Tamil Rasi Palan Today 16th November 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  16.11.2017

இன்றைய  பஞ்சாங்கம்

16-11-2017, ஐப்பசி -30, வியாழக்கிழமை, திரியோதசி திதி பகல் 02.09 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி. சித்திரை நட்சத்திரம் பகல் 03.18 வரை பின்பு சுவாதி. சித்தயோகம் பகல் 03.18 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம்- 0. ஜீவன்- 1/2. மாத சிவராத்திரி. சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

திருக்கணித கிரக நிலை 16.11.2017   ராகு
கேது
சனி புதன் சூரிய சுக்கி குரு  சந்தி செவ்  
 

இன்றைய ராசிப்பலன் – 16.11.2017

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் உறவினர்களால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றியில் முடியும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். கணவன் மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் கூடும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் உடல் ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் பணியாட்கள் ஒத்துழைப்பு தருவார்கள். கடன் பிரச்சனை ஒரளவு குறையும். சிலருக்கு உத்தியோகத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும் வாய்ப்பு அமையும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் குடும்பத்தில் பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் பண பிரச்சனைகள் ஓரளவு குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று நண்பர்கள் மூலம் சுப செய்திகள் வந்து சேரும். புதிய பொருள் சேர்க்கை மகிழ்ச்சியினை தரும். பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் சாதகமான பலன் கிட்டும்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலப் பலன்கள் இருக்கும். சுப காரியங்கள் கைகூடும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகள் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். வங்கி சேமிப்பு உயரும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டி வரும். குடும்பத்தினருடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். எதிலும் கவனம் தேவை. உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். சுபகாரியம் கைகூடும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும். தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகளில் குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். நினைத்தது நடக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் வீண் பிரச்சனைகள் உண்டாகும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருப்பது உத்தமம்.