Tamil Daily Rasi Palan 16th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  16.04.2017

இன்றைய  பஞ்சாங்கம் 16-04-2017, சித்திரை-3, ஞாயிற்றுக்கிழமை, பஞ்சமி திதி இரவு 10.16 வரை பின்பு தேய்பிறை சஷ்டி. கேட்டை நட்சத்திரம் மாலை 04.38 வரை பின்பு மூலம். மரணயோகம் மாலை 04.38 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள், சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
சுக்கி சூரியபுதன்(வ) செவ்
கேது திருக்கணித கிரக நிலை16.04.2017  
ராகு
சனி  (வ) சந்தி குரு  (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 16.04.2017

aries-single-iconமேஷம் இன்று நீங்கள் மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். பிறரிடம் தேவையில்லாமல் கோபப்படும் சூழ்நிலை உருவாகும். இன்று மாலை 04.38 வரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. மற்றவர்களிடம் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்ப்பது உத்தமம்.
taurus-single-iconரிஷபம் இன்று எந்த செயலையும் மன தைரியத்தோடு செய்து முடிப்பீர்கள். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மதியத்திற்கு பிறகு மனஅமைதி குறையும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வியாபார வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வருமானம் பெருகும்.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார ரீதியான வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
virgo-single-iconகன்னி இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பால் மன மகிழச்சி அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரத்தில் பணிபுரிபவர்கள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்ற நிலை உண்டாகும். சேமிப்பு உயரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட காலதாமதமாகும். தேவையில்லாத செலவுகளால் கையிருப்பு குறையும். பணபற்றாக்குறை சமாளிக்க சிக்கனமுடன் செயல்படவேண்டும். அனுபவமுள்ள பெரியவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் பல புதிய மாற்றங்கள் உண்டாகும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்க விற்க நல்ல அனுகூலமான நாளாகும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
capricorn-single-iconமகரம் இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனை குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.
aquarius-single-iconகும்பம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் பணிச்சுமை கூடும். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவி கிட்டும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
pisces-single-iconமீனம் இன்று உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலப் பலன் உண்டாகும். செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சனைகள் குறையும்.