Tamil Daily Rasi Palan 3rd April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  03.04.2017

இன்றைய  பஞ்சாங்கம்   03.04.2017, பங்குனி – 21, திங்கட்கிழமை, சப்தமி திதி பகல் 01.05 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி, திருவாதிரை நட்சத்திரம் இரவு 11.59 வரை பின்பு புனர்பூசம், சித்தயோகம் இரவு 11.59 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் ½.   இராகு காலம்-  காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00,  இரவு 10.00-11.00.  
சூரியசுக்கி   (வ) செவ்புதன் சந்தி
கேது திருக்கணித கிரக நிலை03.04.2017  
ராகு
சனி குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 03.04.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கப்பெறும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். சிலருக்கு வேலை சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.
taurus-single-iconரிஷபம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். பணவரவு தாராளமாக இருப்பதால் கடன்பிரச்சனை குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
gemini-single-iconமிதுனம் உங்கள் குடும்பத்தில் தாராள தன வரவும், லஷ்மிகடாட்சமும் உண்டாகும். கடன் பிரச்சனைகள் தீரும்.  திருமண சுபமுயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் அனுகூலமான நாளாகும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி செயல்படுவார்கள்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் அமைதி குறையும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது.
leo-single-iconசிம்மம் இன்று உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வீட்டுத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும், வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு ஊதிய உயர்வு உண்டாகும்.
virgo-single-iconகன்னி இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் தங்கள் திறமைகளை வெளிபடுத்தி மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். நீண்ட நாள் எதிர்பார்த்த உதவி இன்று கிடைக்கப்பெறும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி கிட்டும்.
libra-single-iconதுலாம் இன்று உங்கள் உடல்நிலையில் சற்று சோர்வு ஏற்படும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் குறைந்து காணப்படுவார்கள். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் நீங்கள் இன்று சற்று குழப்பமாகவே காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் நடைபெறுவதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். உத்தியோக ரீதியான மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
capricorn-single-iconமகரம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் கிட்டும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் தனவரவு தாராளமாக இருக்கும். பழைய கடன்கள் தீரும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
pisces-single-iconமீனம் இன்று எந்த காரியத்தை செய்தாலும் தடைகள் ஏற்படக் கூடும். உத்தியோகத்தில் சக நண்பர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் உடல் சோர்வு ஏற்படும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் சந்திப்பு புது தெம்பை தரும்.