Tamil Daily Rasi Palan 9th April 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  09.04.2017

இன்றைய  பஞ்சாங்கம்

 

09.04.2017, பங்குனி – 27, ஞாயிற்றுக்கிழமை, திரியோதசி திதி காலை 09.30 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி, உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 01.54 வரை பின்பு அஸ்தம், அமிர்தயோகம் பின்இரவு 01.54 வரை பின்பு சித்தயோகம், நேத்திரம் 2, ஜீவன் 1, பங்குனி உத்திரம் முருக வழிபாடு உத்தமம், சுபமுகூர்த்த நாள், சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

 

சூரியசுக்கி(வ) செவ்புதன்
கேது திருக்கணித கிரக நிலை09.04.2017

 

ராகுசந்தி
சனி(வ) குரு(வ)

இன்றைய ராசிப்பலன் – 09.04.2017

aries-single-iconமேஷம்

இன்று எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். பிள்ளைகளோடு இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நண்பர்களால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.


taurus-single-iconரிஷபம்

இன்று- வியாபாரத்தில் கூட்டாளிகளால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் எதிர்பார்க்காத செலவுகள் தோன்றும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் கிட்டும்.  மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தெய்வ வழிபாடு நன்மையை தரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.


cancer-single-iconகடகம்

இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று உடன் பிறந்தவர்களுக்கிடையே வீண் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் உண்டாகும். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். எதையும் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் வியக்க வைக்கும் இனிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு பொன்பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடமிருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் உறவினர்கள் மூலம் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்தலிருந்து உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பிள்ளைகள் விரும்பியதை வாங்கி மகிழ்வார்கள். உடனிருப்பரை அனுசரித்து செல்வது நல்லது.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று தொழில் வியாபாரம் சிறப்பாக நடைபெறும். குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருள்கள் வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுவார்கள். சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பொன் பொருள் சேரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று பிள்ளைகள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனையால் உங்கள் அறிவுத் திறமையாலும் வியாபாரத்தில் வளர்ச்சி அடைய கூடிய வாய்ப்புகள் உருவாகும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். கடன் பிரச்சனைகள் ஓரளவு தீரும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். வெளியூர் பயணங்களையும், புதிய முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது.


pisces-single-iconமீனம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.