Tamil Daily Rasi Palan 10th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  10.06.2017

இன்றைய  பஞ்சாங்கம்

10-06-2017, வைகாசி -27, சனிக்கிழமை, பிரதமை திதி இரவு 09.00 வரை பின்பு தேய்பிறை துதியை. நாள் முழுவதும் மூலம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சனிப்ரிதி நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

 

  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை10.06.2017

 

ராகு
சனி(வ) சந்தி குரு

 


இன்றைய ராசிப்பலன் – 10.06.2017

aries-single-iconமேஷம்

இன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். வீட்டின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வருமானம் பெருகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும்.  தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர் விஷயங்களில் தலையிடாமல் இருந்தால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்க்கவும். எதிலும் கவனம் தேவை.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துகளால் அனுகூலப் பலன் கிட்டும்.


cancer-single-iconகடகம்

இன்று உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை காணப்படும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன்கள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவி மூலமாக இன்று நல்லது நடக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். தொழில் விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் அலைச்சல்கள் ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெறும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நிறைவேறும். குடும்பத்தில் பெண்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண முயற்சிகளில் அனுகூலப் பலன் கிட்டும். வேலையில் சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். சேமிப்பு உயரும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் லாபம் கிடைக்கும். உறவினர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். கடன்கள் குறையும்.


aquarius-single-iconகும்பம்

இன்று தொழில் சம்பந்தமாக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். அரசு வழியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். ஆன்மீக மற்றும் தெய்வ வழிபாடுகளில் ஈடுபாடு உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.