Tamil Daily Rasi Palan 25th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  25.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

25.01.2017, தை 12, புதன்கிழமை,         திரியோதசி திதி பின்இரவு 03.57 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தசி, மூலம் நட்சத்திரம் மாலை 06.46 வரை பின்பு பூராடம், மரணயோகம்  மாலை 06.46 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, வாஸ்து நாள் மனை பூஜை செய்ய உகந்த நேரம் பகல் 10.46 &11.22, பிரதோஷம் சிவ வழிபாடு நல்லது.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

செவ்
கேதுசுக்கி

 

திருக்கணித கிரக நிலை25.01.2017

 

 

சூரிய ராகு
புதன் சந்தி சனி குரு

இன்றைய ராசிப்பலன் – 25.01.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பிள்ளைகளால் வீண் செலவுகள் செய்யும் சூழ்நிலை ஏற்படும். அலுவலகத்தில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செயல்படுவதன் மூலம் பிரச்சனைகளை குறைக்கலாம். பணவரவு சுமாராக இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களுக்கு தேவையில்லாத மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும். எந்த செயலிலும் பொறுமையை இருப்பது நல்லது. அலுவலகத்தில் பணிபுரிவோர் தங்கள் மேலதிகாரிகளுடன் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்களுக்கு பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடியே செய்து முடிப்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு புதிய நபரின் அறிமுகத்தால் பல புதிய அனுபவங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்துடன் நீண்ட தூர பயணம் செல்லும் வாய்ப்பு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்க்கு வேலைபளு குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு உடலில்  சிறுசிறு உபாதைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் செய்வோர் கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவு தாரளமாக அமைந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்ப செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு நம்பிக்கையை கொடுக்கும். சிந்தித்து செயல்பட்டால் வியாபாரத்தில் முன்னேறலாம்.


libra-single-iconதுலாம்

இன்று நீங்கள் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபத்தை அடைவீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்களுக்கு சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகளில் அனகூலமான பலன்கள் கிடைக்கும். ஒருசிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து சுமுக நிலை ஏற்படும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். உங்களின் பிரச்சனைகளுக்கு உறவினர்கள் இன்று பக்க பலமாக இருந்து உதவுவார்கள்.


aquarius-single-iconகும்பம்

இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். தொழில் சம்பந்தமான வங்கி கடன்கள் எளிதில் கிடைக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். இன்று உங்களுக்கு எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். திருமண சுபமுயறசிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.