Tamil Daily Rasi Palan 6th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  06.04.2017

இன்றைய  பஞ்சாங்கம்   6.04.2017, பங்குனி – 24, வியாழக்கிழமை, தசமி திதி காலை 09.16 வரை பின்பு வளர்பிறை ஏகாதசி, ஆயில்யம் நட்சத்திரம் இரவு 11.00 வரை பின்பு மகம், சித்தயோகம் இரவு 11.00 வரை பின்பு அமிர்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, நவகிரக வழிபாடு உத்தமம், தனிய நாள், புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.   இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
சூரியசுக்கி (வ) செவ்புதன்
கேது திருக்கணித கிரக நிலை06.04.2017   சந்தி
ராகு
சனி குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 06.04.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் உடன்பிறந்தவர்களுக்கிடையே ஒற்றுமை குறைந்து பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.  வியாபார ரீதியான செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த நெருகக்கடிகள் சற்று குறையும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.
gemini-single-iconமிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் படிப்பு சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் உடன் பணி புரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். பூர்வீக சொத்துகளால் அனுகூலப்பலன் கிட்டும்.
cancer-single-iconகடகம் இன்று குடும்பத்தில் தாராள தன வரவு உண்டாகும். உறவினர்கள் முலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெறும். அரசு துறையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும்.
leo-single-iconசிம்மம் இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக் கூடும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக அமைவார்கள். உற்றார் உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் பொருட்தேக்கம் ஏற்படாது.
virgo-single-iconகன்னி இன்று எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்க்கு கௌரவ பதவிகள் கிட்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.
libra-single-iconதுலாம் இன்று உடல்நிலையில் புது தெம்பும் உற்சாகமும் இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராகதான் இருக்கும். உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாக முடியும். பூர்வீக சொத்துக்களை விற்பதில் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.
sagittarius-single-iconதனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சற்று மனகுழப்பத்துடன் காணப்படுவீர்கள்.  பிறரை நம்பி பெரிய தொகையை கொடுப்பது, அல்லது கடன் பெறுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் வேலையில் மேலதிகாரிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
capricorn-single-iconமகரம் இன்று உற்றார் உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பங்கள் நடைபெறும். பிள்ளைகள் அனுகூலமாக அமைவார்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கிடையே வெற்றி ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும்.
aquarius-single-iconகும்பம் இன்று தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நல்ல பலனை தரும். திடீர் என்று நல்ல செய்தி வரும், சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். மனஅமைதி இருக்கும்.
pisces-single-iconமீனம் இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளால் மனநிம்மதி குறையும்.  வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும்.  பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். கடன்கள் விலகும்.