Tamil Daily Rasi Palan 9th May 2017

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

                                                                            Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  09.05.2017

இன்றைய  பஞ்சாங்கம் 09-05-2017, சித்திரை-26, செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி திதி பின் இரவு 01.07 வரை பின்பு பௌர்ணமி. சித்திரை நட்சத்திரம் பகல் 12.01 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. நரசிம்ம ஜெயந்தி. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.  
சுக்கி சூரியபுதன் செவ்
கேது திருக்கணித கிரக நிலை09.05.2017  
ராகு
சனி  (வ) சந்தி குரு  (வ)
 

இன்றைய ராசிப்பலன் – 09.05.2017

aries-single-iconமேஷம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். பழைய கடன்கள் வசூலாகும்.
taurus-single-iconரிஷபம் இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மன ஸ்தாபம் நீங்கும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை கூடும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். புதிய பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.
gemini-single-iconமிதுனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்யகூடிய சூழ்நிலை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாய் இருப்பார்கள். பிள்ளைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் ரீதியாக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் வேலையில் உற்சாகத்துடன் ஈடுபடுவார்கள்.
cancer-single-iconகடகம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் நண்பர்களால் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலமான பலன் கிட்டும்.
leo-single-iconசிம்மம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்ற நிலை ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். வேலையில் முன்னேற்றம் ஏற்படும்.
virgo-single-iconகன்னி இன்று உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். குடும்பத்தினருடன் தேவையற்ற பிரச்சனைகள் தோன்றும். எடுக்கும் முயற்சிகளுக்கு உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் உண்டாகும். எதிலும் நிதானமாக இருப்பது நல்லது.
libra-single-iconதுலாம் இன்று நீங்கள் கடினமான காரியத்தை கூட திறமையுடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாய் இருப்பார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.
scorpio-single-iconவிருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் தாமதநிலை ஏற்படும். மன அமைதி  குறைவதற்கான சூழ்நிலை உருவாகும். சுபமுயற்சிகளில் நற்செய்தி கிடைக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக இருப்பார்கள்.
sagittarius-single-iconதனுசு இன்று நீங்கள் செய்யும் செயலில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். நண்பர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக மாறி  நன்மை செய்வார்கள்.
capricorn-single-iconமகரம் இன்று நீங்கள் தொட்ட காரியம் எல்லாம் வெற்றியில் முடியும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய கருவிகள் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.  அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் கிட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
aquarius-single-iconகும்பம் இன்று உங்கள் உடல் நிலையில் சோர்வும், மந்தமும் உண்டாகும். பிள்ளைகளுக்காக சிறு தொகை செலவிட நேரிடும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்கள் உதவியால் பணப்பிரச்சனை குறையும்.
pisces-single-iconமீனம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன அமைதி குறையும். வியாபாரத்தில் மற்றவர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும்.