Tamil Daily Rasi Palan 11th March 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  11.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்

 

11.03.2017, மாசி 27, சனிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 08.24 வரை பின்பு பௌர்ணமி, மகம் நட்சத்திரம் மாலை 05.07 வரை  பின்பு பூரம், அமிர்தயோகம் மாலை 05.07 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, மாசிமகம், நடராஜர் அபிஷேகம் சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

 

புதன் சுக்கி (வ) செவ்
சூரிய கேது திருக்கணித கிரக நிலை11.03.2017

 

ராகு சந்தி
சனி   குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 11.03.2017

aries-single-iconமேஷம்

இன்று உறவினர்களால் வீண் விரயங்கள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்ப-டும். சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல மாற்றத்தை தரும். கடன் பிரச்சனைகள் தீரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.


taurus-single-iconரிஷபம்

இன்று வியாபாரத்தில் எதிரிகளால் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பண பற்றாக்குறை உண்டாகும். உறவினர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவுக்கு குறையும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் வீண் மன-ஸ்தாபங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு குறையும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் வெற்றி அடையலாம்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல் படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும்.


virgo-single-iconகன்னி

இன்று உடல்நிலை பலவீனமாக காணப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். இதுவரை இருந்த கடன் பிரச்சனைகள் குறையும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகளின் உடல்நிலையில் சற்று மந்தநிலை காணப்படும். தேவையற்ற  செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். தொழிலில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும் தாமத பலனே கிட்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பேசும்பொழுது கவனமுடன் பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். தொழில் சம்பந்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.