Tamil Daily Rasi Palan 14th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.04.2017

இன்றைய  பஞ்சாங்கம்   14-04-2017, சித்திரை-1, வெள்ளிக்கிழமை, திரிதியை திதி மாலை 05.24 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. விசாகம் நட்சத்திரம் பகல் 10.46 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர துர்த்தி விநாயகர் வழிபாடு நல்லது. தமிழ் வருடபிறப்பு. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00  
சுக்கி(வ) சூரியபுதன்(வ) செவ்
கேது திருக்கணித கிரக நிலை14.04.2017  
ராகு
சனி(வ)  சந்தி குரு (வ)

இன்றைய ராசிப்பலன் – 14.04.2017

aries-single-iconமேஷம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார விஷயத்தில் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் பெண்கள் ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். உறவினர்களின் வருகையால் சந்தோஷம் கூடும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று குடும்ப உறவுகளுக்கிடையே நல்ல ஒற்றுமை நிலவும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும்.
cancer-single-iconகடகம் இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சனைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடன் பிரச்சனை தீரும்.
leo-single-iconசிம்மம் இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் உறவினர்களுக்கிடையே மாற்று கருத்துக்கள் தோன்றும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள்.
libra-single-iconதுலாம் இன்று பிள்ளைகளால் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அரசுத்துறை ஊழியர்களுக்கு  எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் சற்று தாமதநிலை ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். விட்டு கொடுத்து சென்றால் குடும்பத்தில் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு ஈடுபடுவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். மனஅமைதி உண்டாகும்.
sagittarius-single-iconதனுசு இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். அலுவலகத்தில் மேலதிகாரிகளால் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உடன்பிறந்தவர்கள் வழியாக எதிர்பார்த்த உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். புதிய பொருட்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களின் திறமைகேற்ப ஊதிய உயர்வுகள் கிட்டும்.
pisces-single-iconமீனம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சனை தீரும். வியாபாரத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். வருமானம் பெருகும்.