Tamil Daily Rasi Palan 10th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  10.04.2017

இன்றைய  பஞ்சாங்கம்   10.04.2017, பங்குனி – 28, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி காலை 10.23 வரை பின்பு பௌர்ணமி, அஸ்தம் நட்சத்திரம் பின்இரவு 03.37 வரை பின்பு சித்திரை, சித்தயோகம் பின்இரவு 03.37 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பௌர்ணமி. இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.  
சூரியசுக்கி(வ) செவ்புதன்(வ)
கேது திருக்கணித கிரக நிலை10.04.2017  
ராகு
சனி(வ) குரு  (வ)சந்தி

இன்றைய ராசிப்பலன் – 10.04.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். ஆடை ஆபரணம் சேர்க்கை ஏற்படும். புதிய முயற்சிகள் வெற்றியை தரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
taurus-single-iconரிஷபம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு உயர்பதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் தீரும்.
gemini-single-iconமிதுனம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் அதிக செலவுகள் ஏற்படலாம். தொழில் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் புது நம்பிக்கையை தரும். எதிலும் கவனத்துடனும் பொறுப்புடனும் செயல்படுவது நல்லது.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட துணிவுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கும்.
leo-single-iconசிம்மம் இன்று வியாபாரத்தில் பணவரவு சுமாராக இருக்கும். சுபமுயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
libra-single-iconதுலாம் இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார ரீதியாக வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நல்லது நடக்கும்.
scorpio-single-iconவிருச்சிகம் உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரம் அமோகமாக இருக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். பழைய கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
capricorn-single-iconமகரம் இன்று உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். சுபமுயற்சிகளில் சிறு தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் லாபம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற மனகுழப்பம் ஏற்படும். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதம் செய்யாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.
pisces-single-iconமீனம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் கூடும். பிள்ளைகளால் பெருமை சேரும். புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும். சுபசெலவுகள் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகள் நல்ல பலனை தரும்.