Tamil Daily Rasi Palan Today 13th September 2019

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  13.09.2019

இன்றைய  பஞ்சாங்கம்

 

13-09-2019, ஆவணி 27, வெள்ளிக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.35 வரை பின்பு பௌர்ணமி. சதயம் நட்சத்திரம் இரவு 07.58 வரை பின்பு பூரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

 

 

 

ராகு

சந்தி

திருக்கணித கிரக நிலை

13.09.2019

 

 

சூரிய செவ்

சனி (வ) கேது

குரு

 

சுக்கி புதன்


இன்றைய ராசிப்பலன் – 13.09.2019

aries-single-iconமேஷம்

இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். எந்த வேலையையும் புது பொலிவுடனும், தெம்புடனும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலப் பலன் கிட்டும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.


taurus-single-iconரிஷபம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினை தீரும். பெரியவர்களின் நட்பு கிட்டும். தேவைகள் யாவும் நிறைவேறும்.


gemini-single-iconமிதுனம்

இன்று குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடலில் சிறு உபாதைகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்கள் கிட்டும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களால் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


cancer-single-iconகடகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படுவது உத்தமம்.


leo-single-iconசிம்மம்

இன்று இனிய செய்திகள் வந்து இல்லத்தை மகிழ்விக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரத்தில்  எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடும்.


virgo-single-iconகன்னி

இன்று திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி தாமதமின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்ககூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் வியாபார ரீதியாக வெளிமாநில தொடர்பு ஏற்படும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு நண்பர்கள் மூலம் நல்ல செய்திகள் வரும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். தொழிலில் இருந்த எதிரிகளின் தொல்லை குறைந்து முன்னேற்றம் ஏற்படும். பொன் பொருள் வாங்கி மகிழ்வீர்கள்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் அசையா சொத்து வழியில் செலவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பணவரவு அமோகமாக இருக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் இனிய நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும்.


capricorn-single-iconமகரம்

இன்று வேலையில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். பிள்ளைகளின் படிப்பில் மந்த நிலை தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டாகும். பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். உடன் பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்களில் வெற்றி கிட்டும்.


pisces-single-iconமீனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும் என்றாலும் செலவுகளும் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட்டால் தொழில் விருத்திக்காக போட்ட திட்டங்கள் வெற்றியை அளிக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.