Tamil Rasi Palan Today 11th October 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  11.10.2017

இன்றைய  பஞ்சாங்கம்

11-10-2017, புரட்டாசி -25, புதன்கிழமை, சஷ்டி திதி காலை 09.10 வரை பின்பு தேய்பிறை சப்தமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் பகல் 10.25 வரை பின்பு திருவாதிரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 0. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

சந்தி
திருக்கணித கிரக நிலை 11.10.2017   ராகு
கேது செவ்
சனி குரு  சூரிய சுக்கி புதன்

இன்றைய ராசிப்பலன் – 11.10.2017

aries-single-iconமேஷம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வருமானம் பெருகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உடல்நிலை பலவீனமாக காணப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் குறையும். தெய்வ வழிபாடு நல்லது.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். கடன்கள் குறையும்.


cancer-single-iconகடகம்

இன்று பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.


libra-single-iconதுலாம்

இன்று உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். சுப காரியங்கள் கைகூடும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே கிட்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். சேமிப்பு உயரும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் வெற்றி அடையலாம்.


pisces-single-iconமீனம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பண பற்றாக்குறையை சமாளிக்க சிக்கனமாக செயல்படுவது நல்லது.