அநுமன் ஆரவாரம் இராவணன் செவியில் விழுதல்

5597. அருவரை முழையில் முட்டும்
அசனியின் இடிப்பும், ஆழி
வெருவரு முழக்கும், ஈசன்
வில்லிறும் ஒலியும் என்னக்,
குருமணி மகுட கோடி
முடித்தலை குலுங்கும் வண்ணம்,
இருபது செவியினூடும்
நுழைந்தது அவ் எழுந்த ஓசை.
1

அநுமனைப் பிடிக்குமாறு இராவணன் கிங்கரரை ஏவுதல்

5598. புல்லிய முறுவல் தோன்றப்
பொறாமையும் சிறிது பொங்க,
எல்லை இல் ஆற்றல் மாக்கள்
எண் இறந்தாரை ஏவி,
“வல்லையின் அகலா வண்ணம்,
வானையும் வழியை மாற்றிக்,
கொல்லலிர், குரங்கை நொய்தில்
பற்றுதிர், கொணர்திர்! ‘‘ என்றான்.
2

கிங்கரர்கள் புறப்படுதல்

5599. சூலம், வாள், முசலம், கூர்வேல்,
தோமரம், தண்டு, பிண்டி
பாலமே, முதலாயுள்ள
படைக்கலம் பரித்த கையர்;
ஆலமே அனைய மெய்யர்;
அகலிடம் அழிவு செய்யும்
காலம் மேல் எழுந்த மூரிக்
கடல் எனக், கடிது செல்வார்.
3

கிங்கரர் வருணனை (5600-5614)

5600. ‘நானிலம் அதனின் உண்டு
போர் ‘என நவிலின், அச்சொல்
தேனினும் களிப்புச் செய்யும்
சிந்தையர்த் தரெித்தும் என்னின்,
கானினும் பெரியர் : ஓசை
கடலினும் பெரியர் : கீர்த்தி
வானினும் பெரியர் : மேனி
மலையினும் பெரியர் மாதோ!
4

5601. திருகு உறும் சினத்துத், தேவர்
தானவர் என்னும் தவெ்வர்
இரு குறும்பு எறிந்து நின்ற
இசையினார் : வசை என்று எண்ணிப்,
பொரு குறும்பு என்று, வென்று
புணர்வது பூ உண் வாழ்க்கை
ஒருகுறும் குரங்கு என்று எண்ணி,
நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்.
5

5602. கட்டிய வாளர்; இட்ட
கவசத்தர்; கழலர்; திக்கைத்
தட்டிய தோளர்; மேகம்
தடவிய கையர்; வானை
எட்டிய முடியர்; தாளால்
இடறிய பொருப்பர்; ஈட்டிக்
கொட்டிய பேரி என்ன,
மழை எனக், குமுறும் சொல்லார்.
6

5603. வானவர் எறிந்த தயெ்வ
அடுபடை வடுக்கள், மற்றைத்
தானவர் துரந்த ஏதித்
தழும்பொடு தயங்கும் தோளர்;
யானையும் பிடியும் வாரி
இடும் கயவாயர்; ஈன்ற
கூனல் வெண்பிறையில் தோன்றும்
எயிற்றினர்; கொதிக்கும்கண்ணர்.
7

5604. சக்கரம், உலக்கை, தண்டு,
தாரை, வாள், பரிகம், சங்கு,
முற்கரம், முசுண்டி, பிண்டிபாலம்,
வேல், சூலம், முள் கோல்,
பொன்கரம் குலிசம், பாசம்,
புகர்மழு, எழு பொன்குந்தம்,
வில், கரும் கணை, விட்டேறு,
கழுக்கடை எழுக்கள் மின்ன.
8

5605. பொன் நின்று கஞலும் தயெ்வப்
பூணினர்; பொருப்புத் தோளர்;
மின்நின்ற படையும், கண்ணும்,
வெயில் விரிக்கின்ற மெய்யர்;
‘என்? என்றார்க்கு, ‘என்? என்? ‘
என்றார்; எய்தியது அறிந்திலாதார்,
முன் நின்றார் முதுகு தீயப்
பின் நின்றார் முடுகுகின்றார்.
9

5606. வெய்து உறு படையின் மின்னர்,
வில்லினர், வீசு காலர்,
மை உறு விசும்பில் தோன்றும்
மேனியர், மடிக்கும் வாயர்,
கைபரந்து உலகு பொங்கிக்
கடையுகம் முடியும் காலைப்
பெய்ய என்று எழுந்த மாரிக்கு
உவமை சால் பெருமை பெற்றார்.
10

5607. ‘பனி உறு சோலை சிந்தி,
வேரமும் பறித்தது, அம்மா!
தனி ஒரு குரங்கு போலாம்!
நன்று நம் தருக்கு! ‘என்கின்றார்,
‘இனி ஒரு பழி மற்று உண்டோ
இதனின்? ‘என்று இரைத்துப் பொங்கி,
முனிவு உறு மனத்தில் தாவி,
முந்துற முடுகுகின்றார்.
11

5608. எற்றுறு முரசும், வில் நாண்
ஏற விட்டு எடுத்த ஆர்ப்பும்,
சுற்றுறு கழலும், சங்கும்,
தழெிதழெித்து உரப்பும் சொல்லும்,
உற்று உடன்று ஒன்றாய் ஓங்கி
ஒலித்து எழுந்து, ஊழிப் பேர்வில்
நல் திரைக் கடல்கேளாடு
மழைகளை, நா அடக்க.
12

5609. தரெு இடம் இல் என்று எண்ணி
வானிடைச் செல்கின்றாரும்,
புருவமும் சிலையும் கோட்டிப்
புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்,
ஒருவரின் ஒருவர் முந்தி
முறை மறுத்து உருக்கின்றாரும்,
விரிவு இலது இலங்கை ‘என்று
வழி பெறார் விளிக்கின்றாரும்.
13

5610. வாள் உறை விதிர்க்கின்றாரும்,
வாயினை மடிக்கின்றாரும்,
தோள் உறத் தட்டிக் கல்லைத்
துகள் படத் துகைக்கின்றாரும்,
தாள் பெயர்த்து இடம் பெறாது
தருக்கினர் நெருக்குவாரும்,
கோள் வளை எயிறு தின்று
தீ எனக் கொதிக்கின்றாரும்.
14

5611. அனைவரும் மலை என நின்றார்,
அளவு அறு படைகள் பயின்றார்,
அனைவரும் அமரின் உயர்ந்தார்,
அகல் இடம் நெளிய நடந்தார்,
அனைவரும் வரனின் அமைந்தார்,
அசனியின் அணிகள் அணிந்தார்,
அனைவரும் அமரரை வென்றார்,
அசுரரை உயிரை அயின்றார்.
15

5612. குறுகின கவசரும் மின்போல்
குரை கழல் உரகரும், வன்போர்
முறுகின பொழுதின், உடைந்தார்
முதுகு இட, முறுவல் பயின்றார்;
இறுகின நிதிகிழவன் பேர்
இசை கெட அளகை எறிந்தார்;
தறெுகுநர் இன்மையின் வல்தோள்
தினவு உற உலகு திரிந்தார்.
16

5613. ‘வரைகளை இடறுமின்! ‘என்றால்,
‘மறிகடல் பருகுமின்! ‘என்றால்,
‘இரவியை விழவிடும்! ‘என்றால்,
‘எழுமழை பிழியுமின்! ‘என்றால்,
‘அரவினது அரசனை, ஒன்றோ,
தரையினொடு அரையுமின்! ‘என்றால்,
‘தரையினை எடும், எடும்! ‘என்றால்,
ஒருவர் அது அமைதல் சமைந்தார்.
17

5614. தூளியின் நிமிர் படலம் போய்
இமையவர் விழி துற, வெம் போர்
மீளியின் இனம் என, வல் தாள்
விரை புலி நிரை என, விண் தோய்
ஆளியின் அணி என, அன்றேல்,
அலை கடல் விடம் என, அஞ்சா,
வாளியின் விசை கொடு, திண் கார்
வரை வருவன என, வந்தார்.
18

கிங்கரர் பொழிலை வளைந்துகொள்ளுதல்

5615. பொறி தர விழி, உயிர் ஒன்றோ?
புகை உக, அயில் ஒளி, மின் போல்,
செறிதர, உரும் அதிர்கின்றார்,
திசைதொறும் விசைகொடு சென்றார்,
எறிதரு கடையுக வன்கால்
இடறிட, உடுவின் இனம்போய்
மறிதர, மழை அகல் விண்போல்
வடிவு அழி பொழிலை, வளைந்தார்
19

அநுமன் கிங்கரரைக் காணுதல்

5616. வயிர் ஒலி, வளை ஒலி, வன் கார்
மழை ஒலி, முரசு ஒலி, மண்பால்
உயிர் உலைவு உற நிமிரும் போர்
உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்;
வெயில் விரி கதிரவனும் போய்
வெருவிட, வெளியிடை விண்தோய்
கயிலையின் மலை என நின்றான்,
அனையவர் வருதொழில் கண்டான்.
20

அநுமன் தன் எண்ணம் பலித்ததற்கு மகிழ்தல்

5617. இத இயல் இது என முந்தே
இயைவு உற இனிது தரெிந்தான்;
பத இயல் அறிவு பயந்தால்,
அதின் நல பயன் உளது உண்டோ?
சிதவு இயல் கடி பொழில் ஒன்றே
சிதறிய செயல் தரு திண் போர்
உதவு இயல் இனிதின் உவந்தான்,
எவரினும் அதிகம் உயர்ந்தான்.
21

கிங்கரர்கள் அநுமன்மேல் படைவீசுதல் (5618-5619)

5618. ‘இவன்! இவன்! இவன்! ‘என நின்றார்,
‘இது! ‘என முதலி எதிர்ந்தார்,
பவனனின் முடுகி நடந்தார்,
பகல் இரவு உற மிடைகின்றார்,
புவனியும், மலையும், விசும்பும்,
பொரு அரு நகரும் உடன் போர்த்
துவனியில் அதிர, விடம் போல்
சுடர்விடு படைகள் துரந்தார்.
22

5619. மழைகளும், மறி கடலும் போய்
மதம் அற முரசம் அறைந்தார்,
முழைகளின் இதழ்கள் திறந்தார்,
முதிர் புகை கதுவ முனிந்தார்,
பிழை இல பட அரவின் தோள்
பிடர் உற அடி இடுகின்றார்,
கழை தொடர் வனம் எரி உண்டால்
என, எறி படைஞர் கலந்தார்.
23

அநுமன் ஒருமரத்தைக் கையிற்கொண்டு நிமிர்தல்

5620. அறவனும் அதனை அறிந்தான்,
அருகினில் அழகின் அமைந்தார்
இற இனின் உதவு நெடும் தார்
உயர் மரம் ஒருகை இயைந்தான்,
உற வரு துணை என, ஒன்றோ,
உதவிய அதனை உவந்தான்,
நிறை கடல் கடையும் நெடும் தாள்
மலை என, நடுவண் நிமிர்ந்தான்.
24

அரக்கர் சிதைந்து அழிதல் (5621-5631)

5621. பருவரை புரைவன வன் தோள்
பனி மலை அருவி நெடும் கால்
சொரிவன பல என, மண் தோய்
துறை பொரு குருதி சொரிந்தார்,
ஒருவரை ஒருவர் தொடர்ந்தார்
உயர் தலை உடைய உருண்டார்;
அரு வரை நெரிய விழும் பேர்
அசனியும் அசைய அறைந்தான்.
25

5622. பறை புரை விழிகள் பறிந்தார்,
படியிடை நெடிது படிந்தார்,
பிறை புரை எயிறும் இழந்தார்,
பிடரொடு தலைகள் பிளந்தார்,
குறை உயிர் சிதற நெரிந்தார்,
குடரொடு குருதி குழைந்தார்,
முறை முறை படைகள் எறிந்தார்,
முடை உடல் மறிய முறிந்தார்.
26

5623. புடையொடு விடு கனலின் காய்
பொறி இடை மயிர்கள் புகைந்தார்,
தொடையொடு முதுகு துணிந்தார்,
சுழிபடு குருதி சொரிந்தார்,
படை இடை ஒடிய, நெடும் தோள்
பறிதர, வயிறு திறந்தார்,
இடையிடை, மலையின், விழுந்தார்,
இகல் பொர முடுகி எழுந்தார்.
27

5624. புதைபட இருளின் மிடைந்தார்,
பொடியிடை நெடிது புரண்டார்,
விதைபடும் உயிரர் விழுந்தார்,
விளியொடு விழியும் இழந்தார்,
கதையொடு முதிர மலைந்தார்,
கணைபொழி சிலையர் கலந்தார்,
உதைபட உரனும் நெரிந்தார்,
உதறொடு குருதி உமிழ்ந்தார்.
28

5625. அயல் அயல் மலையொடு அறைந்தான்,
அடு பகை அளகை அடைந்தார்,
வியல் இடம் மறைய விரிந்தார்,
மிசை உலகு அடைய மிடைந்தார்,
புயல் தொடு கடலின் விழுந்தார்,
புடை புடை சிதைவொடு சென்றார்,
உயர்வு உற விசையின் எறிந்தான்,
உடலொடும் உலகு துறந்தார்.
29

5626. தறெித்த வன்தலை, தறெித்தன
செறி சுடர்க் கவசம்,
தறெித்த பைங்கழல், தறெித்தன
சிலம்பொடு பொலம் தார்,
தறெித்த பல் மணி, தறெித்தன
பெரும் பொறித் திறங்கள்,
தறெித்த குண்டலம், தறெித்தன
கண்மணி சிதறி.
30

5627. வாள்கள் இற்றன இற்றன வரிசிலை வயிரத்
தோள்கள் இற்றன இற்றன சுடர் மழுச் சூலம்
நாள்கள் இற்றன இற்றன நகை எயிற்று ஈட்டம்
தாள்கள் இற்றன இற்றன படையுடைத் தடக்கை.
31

5628. தறெித்த வன்தலை, தறெித்தன
செறி சுடர்க் கவசம்,
தறெித்த பைங்கழல், தறெித்தன
சிலம்பொடு பொலம் தார்,
தறெித்த பல் மணி, தறெித்தன
பெரும் பொறித் திறங்கள்,
தறெித்த குண்டலம், தறெித்தன
கண்மணி சிதறி.
32

5629. உக்க பல் குவை உக்கன துவக்கு எலும்பு உதிர்வு உற்று
உக்க முற்கரம் உக்கன முசுண்டிகள் உடைவுற்று
உக்க சக்கரம் உக்கன உடல் திறந்து உயிர்கள்
உக்க கப்பணம் உக்கன உயர்மணி மகுடம்.
33

5630. தாள்களால் பலர் தடக்கைகளால் பலர் தாக்கும்
தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும்
கோள்களால் பலர் குத்துகளால் பலர் தத்தம்
வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார்.
34

5631. ஈர்க்கப்பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்
பேர்க்கப்பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்
ஆர்க்கப்பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்
பார்க்கப்பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.
35

அநுமன் செய்த போர்முறை (5632-5634)

5632. ஓடிக் கொன்றனன் சிலவரை உடல் உடல் தோறும்
கூடிக் கொன்றனன் சிலவரைக் கொடி நெடு மரத்தால்
சாடிக் கொன்றனன் சிலவரைப் பிணம் தொறும் தடவித்
தேடிக் கொன்றனன் சிலவரைக் கறங்கு எனத் திரிவான்.
36

5633. முட்டினார் பட முட்டினான் முறை முறை முடுகிக்
கிட்டினார் படக் கிட்டினான் கிரி என நெருங்கிக்
கட்டினார் படக் கட்டினான் கைகளால் மெய்யில்
தட்டினார் படத் தட்டினான் மலை எனத் தகுவான்.
37

5634. உறக்கினும் கொல்லும், உணரினும்
கொல்லும், மால் விசும்பில்
பறக்கினும் கொல்லும், படரினும்
கொல்லும், மின் படைக்கை
நிறக் கரும் கழல் அரக்கர் கண்
நெறிதொறும் பொறிகள்
பிறக்க நின்று, எறி படைகளைத்
தடக்கையால் பியையும்.
38

அநுமன் செய்த போரினால் சுற்றிலும் நேர்ந்த நிகழ்ச்சிகள் (5635-5641)

5635. சேறும் வண்டலும் மூளையும்
நிணமுமாய்த் திணிய,
நீறு சேர் நெடும்தரெு எலாம்
நீத்தமாய் நிரம்ப,
ஆறு போல் வரும் குருதி, அவ்
அநுமனால் அலைப்பு உண்டு
ஈறு இல் வாய்தொறும் உமிழ்வதே
ஒத்தது; அவ் இலங்கை.
39

5636. கருது காலினும் கையினும் வாலினும் கட்டிச்
சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான்
நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்
குருதி சாறு எனப் பாய்வது குரைகடல் கூனில்
40

5637. எடுத்து அரக்கரை எறிதொறும் அவர் உடல் எற்றக்
கொடித் திண் மாளிகை இடிந்தன மண்டபம் குலைந்த
தடக்கை யானைகள் மறிந்தன கோபுரம் தகர்ந்த
பிடிக் குலங்களும் புரவியும் அவிந்தன பெரிய.
41

5638. தம்தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;
தம்தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;
தம்தம் மாக்களைத் தம்படையால் சிலர் தடிந்தார்
எற்றி மாருதி தடக்கைகளான் விசைத்து எறிய.
42

5639. ஆடல் மாக் களிறு அனையவன்,
அரக்கியர்க்கு அருளி
வீடு நோக்கியே செல்க என்று
சிலவரை விட்டான்,
கூடினார்க்கு அவர் உயிர் எனச்
சிலவரைக் கொடுத்தான்,
ஊடினார்க்கு அவர் மனைதொறும்
சிலவரை உய்த்தான்.
43

5640. தரு எலாம் உடல்,
தறெ்றி எலாம் உடல், சதுக்கத்து
உரு எலாம் உடல்,
உவரி எலாம் உடல், உள் ஊர்க்
கரு எலாம் உடல்,
காயம் எலாம் உடல், அரக்கர்
தரெு எலாம் உடல்,
தேயம் எலாம் உடல் சிதறி.
44

5641. ஊன் எலாம் உயிர் கவர் உறும் காலன் ஓய்ந்து உலந்தான்
தான் எலாரையும் மாருதி சாடுகை தவிரான்
மீன் எலாம் உயிர் மேகம் எலாம் உயிர் மேல் மேல்
வான் எலாம் உயிர் மற்றும் எலாம் உயிர் சுற்றி.
45

அரக்கர் நடுவில் அநுமன் விளங்கிய காட்சி (5642-5645)

5642. ஆக இச் செரு விளைவுறும் அமைதியின் அரக்கர்
மோகம் உற்றனர் ஆம் என முறை முறை முனிந்தார்
மாகம் முற்றவும் மாதிரம் முற்றவும் வளைந்தார்
மேகம் ஒத்தனர்; மாருதி வெய்யவன் ஒத்தான்.
46

5643. .அடல் அரக்கரும், ஆர்த்தலின்,
அலைத்தலின், அயரப்
புடை பெருத்து உயர் பெருமையின்,
கருமையின், பொலிவின்,
மிடல் அயில் படை மீன் என
விலங்கலின், கலங்கும்
கடல் நிகர்த்தனர்,
மாருதி மந்தரம் கடுத்தான்.
47

5644. கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ
நிரை மணித் தலை நெரிந்து உகச் சாய்ந்து உயிர் நீப்பார்
சுரர் நடுக்குற அழுதுகொண்டு எழுந்த நாள் தொடரும்
உரகர் ஒத்தனர் அநுமனும் கலுழனே ஒத்தான்.
48

5645. மானம் உற்ற தம் பகையினால் முனிவு உற்று வளைந்த
மீன் உடைக் கடல் இடையினும் உலகு எலாம் மிடைந்த
ஊன் அறக் கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர்
ஆனை ஒத்தனர் ஆள் அரி ஒத்தனன் அநுமன்.
49

அநுமனின் விழுப்புண்

5646. எய்த எற்றின எறிந்தன ஈர்த்தன இகலிப்
பொய்த குத்தின பொதுத்தன தொளைத்தன போழ்ந்த
கொய்த சுற்றின பற்றின குடைந்தன பொலிந்த
அய்யன் மல் பெரும் புயத்தன புண் அளப்பு அரிதால்.
50

தேவர்கள் அநுமனைப் புகழ்தல்

5647. கார்க் கரும் தடம் கடல்களும்
மழை முகில் கணனும்
வேர்க்க, வெம் செரு விளைத்து எழும்
வெள் எயிற்று அரக்கர்
போர்க் குழாம் படி பூசலின்,
ஐயனைப் புகழ்வுற்று
ஆர்க்கும் விண்ணவர் அமலையே
உயர்ந்தது அன்று அமரில்.
51

அநுமன் மேல் பூச்சொரிதல்

5648. மேவும் வெம் சினத்து அரக்கர்கள்
முறை முறை விசையால்
ஏவும் பல் படை எத்தனை
கோடிகள் எனினும்
தூவும்; தேவரும் மகளிரும்
முனிவரும் சொரிந்த
பூவும், புண்களும், தரெிந்தில
மாருதி புயத்தில்.
52

அநுமனின் தளராத நிலை

5649. பெயர்க்கும் சாரிகை கறங்கு எனத்
திசைதொறும் பெயர்வின்,
உயர்க்கும் விண்மிசை ஓங்கலின்,
மண்ணின் வந்து உறலின்,
அயர்த்து வீழ்ந்தனர் அழிந்தனர்
அரக்கராய் உள்ளார்;
வெயர்த்திலன் மிசை, உயிர்த்திலன்
நல் அற வீரன்.
53

கிங்கரர் அனைவரும் மடிதல்

5650. எஞ்சல் இல் கணக்கு அறிந்திலம் இராவணன் ஏவ
நஞ்சம் உண்டவர் ஆம் என அநுமன் மேல் நடந்தார்
துஞ்சினார் அல்லது யாவரும் மறத்தொடும் தொலைவுற்று
அஞ்சினார் இல்லை; அரக்கரில் வீரர் மற்று யாரே.
54

பொழிற்காவலர் இராவணனிடம் ஓடுதல் (5651-5652)

5651. வந்த கிங்கரர் ஏ எனும் மாத்திரை மடிந்தார்;
நந்த வானத்து நாயகர் ஓடினர் நடுங்கிப்
பிந்து காலினர் கையினர் பெரும்பயம் பிடரின்
உந்த ஆயிரம் பிணக்குவை மேல் விழுந்து உளைவார்.
55

5652. விரைவின் உற்றனர் விம்மல் உற்று யாதொன்றும் விளம்பார்
கரதலத்தினால் பட்டதும் கட்டு க்கின்றார் :
தரையின் நிற்கிலர் திசைதொறும் நோக்கினர் சலிப்பார்;
அரசன் மற்றவர் அலக்கணே த்திட அறிந்தான்.
56

காவலாளிகளை இராவணன் வினாவுதல்

5653. “இறந்து நீங்கினரோ? இன்று என்
ஆணையை இகழ்ந்து,
துறந்து நீங்கினரோ? அன்றி,
வெம் சமர் தொலைந்தார்,
மறந்து நீங்கினரோ? என்கொல்
வந்தது? ‘‘ என்று த்தான்,
நிறம் செருக்குற, வாய்தொறும்
நெருப்பு உமிழ்கின்றான்.
57

கிங்கரர் பட்டமை கூறல்

5654. “சலம் தலைக் கொண்டனர் ஆய தன்மையார்
அலந்திலர் செரு களம் அத்து அஞ்சினார் அலர் :
புலம் தரெி பொய்க் கரி புகலும் புன்கணார்
குலங்களின் அவிந்தனர் குரங்கினால்! “ என்றார்.
58

இராவணன் நாணுதல்

5655. ஏவலின் எய்தினர் இருந்த எண்திசைத்
தேவரை நோக்கினான் நாணும் சிந்தையான்;
“யாவது? என்று அறிந்திலிர் போலுமால்! ” என்றான்
மூவகை உலகையும் விழுங்க மூள்கின்றான்.
59

இராவணன் மீட்டும் வினாவுதல்

5656. மீட்டு அவர் த்திலர் பயத்தின் விம்முவார்;
தோட்டு அலர் இன மலர்த் தொங்கல் மோலியான்
“வீட்டியது அரக்கரை என்னும் வெவ்வுரை
கேட்டதோ? கண்டதோ? கிளத்துவீர்! “ என்றான்.
60

அரக்கர் அழிந்ததை அறிவித்தல்

5657. “கண்டனம் ஒரு புடை நின்று கண்களால்
தணெ் திரைக் கடல் என வளைந்த சேனையை
மண்டலம் திரிந்து ஒரு மரத்தினால் உயிர்
உண்டது; அக் குரங்கு இனம் ஒழிவது அன்று! “ என்றார்.
61

 

Previous          Next