Tamil Daily Rasi Palan 8th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  08.04.2017

இன்றைய  பஞ்சாங்கம்

 

8.04.2017, பங்குனி – 26, சனிக்கிழமை, துவாதசி திதி காலை 09.00 வரை பின்பு வளர்பிறை திரியோதசி, பூரம் நட்சத்திரம் இரவு 12.32 வரை பின்பு உத்திரம், சித்தயோகம் இரவு 12.32 வரை பின்பு மரணயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, சனி பிரதோஷம், சிவ வழிபாடு உத்தமம்.

இராகு காலம் – காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள்- காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு09.00-10.00.

 

சூரியசுக்கி   (வ) செவ்புதன்
கேது திருக்கணித கிரக நிலை08.04.2017

 

ராகுசந்தி
சனி(வ) குரு  (வ)

இன்றைய ராசிப்பலன் – 08.04.2017

aries-single-iconமேஷம்

இன்று உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கப்பெறுவதில் காலதாமதம் ஏற்படும்.  குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட கூடும். திருமண முயற்சிகளில் சிறு தடைகளுக்குப் பின் அனுகூலப் பலன் கிட்டும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். அரசு பணியில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பொன் பொருள் சேரும்.


cancer-single-iconகடகம்

இன்று பிள்ளைகளுக்கு வயிறு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உத்தியோகத்தில் புதிய நபர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. நண்பர்களால் அனுகூலம் கிட்டும்.


leo-single-iconசிம்மம்

இன்று குடும்பத்தினருக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சொந்த தொழில் புரிவோர்க்கு வெளிநாட்டு தொடர்பு கிட்டும். புதிய சொத்துக்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரியங்கள் கைகூடும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் உற்றார் உறவினர்களுக்கிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஓத்துழைப்பு கிட்டும். தொழில் சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி உண்டாகும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். பழைய கடனகள் தீரும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும், பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். பணப்பிரச்சனைகள் குறையும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும். எதிலும் கவனம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைப்பதன் மூலம் பணப்பிரச்சனையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு மனஅமைதியை தரும்.


capricorn-single-iconமகரம்

இன்று எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது சிறப்பு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடனும் நிதானத்துடனும் செல்வது நல்லது.


aquarius-single-iconகும்பம்

இன்று பிள்ளைகள் மூலம் ஆனந்தமான செய்தி வந்து சேரும். உறவினர்களால் உதவி கிடைக்கும். பொன்பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்சி தரும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். பெரிய மனிதர்களுடன் நட்பு ஏற்படும். பணவரவு தாரளமாக இருக்கும்.


pisces-single-iconமீனம்

இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களின் மூலமாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனு-கூலமான பலன் உண்டாகும். சேமிப்பு உயரும்.