Tamil Daily Rasi Palan 23rd April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.04.2017

இன்றைய  பஞ்சாங்கம் 23-04-2017, சித்திரை-10, ஞாயிற்றுக்கிழமை, துவாதசி திதி பின்இரவு 02.26 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. பூரட்டாதி நட்சத்திரம் பின்இரவு 01.40 வரை பின்பு உத்திரட்டாதி. சித்தயோகம் இரவு பின்01.40 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. வாஸ்து நாள் மனை பூஜை செய்ய உகந்த நேரம் காலை 08.50 மணிக்கு மேல் 09.26 மணிக்குள். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
சுக்கி  சூரியபுதன்(வ) செவ்
கேதுசந்தி திருக்கணித கிரக நிலை23.04.2017      
ராகு
சனி(வ)   குரு  (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 23.04.2017

aries-single-iconமேஷம் இன்று உடன் பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகமாகும். வீட்டில் சுப பேச்சுக்கள் நல்ல பலனை தரும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் உதவியால் கடன் பிரச்சனைகள் தீரும்.
taurus-single-iconரிஷபம் இன்று பணவரவு அமோகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் குறைவில்லாமல் இருக்கும். பிள்ளைகள் கலைத்துறையில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். வியாபாரத்தின் முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் எளிதில் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
cancer-single-iconகடகம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. சுபகாரியங்களை தவிர்க்கவும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அனுபவமுள்ளவர்களின் அறிவுரையால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும்.
virgo-single-iconகன்னி இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பெண்கள் சிக்கனமாக செயல்படுவார்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் மனக்கசப்பு ஏற்படும். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் கிடைக்கும். மற்றவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வருமானம் இரட்டிப்பாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
sagittarius-single-iconதனுசு இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடையப் போகிறீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். மதிநுட்பத்துடன் செயல்பட்டால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள்.
aquarius-single-iconகும்பம் இன்று இல்லத்தில் இனிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். தொழில் வளர்ச்சிக்கான வங்கி கடன் கிடைக்கும். பெண்களுக்கு வீட்டில் பணிச்சுமை குறையும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும்.
pisces-single-iconமீனம் இன்று பிள்ளைகளால் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். ஆடம்பர செலவுகளால் வீண் விரயங்கள் உண்டாகும். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும். குடும்பத்தினரை அனுசரித்து சென்றால் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.