Tamil Daily Rasi Palan Today 14th February 2020

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.02.2020

இன்றைய  பஞ்சாங்கம்

14-02-2020, மாசி 02, வெள்ளிக்கிழமை, சஷ்டி மாலை 06.21 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் காலை 07.27 வரை பின்பு சுவாதி பின்இரவு 06.01 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி. லஷ்மி நரசிம்மர்- முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00   

சுக்கி

 

 

ராகு

புதன் சூரிய

திருக்கணித கிரக நிலை

14.02.2020

 

சனி

 

கேது குரு செவ்

 

சந்தி

 

இன்றைய ராசிப்பலன் – 14.02.2020

aries-single-iconமேஷம்

இன்று பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகத்தில் வேலைபளு குறையும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகமாகும். நவீனகரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

taurus-single-iconரிஷபம்

இன்று உத்தியோகஸ்தர்கள் வேலையில் புது உற்சாகத்துடன் செயல்படுவார்கள். பிள்ளைகள் பெற்றோரின் நன்மதிப்பை பெறுவார்கள். பொருளாதாரம் சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினை தீரும். சொத்து சம்பந்தபட்ட வழக்குகளில் வெற்றி வாய்ப்புகள் கிட்டும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும்.


gemini-single-iconமிதுனம்

இன்று நீங்கள் செய்யும் செயல்களில் அதிக கவனம் தேவை. உறவினர்களின் வருகையால் சந்தோஷம் ஏற்பட்டாலும் நிதானத்துடன் பழகுவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.


cancer-single-iconகடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். நண்பர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் மன நிம்மதியை தரும். எதிலும் கவனம் தேவை.


leo-single-iconசிம்மம்

இன்று காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். உங்கள் பிரச்சினைகள் தீர உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். திருமண முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். வருமானம் இரட்டிப்பாகும்.


virgo-single-iconகன்னி

இன்று குடும்பத்தில் பெரியவர்களிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். முன்கோபத்தை குறைப்பது நல்லது.


libra-single-iconதுலாம்

இன்று குடும்பத்தில் பணவரவு தாராளமாக இருக்கும். பிள்ளைகள் வழியாக நல்லது நடக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணத்தால் வெளிவட்டார நட்பு ஏற்படும். உடல்நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிரிகளின் தொல்லைகள் குறையும். பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று தொழில் ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சலும் உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். முன்கோபத்தால் வேலையில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. நண்பர்களால் ஆதாயம் கிட்டும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.


sagittarius-single-iconதனுசு

இன்று குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். புதிய கூட்டாளி சேர்க்கையால் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையோடு செயல்படுவார்கள்.


capricorn-single-iconமகரம்

இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும். புத்திர வழியில் நல்ல செய்தி கிடைக்கும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். சுபகாரியங்கள் கைகூடும். சிலருக்கு மேற்படிப்பிற்காக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.


aquarius-single-iconகும்பம்

இன்று குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். உடன்பிறந்தவர்கள் வழியில் எதிர்பார்த்த உதவி உரிய நேரத்தில் கிட்டும். தொழில் ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கடன்கள் ஓரளவு குறையும்.


pisces-single-iconமீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் செய்யும் வேலைகளில் தடை தாமதங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் நிதானமாக செயல்படுவது உத்தமம். சுப காரிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது.