Tamil Rasi Palan Today 22nd January 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  22.01.2018

இன்றைய  பஞ்சாங்கம்

22-01-2018, தை 09, திங்கட்கிழமை, பஞ்சமி திதி மாலை 04.25 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. பூரட்டாதி நட்சத்திரம் காலை 07.06 வரை பின்பு உத்திரட்டாதி. மரணயோகம் காலை 07.06 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம்- 1. ஜீவன்- 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

சந்தி
திருக்கணித கிரக நிலை 22.01.2018 ராகு
சூரிய கேது  சுக்கி
புதன் சனி செவ் குரு
 

இன்றைய ராசிப்பலன் – 22.01.2018

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். உறவினர்களால் வீண் செலவுகள் அதிகமாகலாம். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் நற்பலனை அடைய முடியும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக நண்பர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் எதிர்பாராத திடீர் தனவரவு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கொடுத்த கடன் வசூலாகும்.


cancer-single-iconகடகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றி தரும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். தேவைகள் பூர்த்தியாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி எந்த வேலையும் கொடுக்காமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் கவனம் தேவை. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்ற நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் சுப செலவுகள் ஏற்படும். பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உடன் பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைப்பெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தெய்வ வழிபாடு நல்லது.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றம் ஏற்படும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக அமையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலனை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படலாம். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் வெற்றி கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன்கள் ஏற்படும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.