Tamil Daily Rasi Palan 18th May 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  18.05.2017

இன்றைய  பஞ்சாங்கம்

18-05-2017, வைகாசி -4, வியாழக்கிழமை, சப்தமி திதி மாலை 05.43 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவோணம் நட்சத்திரம் காலை 09.26 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

சுக்கி புதன் சூரியசெவ்
கேது திருக்கணித கிரக நிலை18.05.2017

 

சந்தி ராகு
சனி  (வ) குரு  (வ)

 


இன்றைய ராசிப்பலன் – 18.05.2017

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வேலையில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும்.


taurus-single-iconரிஷபம்

இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகள் தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். சுபகாரியங்கள் கைகூடும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.


cancer-single-iconகடகம்

இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் கால தாமதம் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக சிறு தொகையை கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுபமுயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் சிறப்பாக நடைபெற்று லாபம் அமோகமாக இருக்கும். கடன்கள் குறையும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.


aquarius-single-iconகும்பம்

இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். வேலையில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். எதிலும் நிதானம் தேவை.


pisces-single-iconமீனம்

இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.