Tamil Daily Rasi Palan 20th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  20.04.2017

இன்றைய  பஞ்சாங்கம் 20-04-2017, சித்திரை-7, வியாழக்கிழமை, நவமி திதி பின்இரவு 04.55 வரை பின்பு தேய்பிறை தசமி. திருவோணம் நட்சத்திரம் இரவு 01.51 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம் நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவருக்கு வழிபாடு நல்லது. நடராஜர் அபிஷேகம். சுப முயற்சிகளையும். பயணங்களையும் தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
சுக்கி சூரியபுதன்(வ) செவ்
கேது திருக்கணித கிரக நிலை20.04.2017  
சந்தி ராகு
சனி(வ) குரு  (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 20.04.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உறவினர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும், வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். கடன்கள் குறையும்.
taurus-single-iconரிஷபம் இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்பு உண்டாகும். பணபற்றாக்குறையினால் குடும்பத்தில் நெருக்கடிகள் ஏற்படக்கூடும். உடன்பிறந்தவர்கள் வாயிலாக உதவிகள் வந்து சேரும். தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தெய்வ வழிபாடு நிம்மதியை தரும்.
gemini-single-iconமிதுனம் இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மற்றவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியிடங்களில் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.
cancer-single-iconகடகம் இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் உதவிகள் கிட்டும். வேலையில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
leo-single-iconசிம்மம் இன்று பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். பொன் பொருள் சேரும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கி வருமானம் பெருகும்.
libra-single-iconதுலாம் இன்று வேலையில் எதிர்பாராத வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்களின் உதவியால் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் மூலம் வீண் பிரச்சனைகள் தோன்றும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
capricorn-single-iconமகரம் இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கடன் பிரச்சனைகள் தீரும்.
aquarius-single-iconகும்பம் இன்று உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நல்ல பலன்களை தரும். உத்தியோகத்தில் புதிய நட்பு உண்டாகும். எதிர்பார்த்திருந்த வங்கி கடன் கிடைக்கப்பெறும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகள் மூலம் குடும்பத்தில் அனுகூலம் கிட்டும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சேமிப்பு உயரும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் கூடும்.