Tamil Rasi Palan Today 15th July 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  15.07.2017

இன்றைய  பஞ்சாங்கம்

15-07-2017, ஆனி- 31,சனிக்கிழமை,சஷ்டி திதி பகல் 02.34 வரை பின்பு தேய்பிறைசப்தமி. உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 12.48 வரை பின்பு ரேவதி. சித்தயோகம் இரவு 12.48 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம்- 2, ஜீவன்- 1/2.சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

சந்தி சுக்கி சூரிய
கேது திருக்கணித கிரக நிலை

15.07.2017

 

செவ் புதன்
ராகு
சனி  (வ) குரு

இன்றைய ராசிப்பலன் – 15.07.2017

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் உறவினர்களின் வருகையால் மகிழச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.


taurus-single-iconரிஷபம்

இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வருமானம் பெருகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். திருமண சுபமுயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.


libra-single-iconதுலாம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். திருமண சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக்கூடும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் உண்டாகலாம். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை தரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெறலாம். கடன் பிரச்சனைகள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவுகள் உண்டாகும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்ல லாபம் கிட்டும். பொன் பொருள் சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் தேவையறிந்து உதவுவார்கள். வியாபாரத்தில் உங்கள் புகழ் மேலோங்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.