Tamil Daily Rasi Palan 27th March 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  27.03.2017

இன்றைய  பஞ்சாங்கம்

 

27.03.2017, பங்குனி – 14, திங்கட்கிழமை, சதுர்த்தசி திதி பகல் 10.45 வரை பின்பு அமாவாசை, பூரட்டாதி நட்சத்திரம் பகல் 03.20 வரை பின்பு உத்திரட்டாதி, மரணயோகம் பகல் 03.20 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 0, சர்வ அமாவாசை, சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.

 

சூரிய புதன்சுக்கி(வ)   செவ்
கேது சந்தி திருக்கணித கிரக நிலை27.03.2017

 

ராகு
சனி குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 27.03.2017

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஊழியர்களை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் காணலாம். நண்பர்களின் உதவியால் கடன்சுமை ஓரளவு குறையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். சொத்துக்கள் வாங்குவதற்கான முயற்சிகள் அனுகூலமான தரும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


gemini-single-iconமிதுனம்

இன்று வியாபாரத்தில் உங்கள் பேச்சு திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில தடைக்கு பின்பு அனுகூலம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையாட்களை அனுசரித்து சென்றால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் கவனம் தேவை.


virgo-single-iconகன்னி

இன்று நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை கொடுக்கும். வங்கி சேமிப்பு உயரும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்கள் பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பிள்ளைகளின் படிப்பில் ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை ஏற்படுத்தும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி குறையும். தொழிலில் எதிர்பாராத செலவுகள் தோன்றும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு குறையும். தெய்வ வழிபாடு நல்லது.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நல்ல பலனை தரும். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். வீட்டில் ஒற்றுமை கூடும். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்க்காத லாபம் கிட்டும். தொழில் வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் வெற்றியை தரும்.  சுபகாரியங்கள் கைகூடும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் முடியும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொன் பொருள் சேரும்.