Tamil Daily Rasi Palan 14th May 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.05.2017

இன்றைய  பஞ்சாங்கம் 14-05-2017, சித்திரை-31, ஞாயிற்றுக்கிழமை, திரிதியை திதி பகல் 10.17 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. மூலம் நட்சத்திரம் பின்இரவு 02.08 வரை பின்பு பூராடம். அமிர்தயோகம் பின்இரவு 02.08 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள் சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
சுக்கி சூரியபுதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை14.05.2017  
ராகு
சந்திசனி  (வ) குரு  (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 14.05.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பிறரை நம்பி எந்த ஒரு பொறுப்புகளையும் கொடுக்காமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அமைதி காப்பது உத்தமம்.
gemini-single-iconமிதுனம் இன்று வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்களுடன் இருந்த பகை விலகி ஒற்றுமை கூடும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
cancer-single-iconகடகம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். சிலருக்கு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்களின் உதவியால் கடன்கள் குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்கள் உடல் நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் வீட்டில் அமைதி குறையும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பயணங்களால் அதிக அலைச்சல் ஏற்படும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். வீட்டில் உள்ளவர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். பெரியவர்களின் ஆலோசனைகளால் வாழ்வில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் அனுகூலமாய் அமைவார்கள். பெண்கள் ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகத்தால் லாபம் பெருகும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
capricorn-single-iconமகரம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். மருத்துவ செலவுகள் ஏற்படும். கையிருப்பு குறையும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்பட வேண்டும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பெற்றோர்களின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். தொழிலில் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
pisces-single-iconமீனம் இன்று உறவினர்கள் வருகையால் குடுமபத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் கிட்டும். ஆடை ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.