Tamil Daily Rasi Palan 8th June 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  08.06.2017

இன்றைய  பஞ்சாங்கம் 08-06-2017, வைகாசி -25, வியாழக்கிழமை, சதுர்த்தசி திதி மாலை 04.16 வரை பின்பு பௌர்ணமி. அனுஷம் நட்சத்திரம் பின்இரவு 02.14 வரை பின்பு கேட்டை. சித்தயோகம்  பின் இரவு 02.14 வரை பின்பு பிரபலாரிஷ்டயோகம். நேத்திரம் – 2, ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.  
  சுக்கி சூரிய புதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை08.06.2017  
ராகு
சனி(வ)   சந்தி குரு (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 08.06.2017

aries-single-iconமேஷம் இன்று உங்களுக்கு தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வெளியிலிருந்து வர வேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமா-கும். எந்த ஒரு செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பொன்பொருள் வாங்கும் யோகம் சிலருக்கு உண்டு. குடும்பத்தில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி நிலவும். வேலையாட்கள் சாதகமாக இருப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும்.
gemini-single-iconமிதுனம் இன்று இல்லத்தில் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் உங்கள் பிரச்சனைக்கு நல்ல தீர்வு உண்டாகும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
cancer-single-iconகடகம் இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்தோடு செயல்படுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும். கடன் பிரச்சனைகள் தீரும். மன அமைதி இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் கிட்டும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும்.
leo-single-iconசிம்மம் இன்று அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப்பெறும். மாணவர்கள் படிப்பில் தங்கள் திறமைகளை வெளிபடுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சியை கொடுக்கும்.
virgo-single-iconகன்னி இன்று பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பண வரவு தாராளமாக இருக்கும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் புரிவோர்களுக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வேலையில் பணிச்சுமை குறையும்.
libra-single-iconதுலாம் இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். திருமண சுப முயற்சிகளில் மந்த நிலை ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் உங்களின் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மை தரும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உடன்பிறப்புகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் புதிய வாய்ப்புகள் அமையும். பூர்வீக சொத்துகளை வழியில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். பெரிய மனிதர்களின் அறிமுகம் உண்டாகும்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். குடும்பத்தில் கணவன்& மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்கள் உங்களின் வளர்ச்சிக்கு துணையாக இருப்பார்கள்.
capricorn-single-iconமகரம் இன்று உங்களுக்கு அமோகமான பலன்கள் உண்டாகும். தொழிலில் உங்கள் பெயர் புகழ் செல்வாக்கு கொடி கட்டி பறக்கும். அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்கள் கைகூடும்.
aquarius-single-iconகும்பம் இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.  உத்தியோகஸ்தர்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
pisces-single-iconமீனம் இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழிலில் உள்ள மந்த நிலை மாறும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும்.