Tamil Daily Rasi Palan 5th March 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  05.03.2017

  05.03.2017, மாசி 21, ஞாயிற்றுக்கிழமை, அஷ்டமி திதி பின்இரவு 03.59 வளர்பிறை நவமி, ரோகிணி நட்சத்திரம் இரவு 09.00 வரை பின்பு மிருகசீரிஷம், நாள் முழுவதும் சித்தயோகம், நேத்திரம் 1, ஜீவன் 1/2, சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,  
சுக்கி(வ) செவ் சந்தி
சூரிய கேதுபுதன் திருக்கணித கிரக நிலை05.03.2017  
ராகு
சனி குரு  (வ) 

இன்றைய ராசிப்பலன் – 05.03.2017

aries-single-iconமேஷம் இன்று உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் சற்று குறையும்.
taurus-single-iconரிஷபம் இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். தர்ம காரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
gemini-single-iconமிதுனம் இன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.
cancer-single-iconகடகம் இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடைபெறும். சுப செலவுகள் தோன்றும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள்.
virgo-single-iconகன்னி இன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.
libra-single-iconதுலாம் இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
sagittarius-single-iconதனுசு இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். செலவுகள் அதிகமாகும். சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும். திருமண முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். எந்த செயலிலும் நிதானம் தேவை.
pisces-single-iconமீனம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும்.