1. உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

2. சித் குணத்தர் தெரிவு அரும் நல் நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றனுள்
முன் குணத்தவரே முதலோர் அவர்
நல் குணக் கடல் ஆடுதல் நன்று! அரோ.

3. ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றலர் பற்று இலார்.

Next