Tamil Daily Rasi Palan 26th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  26.04.2017

இன்றைய  பஞ்சாங்கம்

26-04-2017, சித்திரை-13, புதன்கிழமை, அமாவாசை திதி மாலை 05.46 வரை பின்பு வளர்பிறை பிரதமை. அஸ்வினி நட்சத்திரம் இரவு 07.19 வரை பின்பு பரணி. மரணயோகம் இரவு 07.19 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சர்வ அமாவாசை. சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00

 

சுக்கி

 

சூரிய புதன்(வ) சந்தி செவ்
கேது திருக்கணித கிரக நிலை26.04.2017
ராகு
சனி(வ) குரு  (வ)

 


இன்றைய ராசிப்பலன் – 26.04.2017

aries-single-iconமேஷம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். இருக்கும் இடத்தில் புதிய பதவிகள் வந்து சேரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். கடன் பிரச்சனைகள் தீரும்.


taurus-single-iconரிஷபம்

இன்று உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உண்டாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் புது பொலிவுடனும், உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சொத்துக்கள் வாங்க அனுகூலமான நாளாகும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகள் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும்.


leo-single-iconசிம்மம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் ஆர்வமின்றி செயல்படுவார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். குடும்பத்தினர் உறுதுணையாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


virgo-single-iconகன்னி

இன்று செய்யும் செயல்களில் தாமதப்பலனே கிட்டும். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கவனம் தேவை.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். உத்தியோகம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வருமானம் பெருகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று உங்கள் திறமைகளை வெளிபடுத்தும் நாளாக இந்த நாள் அமையும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே மனஸ்தாபங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். திருமண விஷயமாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.


sagittarius-single-iconதனுசு

உறவினர்களுக்கிடையே வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றம் ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் ஏற்படும். நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உங்கள் உடல்நிலையில் சிறு உபாதைகள் வந்து நீங்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். வேலையில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த ஒரு கடினமான காரியத்தையும் எளிதில் செய்து முடித்து வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.


pisces-single-iconமீனம்

இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் உண்டாகும். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உறவினர்களால் உதவிகள் கிட்டும்.