Tamil Rasi Palan Today 6th January 2018

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  06.01.2018

இன்றைய  பஞ்சாங்கம்

06-01-2018, மார்கழி 22, சனிக்கிழமை, பஞ்சமி திதி மாலை 05.09 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.20 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 01.20 வரை பின்பு மரணயோகம். நேத்திரம்- 2. ஜீவன்- 0. சனிபகவான் வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.

திருக்கணித கிரக நிலை 06.01.2018 ராகு
கேது சந்தி
சூரிய சனி சுக்கி புதன் செவ் குரு

இன்றைய ராசிப்பலன் – 06.01.2018

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மனதிற்கு புது நம்பிக்கையை தரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்கான திட்டங்களில் சில இடையூறுகள் உண்டா-கலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் சுமை ஓரளவு குறையும். நண்பர்கள் துணை நிற்பர். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல் நிலை புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். வங்கி சேமிப்பு உயரும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபார ரீதியாக பொருளாதார நிலை உயரும். கடன் பிரச்சனைகள் தீரும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் எந்த செயலையும் உற்சாகத்தோடு செய்வீர்கள். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.


virgo-single-iconகன்னி

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகத்தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் இருக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபகரமான பலன்கள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக ரீதியாக புதிய நபரின் அறிமுகம் கிட்டும். வருமானம் பெருகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சுப காரிய முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். தொழில் சம்பந்தமாக போடும் திட்டங்களில் அனுகூலப்பலன் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி முன்னேற்றம் ஏற்படும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நிலவும். தொழிலில் நண்பர்களின் ஆலோசனைகளால் நல்ல பலன் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். பிள்ளைகள் படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். திருமண முயற்சிகளில் இருந்த தாமத நிலை விலகி முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் நிலவிய கடன் பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.