Tamil Daily Rasi Palan 1st June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  01.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 01-06-2017, வைகாசி -18, வியாழக்கிழமை, சப்தமி திதி காலை 06.20 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. மகம் நட்சத்திரம் பகல் 11.15 வரை பின்பு பூரம். அமிர்தயோகம் பகல் 11.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1, ஜீவன் – 1/2. இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
புதன்சுக்கி சூரிய செவ்
கேது திருக்கணித கிரக நிலை01.06.2017  
ராகுசந்தி
சனி(வ)   குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 01.06.2017

aries-single-iconமேஷம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மந்த நிலை உண்டாகும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் தடைப்படக்கூடும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை விஷயமாக அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் கிட்டும். பணப்பிரச்சனை ஓரளவு குறையும். நிதானம் தேவை.
gemini-single-iconமிதுனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் திறமைக்கேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.
cancer-single-iconகடகம் இன்று உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதமாகும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் பெண்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் தேவையில்லாத இடமாற்றத்தால் மன நிம்மதி கெடும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். கடன்கள் குறையும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வேலையில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிட்டும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். புத்திர வழியில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வருமானம் பெருகும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். உங்கள் அலட்சியத்தால் வியாபாரத்தில் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.
capricorn-single-iconமகரம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை வேண்டும். உத்தியோகத்தில் கவனம் தேவை.
aquarius-single-iconகும்பம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் வீண் மனஸ்தாபங்கள் தோன்றலாம். சேமிப்பு குறையக்கூடும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். கடன் பிரச்சனைகள் குறையும்.
pisces-single-iconமீனம் இன்று இல்லத்தில் இனிய செய்தி வந்து சேரும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணப்பிரச்சனைகள் நீங்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.