளத்தைப் பஞ்சி ஊட்டி,
மேற்பட மதியம் சூட்டி,
விரகுற நிரைத்த, வெய்ய;
கால் தகை விரல்கள் ஐய!
கமலமும் பிறவும் எல்லாம்
ஏற்பில என்பது அன்றி,
இணை அடிக்கு உவமை உண்டோ?
33

புறவடி

4586. நீ மெய்யா உணர்தி ஐய!
நிரைவளை மகளிர்க்கு எல்லாம்
வாய்மையால் உவமையாக
மதியறி புலவர் வைத்த
ஆமை ஆம் என்ற போதும்,
அல்லன சொல்லினாலும்
யாம யாழ் மழலையாள் தன்
புறவடிக்கு இழுக்கு மன்னோ.
34

கணைக்கால்

4587. வினைவரால் அரிய கோதைப்
பேதை மென் கணைக்கால், மெய்யே
நினைவரால் அரிய; இன்னும்
நேர்படப் புலவர் போற்றும்
சினை வரால், பகழி ஆவம்,
நெல் சினை யேனும் செப்பம்;
எனைவரால் பகரும் ஈட்டம்,
யான் த்து இன்பம் என்னோ?
35

தொடை

4588. அரம்பை என்று, அளக மாதர்
குறங்கினுக்கு அமைந்த ஒப்பின்
வரம்பையும் கடந்த போது,
மற்று வகுக்கல் ஆமோ?
நரம்பையும், அமிழ்தம் நாறும்
நறவையும், நல்நீர்ப் பண்ணைக்
கரும்பையும் கடந்த சொல்லாள்,
கவாற்கு இது கருது கண்டாய்.
36

அல்குல்

4589. ‘வார் ஆழிக் கலசக் கொங்கை
வஞ்சிபோல் மருங்குலாள் தன்
தார் ஆழிக் கலைசார் அல்குல்
தடம் கடற்கு உவமை தக்கோய்!
பார் ஆழி பிடரில் தங்கும்
பாந்தளும் பனி வென்று ஓங்கும்
ஓர் ஆழித் தேரும் ஒவ்வா
உனக்கு நான் ப்பது என்னோ. ‘
37

இடை

4590. ‘சட்டகம் தன்னை நோக்கி,
யாரையும் சமைக்கத் தக்காள்
இட்டிடை இருக்கும் தன்மை
இயம்பக் கேட்டு உணர்தி என்னின்,
கட்டுரைத்து உவமை காட்ட,
கண் பொறி கதுவா; கையில்
தொட்ட எற்கு உணரலாம்; மற்று
உண்டு எனும் சொல்லும் இல்லை. ‘
38

வயிறு

4591. ‘ஆல் இலை, படிவம் தீட்டும்
ஐய நுண் பலகை, நொய்ய
பால் நிறத் தட்டம், வட்டக்
கண்ணடி, பலவும் இன்ன,
போலும் என்று த்த போதும்,
புனைந்துரை; பொதுமை பார்க்கின்,
ஏலும் என்று இசைக்கின், ஏலா;
இது, வயிற்று இயற்கை; இன்னும். ‘
39

உந்தி

4592. ‘சிங்கல் இல் சிறு கூதாளி,
நந்தியின் திரள் பூ சேர்ந்த
பொங்கு பொன் துளை என்றாலும்
புல்லிது பொதுமைத்து ஆமால்;
அங்கு அவள் உந்தி ஒக்கும்
சுழி எனக் கணித்தது உண்டால்;
கங்கையை நோக்கிச் சேறி
கடலினும் நெடிது கற்றோய்! ‘
40

வயிற்றிடை மயிரொழுங்கு

4593. மயிர் ஒழுக்கு என ஒன்று உண்டால்,
வல்லி சேர் வயிற்றில்; மற்று என்
உயிர் ஒழுக்கு; அதற்கு வேண்டும்
உவமை ஒன்று க்க வேண்டின்,
செயிர் இல் சிற்றிடையாய் உற்ற
சிறு கொடி நுடக்கம் தீரக்
குயில் உறுத்து அமைய வைத்த
கொள் கொம்பு என்று உணர்ந்து கோடி.
41

வயிற்று மடிப்பு

4594. “‘அல்லி ஊன்றிடும் “ என்று அஞ்சி,
அரவிந்தம் துறந்தாட்கு, அம்பொன்
வல்லி மூன்று உளவால், கோல
வயிற்றில்; மற்று அவையும், மார
வில்லி, மூன்று உலகின் வாழும்
மாதரும் தோற்ற மெய்ம்மை
சொல்லி ஊன்றிய வாம் வெற்றி
வரையெனத் தோன்றும் அன்றே. ‘
42

கொங்கை

4595. ‘செப்பு என்பென்; கலசம் என்பென்;
செவ் இள நீரும் தேர்வென்;
துப்பு ஒன்று திரள் சூது என்பென்;
சொல்லுவென் தும்பிக் கொம்பும்;
தப்பு இன்றிப் பகலின் வந்த
சக்கர வாகம் என்பென்;
ஒப்பு ஒன்றும் முலைக்குக் காணேன்,
பல நினைந்து உலைவென் இன்னும். ‘
43

தோள்

4596. ‘கரும்பு கண்டாலும் மாலைக்
காம்பு கண்டாலும் ஆலி
அரும்பு கண் தாரை சோர்வது
அன்றி வேறு அறிவது உண்டோ?
கரும்பு கண்டு ஆலும் கோதை
தோள் நினைந்து உவமை சொல்ல
இரும்பு கண்டு அனைய நெஞ்சம்,
எனக்கு இலை; இசைப்பது என்னோ? ‘
44

முன்கை

4597. “‘முன்கையே ஒப்பது ஒன்றும்
உண்டு, மூன்று உலகத்துள்ளும் “
என் கையே இழுக்கம் அன்றே?
இயம்பினும், காந்தள் என்றல்,
வன் கை யாழ் மணிக் கை என்றல்,
மற்று ஒன்றை உணர்த்தல் அன்றி
நன் கையாள் தடக்கை ஆமோ?
நலத்தின்மேல் நலமும் உண்டோ? ‘
45

அகங்கை

4598. ஏலக் கொண்டு அமைந்த பிண்டி
இளந்தளிர் கிடக்க; யாணர்க்
கோலக் கற்பகத்தின் காமர்
குழை, நறுங் கமல மென்பூ,
நூல் ஒக்கும் மருங்குலாள் தன்
நூபுரம் புலம்பும் கோலக்
காலுக்குத் தொலையும் என்றால்,
கைக்கு ஒப்பு வைக்கலாமோ?
46

நகம்

4599. வெள்ளிய முறுவல், செவ்வாய்,
விளங்கு இழை இளம் பொன் கொம்பின்
வள் உகிர்க்கு உவமை நம்மால்
மயர்வு அற வகுக்கலாமோ?
“எள்ளுதிர் நீரே மூக்கை “
என்று கொண்டு, இவறி, என்றும்,
கிள்ளைகள், முருக்கின் பூவைக்
கிழிக்கு மேல், க்கலாமோ?
47

கழுத்து

4600. அங்கையும் அடியும் கண்டால்
அரவிந்தம் நினையு மாபோல்,
செங்களி சிதறி, நீலம்
செருக்கிய தயெ்வ வாள் கண்
மங்கைதன் கழுத்தை நோக்கி,
வளர் இளங் கமுகும், வாரிச்
சங்கமும், நினைதி யாயின்,
நவை என்று துணிதி தக்கோய்!
48

வாயிதழ் (4601-4602)

4601. ‘பவளமும், கிடையும், கொவ்வைப்
பழனும், பைங் குமுதப் பூவும்,
துவள்வில இலவம், கோபம்,
முருக்கு என்று இத் தொடக்கம் சாலத்
தவளம் ‘என்று க்கும் வண்ணம்
சிவந்து, தேன் ததும்பும் ஆயின்,
குவளை உண்கண்ணி வண்ண
வாய் அது; குறியும் அஃதே.
49

4602. ‘சிவந்தது ஓர் அமிழ்தம் இல்லை;
தேன் இல்லை உள என்றாலும்,
கவர்ந்தபோது அன்றி, உள்ளம்
நினைப்ப ஓர் களிப்பு நல்கா;
பவர்ந்த வாள் நுதலினாள்தன்
பவள வாய்க்கு உவமை பாவித்து
உவந்தபோது, உவந்த வண்ணம்
த்தபோது, த்தது ஆமோ? ‘
50

பல்

4603. ‘முல்லையும், முருந்தும், முத்தும்
முறுவல் என்று த்தபோது,
சொல்லையும் அமிழ்தும் பாலும் தேனும்
என்று க்கத் தோன்றும்,
அல்லது ஒன்று ஆவது இல்லை;
அமிழ்திற்கும் உவமை உண்டோ?
வல்லையேல் அறிந்து கோடி
மாறு இலா ஆறு சான்றோய்!
51

மூக்கு

4604. ஓதியும் எள்ளும் தொள்ளைக்
குமிழும் மூக்கு ஒக்கும் என்றால்
சோதிசெய் பொன்னும் மின்னும்
மணியும்போல் துளங்கித் தோன்றா;
ஏதுவும் இல்லை; வல்லோர்
எழுதுவோர்க்கு எழுத ஒண்ணா
நீதியை நோக்கி நீயே
நினைதியால், நெடிது காண்பாய்!
52

காது

4605. ‘வள்ளை கத்தரிகை வாம
மயிர்வினைக் கருவி, என்ன,
பிள்ளைகள் ப்பது அல்லால்
பெரியவர் க்கின் பித்தாம்;
வெள்ளிவெண் தோடு செய்த
விழுத்தவம் விளைந்தது என்றே
உள்ளுதி காதை; அல்லால்,
உவமைக்கும், உவமை உண்டோ?
53

கண்

4606. பெரியவாய்ப் பரவை ஒவ்வா;
பிறிது ஒன்று நினைந்து பேச
அரியவாய், ஒருவர் உள்ளத்து
அடங்குவ அல்ல; உண்மை
தரெிய ஆயிரம் கால் நோக்கின்
தரெிவில; தயெ்வம் என்னக்
கரிய ஆய், வெளிய ஆகும்
வாள்தடங் கண்கள் அம்மா.
54

புருவம்

4607. கேள் ஒக்கின் அன்றி ஒன்று
கிளத்தினால் கீழ்மைத்து ஆமால்;
கோள் ஒக்கும் என்னின் அல்லால்
குறி ஒப்பக் கூறிற்று ஆமோ?
வாள் ஒக்கும் வடி கணாள் தன்
புருவத்துக்கு உவமை வைக்கின்,
தாள் ஒக்க வளைந்து நிற்ப
இரண்டு இல்லை, அநங்க சாபம்.
55

4608. நல்நாளும் நளினம் நாணும்
நளிர் அடி நுதலை நாடிப்,
பல் நாளும் பன்னி ஆற்றா
மதி எனும் பண்பது ஆகி,
முன்நாளின் முளை வெண் திங்கள்
முழுநாளும் குறையே ஆகி,
எந் நாளும் வளராது என்னின்
இறை ஒக்கும் இயல்பிற்று ஆமால்.
56

அளகம்

4609. வனைபவர் இல்லை அன்றே
வனத்துள் நாம் வந்த பின்னை?
அனையன எனினும் அந்த
அழகுக்கு ஓர் அழிவு உண்டாகா;
வினை செயக் குழன்ற அல்ல;
விதிசெய விளைந்த; நீலம்
புனைமணி அளகம் என்றும்
புதுமையாம்; உவமை பூணா.
57

முகம்

4610. ‘கொண்டலின் குழவி, ஆம்பல்,
குனிசிலை, வள்ளை, கொற்றக்
கெண்டை, ஒண் தரளம், என்று இக்
கேண்மைய கிடந்த திங்கள்
மண்டலம் வதனம் என்று
வைத்தனன், விதியே; நீ அப்
புண்டரீகத்தை உற்ற
பொழுது அது பொருந்தி ஓர்வாய் ‘
58

கூந்தல்

4611. ‘காரினைக் கழித்துக் கட்டி,
கள்ளினோடு ஆவி ஊட்டி,
பேர் இருள் பிழம்பு தோய்த்து,
நெறிவு உறீஇப் பிறங்குகற்றைச்
சோர் குழல் தொகுதி என்று
சும்மை செய்தனையது அம்மா!
நேர்மையைப், பருமை செய்த
நிறைநறுங் கூந்தல் நீத்தம்.
59

4612. ‘புல் இதழ் கமலத் தயெ்வப்
பூவிற்கும் உண்டு; பொற்பின்
எல்லையின் மதிக்கும் உண்டாம்
களங்கம், என்று க்கும் ஏதம்;
அல்லவும் சிறிது குற்றம்
அகன்றில; அன்னம் அன்ன
நல் இயலாளுக்கு எல்லாம்
நலன் அன்றிப் பிறிது உண்டு அன்றால். ‘
60

4613. ‘மங்கையர்க்கு ஓதி வைத்த
இலக்கணம் வண்ண வாசப்
பங்கயத் தவட்கும் ஐயா!
நிரம்பல; பற்றி நோக்கின்
செங்கயல் கருங்கண் செவ்வாய்த்
தேவரும் வணங்கும் தயெ்வக்
கொங்கை அக்குயிலுக்கு ஒன்றும்
குறைவு இலை குறியும் அஃதே.
61

சொல்

4614. ‘குழல் படைத்து யாழைச் செய்து
குயிலொடு கிளியும் கூட்டி,
மழலையும் பிறவும் தந்து
வடித்த கைம்மலரின் மேலான்,
இழைபொரும் இடையினாள் தன்
இன்சொற்கள் இயையச் செய்தான்;
பிழையிலது உவமை காட்டப்
பெற்றிலன்; பெறும் கொல் இன்னும்? ‘
62

4615. ‘வான் நின்ற உலகம் மூன்றும்
வரம்பு இன்றி வளர்ந்த வேனும்,
நா நின்ற சுவை மற்று ஒன்றோ
அமிழ்து அன்றி நல்லது இல்லை;
மீன் நின்ற கண்ணினாள்தன்
மென்மொழிக்கு உவமை வேண்டின்,
தேன் ஒன்றோ? அமிழ்தம் ஒன்றோ?
அவை செவிக்கு இன்பம் செய்யா, ‘
63

நடை

4616. ‘பூ வரும் மழலை அன்னம்,
புனை மடப் பிடி, என்று இன்ன,
தேவரும் மருளத் தக்க
செலவின எனினும் தேறேன்;
பாவரும் கிழமைத் தொன்மைப்
பருணிதர் தொடுத்த, பத்தி
நாவரும் கிளவிச் செவ்வி
நடைவரு நடையள் நல்லோய்! ‘
64

நிறம்

4617. ‘எந்நிறம் க்கேன்? மாவின்
இளநிறம் முதிரும்; மற்றைப்
பொன் நிறம் கருகும்; என்றால்,
மணிநிறம் உவமை போதா;
மின் நிறம் நாணி எங்கும்
வெளிப்படா ஒளிக்கும்; வேண்டின்,
தன் நிறம் தானே ஒக்கும்;
மலர்நிறம் சமழ்க்கும் அன்றே! ‘
65

உவமையற்றவளே சீதை

4618. “மங்கையர் அவளை ஒப்பார்
மற்று உளர் அல்லர் “ என்னும்
சங்கையில் உள்ளந் தானே
சான்று எனக் கொண்டு சான்றோய்!
அங்கு அவள் நிலைமை எல்லாம்
அளந்து அறிந்து, அருகு சார்ந்து,
திங்கள் வாள் முகத்தினாட்குச்
செப்பு எனப் பின்னும் செப்பும்.
66

சீதைக்குக் கூறவேண்டிய அடையாளச் செய்திகள்

4619. ‘முன்னை நாள் முனியொடும்
முதிய நீர் மிதிலைவாய்ச்
சென்னிநீள் மாலையான்
வேள்வி காணிய செல
அன்னம் ஆடும் துறைக்கு
அருகு நின்றாளை அக்
கன்னி மாடத்திடைக்
கண்டதும் கழறுவாய்.
67

4620. “‘வரை செய்தாள் வில் இறுத்தவன்
அ மாமுனியொடும்
விரசினான் அல்லனேல்
விடுவல்யான் உயிர் ‘‘ எனக்
கரைசெயா வேலையிற்
பெரிய கற்பினள் தரெிந்து
செய்தாள்; அஃது எலாம்
உணர, நீ செய்வாய். ‘
68

4621. ‘சூழி மால் யானையின்
துணை மருப்பு இணை எனக்
கேழ் இலா வனமுலைக்
கிரி சுமந்து இடைவது ஓர்
வாழி வான் மின் இளங்
கொடியின் வந்தாளை, அன்று,
ஆழியான் அரச அவை
கண்டதும் அறைகுவாய்.
69

4622. “‘முன்புநான் அறிகிலா
முனிநெடுங் கானிலே,
என்பினே போதுவான்
நினைதியோ, ஏழை நீ?
இன்பம் ஆய், ஆர் உயிர்க்கு
இனியை ஆயினை, இனித்
துன்பம் ஆய் முடிதியோ? ‘‘
என்றதும், சொல்லுவாய். ‘
70

4623. “‘ஆன பேர் அரசு இழந்து
அடவி சேர்வாய்; உனக்கு
யான் அலாதன எலாம்
இனியவோ? இனி ‘‘ எனா
மீன் உலாம் நெடுமலர்க்
கண்கள் நீர் விழ, விழுந்து,
ஊன் இலா உயிரின் வெந்து,
அயர்வதும் செய்வாய். ‘
71

4624. ‘மல்லல் மாநகர் துறந்து
ஏகும் நாள், மதி தொடும்
கல்லின் மாமதில் மணி
கடை கடந்திடுதல் முன்,
“எல்லை தீர்வு அரிய
வெங்கானம் யாதோ “ எனச்
சொல்லினாள்; அஃது எலாம்
உணர, நீ சொல்லுவாய். ‘
72

இராமன் மோதிரம் அளிக்கப்பெற்று அனுமன் போதல

4625. ‘இனையவாறு செயா,
‘இனிதின் ஏகுதி ‘எனா,
வனையும் மாமணி நல்
மோதிரம் அளித்து, ‘அறிஞ! நின்
வினை எலாம் முடிக! ‘எனா
விடை கொடுத்து உதவலும்,
புனையும் வார் கழலினான்
அருெளாடும், போயினான். ‘
73

4626. அங்கதக் குரிசிலோடு,
அடு சினத்து உழவராம்
வெங்கதத் தலைவரும்
விரிகடல் படையொடும்,
பொங்குவில் தலைவரைத்
தொழுது, முன்போயினார்
செங்கதிர்ச் செல்வனைப்
பணிவுறும் சென்னியார்.
74

 

Previous          Next