Tamil Daily Rasi Palan 31st May 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  31.05.2017

இன்றைய  பஞ்சாங்கம் 31-05-2017, வைகாசி -17, புதன்கிழமை, சஷ்டி திதி காலை 07.11 வரை பின்பு வளர்பிறை சப்தமி. ஆயில்யம் நட்சத்திரம் பகல் 11.13 வரை பின்பு மகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1 , ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக – நவகிரக வழிபாடு நல்லது. கரிநாள். சுப முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 09.00-10.00,  மதியம் 1.30-2.00,  மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00,  11.00-12.00  
சுக்கி புதன் சூரிய செவ்
கேது திருக்கணித கிரக நிலை31.05.2017   சந்தி
ராகு
சனி(வ) குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 31.05.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிட்டும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் கூடும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரத்தில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று அலுவலக பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்கான வங்கி கடன் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வெளிவட்டார நட்பு சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். சுபகாரியங்கள் கைகூடும்.
cancer-single-iconகடகம் இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.
leo-single-iconசிம்மம் இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறையக்கூடும். தொழிலில் மந்த நிலை ஏற்படும். செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். கடன் பிரச்சனைகள் சற்று குறையும். பிள்ளைகளால் அனுகூலம் கிட்டும். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்-.
virgo-single-iconகன்னி இன்று வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பழைய கடன்கள் வசூலாகும்.
libra-single-iconதுலாம் இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். புதிய கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். பிள்ளைகள் படிப்பு விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகள் நற்பலனை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் அனுகூலமான பலனை தரும். குடும்பத்தில் பெற்றோர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
sagittarius-single-iconதனுசு இன்று உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். தேவையற்ற அலைச்சல்களால் டென்ஷன் உண்டாகும். உங்கள் ராசிக்கு காலை 11.13 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பயணங்களை தவிர்ப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது உத்தமம்.
capricorn-single-iconமகரம் இன்று உங்கள் ராசிக்கு காலை 11.13 மணி முதல் சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். கடின உழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும்.  சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் அனுகூலப்பலன் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் பெறுவீர்கள்.