Tamil Rasi Palan Today 14th January 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.01.2018

இன்றைய  பஞ்சாங்கம்

14-01-2018, தை 01, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி பின்இரவு 02.31 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. கேட்டை நட்சத்திரம் பகல் 01.14 வரை பின்பு மூலம். மரணயோகம் பகல் 01.14 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. பொங்கல் பண்டிகை. பொங்கல் வைக்க காலை 7.00 மணிக்கு மேல் 9.00 மணிக்குள், பகல் 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள், மதியம் 2.00 மணிக்கு மேல் 4.00 மணிக்குள், கரிநாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

திருக்கணித கிரக நிலை 14.01.2018 ராகு
கேது சுக்கி
சனி புதன் சூரிய   சந்தி   செவ் குரு

இன்றைய ராசிப்பலன் – 14.01.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் ராசிக்கு பகல் 01.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எந்த செயலிலும் நிதானமாகவும், எச்சரிக்கையுடனும் செயல்படுவது நல்லது. உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 01.14 முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. செய்யும் செயல்களில் கவனம் தேவை.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் இனிய சம்பவங்கள் நிகழும். பிள்ளைகள் புது உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் ஈடுபடுவார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் ஏற்படும்.


cancer-single-iconகடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுப செய்திகள் வந்து சேரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டுவீர்கள். உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். உற்றார் உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


virgo-single-iconகன்னி

இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு மன அமைதி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை கூடும். தொழில் ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பயணங்களால் வெளிவட்டார நட்பு ஏற்படும். தேவைகள் பூர்த்தியாகும். நினைத்தது நிறைவேறும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உறவினர்கள் வழியில் சிறு சிறு மனசங்கடங்கள் உண்டாகலாம். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் முன்னேற்றம் உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். பொன் பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் சிறு விரயங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கொடுக்கல் வாங்கலில் நல்ல லாபம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பணவரவு உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் மந்த நிலை தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனைகளை தவிர்க்கலாம்.