Tamil Daily Rasi Palan 18th March 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  18.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்   18.03.2017, பங்குனி -5, சனிக்கிழமை,      சஷ்டி திதி பின் இரவு 05.53 வரை பின்பு தேய்பிறை சப்தமி, அனுஷம் நட்சத்திரம் பின் இரவு 06.14 வரை பின்பு கேட்டை, நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1/2,சஷ்டி விரதம் முருக வழிபாடு உத்தமம். இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.  
சூரிய புதன் சுக்கி (வ) செவ்
கேது திருக்கணித கிரக நிலை18.03.2017  
ராகு
சனி   சந்தி குரு (வ)

இன்றைய ராசிப்பலன் – 18.03.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வெளி இடங்களில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப காரியங்களை தள்ளி வைப்பது நல்லது. எந்த செயலிலும் கவனம் தேவை.
taurus-single-iconரிஷபம் இன்று உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புதிய இடம் பொருள் வாங்க அனுகூலமான நாளாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு புது தெம்பைத் தரும்.
cancer-single-iconகடகம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் பிரச்சனைகள் ஏற்படும். சுபகாரியங்களில் மந்த நிலை இருக்கும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும்.
virgo-single-iconகன்னி இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
libra-single-iconதுலாம் இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். திருமண சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். ஆன்மீக காரியங்களில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
sagittarius-single-iconதனுசு இன்று உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு தேவையற்ற இடமாற்றத்தால் டென்ஷன் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிலும் நிதானம் தேவை.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் திறமைகள் பாராட்டப்படும். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சேமிப்பு உயரும்.
pisces-single-iconமீனம் இன்று தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். உங்களின் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் குறையும்.