Tamil Daily Rasi Palan 31st January 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  31.01.2017

இன்றைய பஞ்சாங்கம்

31.01.2017, தை 18, செவ்வாய்கிழமை, சதுர்த்தி திதி பின்இரவு 03.41 வரை பின்பு வளர்பிறை பஞ்சமி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 10.44 வரை பின்பு உத்திரட்டாதி, மரணயோகம் இரவு 10.44 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 0, ஜீவன் 1/2, மாத சதுர்த்தி விநாயக & முருக வழிபாடு நல்லது, சுப முயற்சிகளை தவிர்க்கவும்.

இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

 

செவ் சுக்கி
கேது  சந்தி  திருக்கணித கிரக நிலை31.01.2017

 

 

சூரிய ராகு
புதன் சனி    குரு 

இன்றைய ராசிப்பலன் – 31.01.2017

aries-single-iconமேஷம்

இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.


taurus-single-iconரிஷபம்

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவதன் மூலம் முன்னேற்றம் அடையலாம். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.


gemini-single-iconமிதுனம்

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். மன உறுதியோடு பிரச்சனைகளை எதிர் கொள்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் பல புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் ராசிக்கு மாலை 4.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமின்றி இருப்பார்கள். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். அனுபமுள்ளவர்களின் அறிவுரைகளால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.


virgo-single-iconகன்னி

இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடைய முடியும்.


libra-single-iconதுலாம்

இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருமானம் பெருகும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். தொழில் சம்பந்தமாக வெளி வட்டார நட்பு கிடைக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமற்ற பலனை தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை குறைவு உண்டாகும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று பணவரவு சுமாராக இருக்கும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைய கடின உழைப்பு தேவை. உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். தெய்வ வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.


pisces-single-iconமீனம்

இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் குறையும். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.