Posts

Tamil Daily Rasi Palan 6th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                                     Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  06.01.2017

இன்றைய பஞ்சாங்கம் இன்றைய  பஞ்சாங்கம் 06.01.2017, மார்கழி 22, வெள்ளிக்கிழமை, அஷ்டமி திதி பகல் 12.25 வரை பின்பு வளர்பிறை நவமி, ரேவதி நட்சத்திரம் பகல் 03.45 வரை பின்பு அஸ்வினி, சித்த யோகம் பகல் 03.45 வரை பின்பு  அமிர்தயோகம், நேத்திரம் &  1, ஜீவன் & 1/2 , இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00 அம்மன் வழிபாடு நல்லது, சுப முயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.  
சந்தி
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை06.01.2017      
ராகு
புதன் (வ)சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 06.01.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் குடும்பத்தில் பொறுப்புடனும், சிக்கனத்துடனும் நடந்து கொள்வது அவசியம். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக அமைவார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் தொழில் பாதிப்படையாது. தெய்வ வழிபாடு மூலம் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
taurus-single-iconரிஷபம் உங்கள் குடும்பத்தில் இன்று மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகத்தால் நன்மை ஏற்படும்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசு துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் அமையும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். சுப காரியங்களுக்கான முயற்ச்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் ஓரளவு லாபமே கிடைக்கும். வியாபாரத்தில் ஈடுபடுவோர் பிரச்சனைகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் பகல் 03.45 வரை இருப்பதால் நீங்கள் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள். நீங்கள் பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது மற்றவர் விஷேயத்தில் தலையிடு செய்வதை இன்று தவிர்ப்பது உத்தமம்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். மதியத்திற்கு பிறகு மன அமைதி குறையும்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். புதிய பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகும். வேலையில் எவ்வளவு தான் பாடுபட்டாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது. பூர்வீக சொத்துக்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு உற்றார் உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். பணவரவு ஓரளவு இருக்கும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். இதுவரை எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் உங்களுக்கு மனநிம்மதி குறையும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்ச்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள்.
pisces-single-iconமீனம் உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். மன அமைதி இருக்கும், சுறுசுறுப்பாக இருப்பீர்கள்

Tamil Daily Rasi Palan 5th January 2017

lord-murugan

Wish You All a Very Happy New Year 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                                         Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  05.01.2017

இன்றைய பஞ்சாங்கம் 05.01.2017, மார்கழி 21, வியாழக்கிழமை, சப்தமி திதி பகல் 02.01 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை 04.45 வரை பின்பு ரேவதி, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் & 1, ஜீவன் & 1/2 , இராகு காலம் – மதியம் 01.30- 03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. சுப நாள் சகல சுபமுயற்சிகளுக்கும் ஏற்ற நாள்.  
சந்தி
கேது  செவ்சுக்கி   திருக்கணித கிரக நிலை05.01.2017        
ராகு
புதன் (வ)சூரிய சனி குரு
 

இன்றைய ராசிப்பலன் – 05.01.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் ஏற்படும் சூழ்நிலையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. இதுவரை இருந்த பிரச்சனைகள் இன்று சற்று குறையும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். புத்திரர்களால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சகோதர, சகோதரிகள் ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். பணி புரிவோர்களுக்கு பணியில் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். கடன் பிரச்சனைகள் தீரும்.
cancer-single-iconகடகம் உங்கள் உடல்நிலையில் சற்று சோர் இருக்கும், சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்புகள் உண்டாகாது. அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எளிதில் முடியவேண்டிய செயல்கள் தாமதமாகும். கடன் பிரச்சனைகளை தவிர்க்க சற்று சிக்கனமுடன் நடந்து கொள்வது நல்லது.
leo-single-iconசிம்மம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். புது முயற்சிகளை தவிர்க்கவும்.
virgo-single-iconகன்னி உங்களுக்கு பிள்ளைகளால் இன்று வீண் செலவுகள் ஏற்பட்டாலும் அனுகூலமாக இருப்பார்கள். தொழில் புரிவோர்க்கு அவர்கள் தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும். அலுவலகத்தில் வேலை செய்பவர் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகள் குறையும்.
libra-single-iconதுலாம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். தொழில் செய்வோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களின் பிள்ளைகளின் படிப்பிற்காக சிறு தொகை செலவிட நேரிடும். திருமண முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். தொழில் புரிவோர் தொழில் சம்பந்தமாக வெளியூர் வெளிநாட்டு நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் சுமை ஓரளவு குறையும்.
capricorn-single-iconமகரம் இன்று மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் நல்ல ஆர்வம் காட்டுவார்கள். திருமண சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய கூட்டாளிகள் கிடைக்கப் பெறுவார்கள்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்ச்சிகளில் அனுகூலமற்ற பலன் கிடைக்கும். வியாபாரத்தில் சற்று லாபம் இருக்கும்.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிக்கும் நாளாக இந்த நாள் அமையும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் பயணம் உண்டாகும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் இன்று வசூலாகும்.