Tamil Daily Rasi Palan Today 14th January 2021

முனைவர் முருகு பால முருகன்1256

ஆசிரியர் –  இந்த வார ஜோதிடம் (வார இதழ்)

Dip in Astro,B.Com.,B.L.,M.A.astro. Ph.D in Astrology.

Cell: 0091  7200163001. 9383763001


இன்று –  14.01.2021

இன்றைய  பஞ்சாங்கம் 

14-01-2021, தை 01, வியாழக்கிழமை, பிரதமை திதி காலை 09.02 வரை பின்பு வளர்பிறை துதியை. திருவோணம் நட்சத்திரம் பின்இரவு 05.04 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. சந்திர தரிசனம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். உத்தராயண புண்யகாலம் ஆரம்பம். பொங்கல் பண்டிகை. கரி நாள். பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.00 முதல் 11.00 வரை மதியம் 01.00 முதல் 01.30 வரை.

இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00,  மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00,  இரவு 08.00-09.00.

 

செவ்

ராகு

 

 

திருக்கணித கிரக நிலை

14.01.2021

 

புதன் சந்தி குரு சனி

 

சூரிய சுக்கி

கேது

 

 


இன்றைய ராசிப்பலன் – 14.01.2021

aries-single-iconமேஷம்

இன்று குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். பெரிய மனிதர்களின் நட்பு கிட்டும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆலோசனைகள் நற்பலனை தரும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

 

taurus-single-iconரிஷபம்

இன்று உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும்.


gemini-single-iconமிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிறு சிறு மனக்குழப்பங்கள் உண்டாகும். உடல் நிலை மந்தமாக இருக்கும். வேலைபளு அதிகரிக்கும். குடும்பத்தில் சுபகாரிய முயற்சிகளை செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களின் விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம்.


cancer-single-iconகடகம்

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியான புதிய திட்டங்கள் வெற்றியை தரும். புதிய பொருட்கள் வாங்குவீர்கள். கடன்கள் குறையும்.


leo-single-iconசிம்மம்

இன்று வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஓத்துழைப்பு இருக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சேமிப்பு உயரும்.


virgo-single-iconகன்னி

இன்று பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களுடன் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். நண்பர்களின் உதவி கிட்டும்.


libra-single-iconதுலாம்

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மனசங்கடங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது. உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.


scorpio-single-iconவிருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். திருமண பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். பொன் பொருள் சேரும்.


sagittarius-single-iconதனுசு

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். உங்களின் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுப செய்திகள் வந்து சேரும்.


capricorn-single-iconமகரம்

இன்று உங்களுக்கு தனவரவு அமோகமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமை ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். நண்பர்களின் உதவியால் குடும்பத்தில் இருந்த பிரச்சினை தீரும். சுபகாரியங்கள் கைகூடும்.


aquarius-single-iconகும்பம்

இன்று நீங்கள் செய்யும் சிறு செயல்கள் கூட தாமதமாக முடியக்கூடும். பிள்ளைகளால் மன சங்கடங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும். கூட்டாளிகளின் ஆலோசனைகளால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


pisces-single-iconமீனம்

இன்று குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் உண்டாகும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும்.