Tamil Daily Rasi Palan 29th January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  29.01.2017

இன்றைய பஞ்சாங்கம் 29.01.2017 தை 16 ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி பின்இரவு 05.25 பின்பு வளர்பிறை திரிதியை, அவிட்டம் நட்சத்திரம் இரவு 11.03 வரை பின்பு சதயம், மரணயோகம் இரவு 11.03 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 0, சந்திர தரிசனம், சுப முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
செவ் சுக்கி 
கேது    திருக்கணித கிரக நிலை29.01.2017  
சூரிய சந்தி ராகு
புதன் சனி    குரு 
 

இன்றைய ராசிப்பலன் – 29.01.2017

aries-single-iconமேஷம் இன்று எடுக்கும் காரியங்களில் எல்லாம் வெற்றி உண்டாகும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். புதிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.
taurus-single-iconரிஷபம் இன்று உடன் பிறந்தவர்கள் வாயிலாக சுப செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் ஆர்வத்துடன் படிப்பார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் போட்டு வெற்றி அடைவீர்கள். வருமானம் லாபகரமாக இருக்கும்.
gemini-single-iconமிதுனம் இன்று பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். மதியத்திற்கு பிறகு மனநிம்மதி ஏற்படும். பொறுமையை கடைபிடிப்பதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு காலை 10.54 க்கு பின் சந்திராஷ்டமம் இருப்பதால் சுப காரியங்கள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.
leo-single-iconசிம்மம் இன்று எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பெற்றோரிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.
virgo-single-iconகன்னி இன்று பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண முயற்சிகள் தொடங்க அனுகூலமான நாளாகும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.
libra-single-iconதுலாம் இன்று பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று பிள்ளைகளால் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமை கூடும். பெரியவர்களின் மதிப்பை பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்களுக்கு புது நம்பிக்கையும், தெம்பும் உண்டாகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
capricorn-single-iconமகரம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட உபாதைகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் பல இடையூறுகள் தோன்றும். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு நம்பிக்கையை தரும். வீட்டில் பெண்களின் பணிசுமை குறையும்.
aquarius-single-iconகும்பம் இன்று இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் சுபசெலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கப்பெறும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.
pisces-single-iconமீனம் இன்று பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணபற்றாக்குறையை தவிர்க்கலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் லாபம் பெருகும்.