Tamil Daily Rasi Palan 23rd March 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  23.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்   23.03.2017, பங்குனி – 10, வியாழக்கிழமை, தசமி திதி பகல் 01.28 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி, உத்திராடம் நட்சத்திரம் பகல் 03.47 வரை பின்பு திருவோணம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுகூர்த்த நாள் சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
சூரிய புதன்சுக்கி(வ) செவ் 
கேது திருக்கணித கிரக நிலை23.03.2017    
சந்தி ராகு
சனி   குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 23.03.2017

aries-single-iconமேஷம் இன்று தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழத்திடுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு மேலதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபசெலவுகள் உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி கூடும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய நவீன பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்களை தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு உயரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.
libra-single-iconதுலாம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படும். வியாபாரத்தில் மந்த நிலை தோன்றும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று பிள்ளைகள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிட்டும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணபற்றாக்குறை நீங்கும். வருமானம் பெருகும். பொன் பொருள் சேரும்.
sagittarius-single-iconதனுசு இன்று பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். சிக்கனமாக நடந்து கொள்வதன் மூலம் பணப்பிரச்சனை விலகும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் தொட்ட காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் ஒற்றுமை கூடும். பணம் கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல பலனை தரும்.
aquarius-single-iconகும்பம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். உறவினர்களுடன் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற பிரச்சனையால் மன உளைச்சல் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை இருந்தாலும் பெரிய கெடுதி இருக்காது. நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
pisces-single-iconமீனம் இன்று உற்றார் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கப்பெறும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு உயரும்.