Tamil Daily Rasi Palan Today 12th July 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  12.07.2020

இன்றைய  பஞ்சாங்கம்

12-07-2020, ஆனி 28, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி பகல் 03.48 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 08.18 வரை பின்பு ரேவதி. நாள் முழுவதும் அமிர்த யோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00,  மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,

செவ் சந்தி

 

சுக்கி

சூரிய ராகு புதன் (வ)

 

திருக்கணித கிரக நிலை

12.07.2020

 

சனி (வ)

 

குரு(வ) கேது

 

 

 


இன்றைய ராசிப்பலன் – 12.07.2020

aries-single-iconமேஷம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் தடை தாமதங்கள் உண்டாகும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலனை அடைய முடியும். சகோதர சகோதரிகளின் ஆதரவு சிறப்பாக இருக்கும்.

taurus-single-iconரிஷபம்

இன்று உங்களுக்கு அதிகாலையிலே சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் உங்கள் மதிப்பு கூடும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் போட்டி பொறாமைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை நினைத்தபடி செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தொழிலில் அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் நற்பலன் கிடைக்கும். வம்பு வழக்கு போன்ற விஷயங்களில் சாதகப் பலன் கிட்டும். திடீர் பணவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்களுக்கு உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை இருக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் விலகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.


leo-single-iconசிம்மம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் நிலையில் சோர்வும் தேவையற்ற மனகுழப்பமும் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் போது அதிக கவனம் தேவை.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் மூலம் மன அமைதி ஏற்படும். பணி புரிவோர்களுக்கு அவர்கள் திறமைகேற்ப பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத வகையில் சுபசெலவுகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு உபாதைகள் ஏற்பட்டாலும் பாதிப்புகள் உண்டாகாது. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு அமையும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் பெரியவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் தோன்றும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.


sagittarius-single-iconதனுசு

இன்று நீங்கள் சிறு மனக்குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவுகள் உண்டாகும். வியாபார ரீதியாக வெளிமாநில நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் பெறுவர். கடன் பிரச்சினைகள் சற்று குறையும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். சுப காரிய முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும்.


aquarius-single-iconகும்பம்

இன்று உங்களுக்கு உடல் சோர்வால் செய்யும் செயல்களில் தாமதம் உண்டாகும். வண்டி வாகனங்களால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். சொத்து சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். தொழில் ரீதியான பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலப் பலன் கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிட்டும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்து நல்ல லாபத்தை அடைவீர்கள். நண்பர்களின் உதவி கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.